கடைசிகாலச் சம்பவங்கள்
உள்நோக்கம் செயல்களுக்கான குணத்தை அளிக்கும்.
நியாயத்தீர்ப்பு நாளிலே சிலர் கண்டிப்பாக சலுகையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு, தங்களது நற்கிரியைகளை ஒரு காரணமாகக் காட்டி இரக்கத்திற்காகக் கெஞ்சுவார்கள். அவர்கள்: “வாலிபர்களுக்குத் தொழிலை அமைத்துக் கொடுத்தேன்; மருத்துவ மனைகளை உருவாக்க நிதி உதவி அளித்தேன்; விதவைகளின் தேவைகளை விசாரித்து ஏழை ஜனங்களை என் வீட்டிலே சேர்த்துக் கொண்டேன்” என்பார்கள். ஆம், அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள் என்றாலும், உங்களுடைய உள்நோக்கங்களெல்லாம் சுயநலத்தால் மிகவும் கறைபடுத்தப்பட்டிருந்ததால், உங்கள் கிரியைகள் கர்த்தரின் பார்வையில் அங்கீகரிக்கப்படவில்லை. நீங்கள் செய்தவை எல்லாவற்றிலும், சுயம் முதன்மை வாய்ந்ததாக அனைவரும் பார்ககும்படி கொண்டுவரப்பட்டிருந்தது. - Ms 53, 1906. கச 159.2
நமது செயல்களின்மீது அவமானம் அல்லது உயர்வான சன்மார்கக மதிப்பு ஆகிய குணத்தின் தன்மையை முத்திரையாகப் பதிப்பது உள்ளத்தின் நோக்கமே ஆகும். — DA 615, (1898). கச 159.3