கடைசிகாலச் சம்பவங்கள்
தேவனுக்கு உண்மையானவர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள்
அசைக்கப்படுகின்ற சோதனையின் நேரத்திலே, கர்த்தருக்கென்று இருக்கக்கூடிய உண்மையான ஊழியக்காரர்கள் காணக்கூடிய விதத்தில் வெளிப்படுத்தப்படுவர். பாகாலுக்குத் தங்கள் முழங்காலை முடக்காத விலையேறப்பெற்ற அநேகர், இப்பொழுது மறைக்கப்பட்டிருக்கின்றனர். உங்கள்மீது பிரகாசித்ததான, வீரியம் மிகுந்த ஜூவாலையாக பிகாசிக்கின்ற ஒரு ஒளியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் ஒரு கடுமையான, கவர்ச்சியற்ற வெளிப்புறச் சூழ்நிலையின்கீழாக, உண்மையான ஒரு கிறிஸ்தவ குணத்தின் சுத்தப்பிரகாசமானது வெளிப்படுத்தப்படும். பகல் நேரத்திலே வானத்தை நாம் பார்க்கின்றோம். ஆனால், அங்கிருக்கின்ற நட்சத்திரங்களை நாம் பார்க்க முடிவதில்லை. அவைகள் அங்கேதான் ஆகாயமண்டலத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் கண்களால் அவைகளை அடையாளம் காண முடிவதில்லை. இரவிலேதான் அவைகளின் மெய்யான பளபளப்பை நாம் காண்கின்றோம். — 5T 80, 81 (1882). கச 131.3
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபத்திரவம் நேரிடும்போது, சாட்சிகளாயிருப்பவர்கள் கிறிஸ்துவிற்காகவோ அல்லது அவருக்கு எதிராகவோ நிற்கத் தீர்மானம் எடுக்கின்றார்கள். தவறான விதத்தில் பழி சுமத்தப்பட்ட மனிதர்மேல் அனுதாபம் காட்டுகிறவர்களும், அவர்களுக்கு விரோதமாகக் கசப்புணர்ச்சி இல்லாதவர்களும், கிறிஸ்துவிற்காகத் தங்களது அன்பைக் காண்பிக்கின்றார்கள். ST Feb. 20, 1901. கச 131.4
எதிர்ப்புகள் எழும்பட்டும்; மீண்டும் மதவெறியும் சகிக்க இயலாமையும் ஆட்சி செய்யட்டும்; உபத்திரவம் தூண்டப்படட்டும்; அப்போது அரை மனமுள்ளவர்களும் மாய்மாலக்காரர்களும் தடுமாற்ற மடைந்து தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், உண்மையான கிறிஸ்தவனோ ஒரு கற்பாறையைப்போல, செழிப்பான காலங்களில் இருந்ததைப்பார்க்கிலும், இப்போது தனது பிரகாசமான நம்பிக்கையுடனும் தனது பலமான விசுவாசத்துடனும் உறுதியாக நிற்பான். — GC 602 (1911). கச 131.5