கடைசிகாலச் சம்பவங்கள்

186/334

கள்ள உபதேசங்கள் சிலரை வெளியே கொண்டுசெல்லும்

மதம் மற்றும் அறிவியல் என்று அழைக்கப்படும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைக்கப்படும். ஏனெனில், வரையறைக்குட்பட்ட மனிதர் தேவனுடைய மகத்துவத்தையும், வல்லமையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்” (அப். 20:30) எங்கின்ற பரிசுத்த எழுத்துக்கள் எனக்கு வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டது. தேவனுடைய ஜனங்களின் மத்தியில் இந்த காரியம் நிச்சயமாகக் காணப்படும். — Ev 593 (1890). கச 128.2

தவறான உபதேசங்களின் அறிமுகத்தினால் அசைக்கப்படுதல் ஏற்படும்போது, சத்தியத்தை மேலோட்டமாய் படித்திருந்தவர்கள், எங்குமே நங்கூரம் இடாமல் நிலையற்றிருக்கின்ற மணலைப்போல் இருப்பார்கள். தங்களது கசப்பான உணர்வுகளின் போக்கிற்கேற்ப, ஏதாவதொரு பக்கத்தில் அவர்கள் சாய்ந்துவிடுவார்கள். — TM 112 (1897). கச 128.3

சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் பெற்றிராதபடியால், சத்துருவின் வஞ்சகங்களிலே அகப்படுவார்கள் அவர்கள் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். — 6T 401 (1900). கச 128.4

பொய்யான கோட்பாடுகளையும் சத்துரு கொண்டுவருவான். ஆசரிப்புக்கூடாரம் போன்ற உபதேசமென்பது கிடையாது என்றும் கூறுவான் இந்த ஒரு கருத்தினால், விசுவாசத்திலிருந்து வழுவிப்போகும் ஒரு நிலை ஏற்படும். — Ev 224 (1905). கச 128.5