கடைசிகாலச் சம்பவங்கள்
ஒருவரை ஒருவர் நேசியுங்கள்
கிறிஸ்தவம் என்பதே ஒருவருக்கொருவர் மிகவும் மென்மையான அன்புணர்வை வெளிப்படுத்துவதாகும்… கிறிஸ்துவானவர் தாம் உண்டாக்கின சிருஷ்டிகளிடமிருந்து, எல்லாவற்றிற்கும் மேலான அன்பைப் பெற்றுக்கொள்ளவேண்டியவராய் இருக்கின்றார். மனிதன் தனது சக மனிதர்களுக்காகக்கூட, ஒரு புனிதமான மதிப்பை நினைவில் வைத்துக்பேணவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார். தேவனிடத்திலிருந்து பிறக்கின்ற அன்பினாலேயே, இரட்சிக்கப்படுகின்ற ஒவ்வொரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படும். மெய்யான மனமாற்றம் என்பது சுயநலத்திலிருந்து விடுபட்டு, தேவனிடமும் ஒருவரோடொருவரிடமும் பரிசுத்தமாக்கப்பட்ட அன்புணர்வைக் காட்டுவதற்கான ஒரு மாற்றமே ஆகும். -1SM 114, 115 (1901). கச 138.4
அன்பும், தூய்மையும் தேவன் மிகவும் உயர்வாக மதிக்கின்ற குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகும். இந்தக் குறிப்பிடத்தக்க பண்புகள் ஒவ்வொரு கிறிஸ்தவனாலும் போற்றி வளர்க்கப்படவேண்டும். — 5T 85 (1882). கச 139.1
நேசிக்கிற நேசிக்கப்படுவதற்கேதுவான கிறிஸ்தவனே, சுவிசேஷத்திற்கு ஆதரவாகப் பேசப்படுகின்ற மிக வலிமையான வாதம் ஆகும். — MH 470 (1905). கச 139.2