கடைசிகாலச் சம்பவங்கள்
பூமியதிர்ச்சிகளும் வெள்ளங்களும்
சத்துருவானவன் முன்பு கிரியை செய்திருந்தான். இப்பொழுது இன்னும் கிரியை செய்துகொண்டு இருக்கின்றான். அவன் மாபெரும் வல்லமையுடன் கீழிறங்கியிருக்கின்றான். தேவனுடைய ஆவியானவரும் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார். தேவனும் தமது கரத்தை பின்னிழுத்துக் கொண்டுவிட்டார். ஜான்ஸ் டவுன் (பென்ஸில்வேனியா) என்ற பட்டணத்தை மாத்திரம் நாம் பார்க்கவேன்டியதாய் இருக்கின்றது. பிசாசானவன் இம்முழு பட்டணத்தையும் இல்லாமல் போகுமளவுக்கு அழிப்பதிலிருந்து, தேவன் அவனைத் தடைசெய்யவில்லை. 1 இந்த உலகத்தினுடைய சரித்திரத்தின் கடைசி வரையிலும், இதே போன்ற காரியங்கள் அதிகமாகப் பெருகும். - 1 S AT 109 (1889). கச 17.4
பூமியின் உட்பகுதிகளில் மறைந்திருக்கின்ற மூலப்பொருள்கள் வெடித்துச் சிதறினால், பூமியின் மேற்பரப்பு பிளவுண்டு போகும். ஒரு முறை இந்த மூலப்பொருள்கள் கட்டவிழ்க்கப்பட்டதேயானால், தங்களுக்குக் கீழாக பணியாற்றினவர்களுக்குக் குறைச்சலுண்டாகக் கூலிகொடுத்து, அதன் மூலம் பெரிய உடைமைகளைத் தக்கவைத்து, ஆண்டுகளாக தங்களுக்கு செல்வத்தைக் குவித்தோருடைய பொக்கிஷங்களையெல்லாம் அவை அழித்துப்போட்டுவிடும். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிருப்பதால், ஆவிக்குரிய உலகமும்கூட, பயங்கரமாக அசைக்கப்படவேண்டியதாக இருக்கின்றது. - 3MR 208 (1891). கச 17.5
இந்த ஒரு நொடிப்பொழுது, நாம் திடமான பூமியின்மீது இருக்கலாம். ஆயினும் அடுத்த நொடிப்பொழுது, நமது பாதங்களின்கீழ் இருக்கின்ற பூமி நிலைமாறிப் போய்விடும் என்பது போன்ற நேரம் இப்பொழுது வந்திருக்கின்றது. எதிர்பாராத நேரங்களில் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும். - TM 421 (1896). கச 18.1
தீ விபத்துகள், வெள்ளங்கள், பூமியதிர்ச்சிகள், மகா ஆழத்தின் உக்கிர கொந்த்ளிப்பு, கடல் மற்றும் நிலத்தில் உண்டாகும் பேரழிவுகள் ஆகியவைகளின் மூலமாக, தேவனுடைய ஆவி என்றைக்கும் மனுஷரோடே போராடுவதில்லை என்ற எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. - 3MR 315 (1897). கச 18.2
மனுஷகுமாரன் வானத்து மேகங்களில் தோன்றும் முன்னதாக, இயற்கை உலகிலுள்ள அனைத்தும் அசைக்கப்படும். வானத்திலிருந்து வரக்கூடிய மின்னலுடன் பூமியின் அக்கினியும் இணைந்து, மலைகளைச் சூளையைப்போல எரியச் செய்து, அவைகளது எரிமலைக் குழம்பின் வெள்ளங்களை, கிராமங்கள் மற்றும் பட்டணங்களின்மீது ஊற்றிவிடும். பூமிக்குள் மறைந்திருக்கின்ற பொருட்கள், திடீர் எழுச்சியடைவதால் உருக்கி வார்க்கப்பட்ட பெரும்பாறைகள் நீருக்குள் வீசியெறியப்படும். அதன் காரணமாக நீர் கொந்தளித்து, பாறைகளையும் மண்ணையும் வெளியே அனுப்பும். மகா பயங்கரமான பூமியதிர்ச்சிகளும், மனித உயிர்களுக்கு மாபெரும் அழிவும் உண்டாகும். - 7BC 946 (1907). கச 18.3