கடைசிகாலச் சம்பவங்கள்

180/334

12. அசைக்கப்படுதல்

சபை உறுப்பினராயிருப்பது இரட்சிப்பின் உத்தரவாதமல்ல

சபைப் பதிவேடுகளில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்கின்ற இருபதுபேரில் ஒருவர்கூட, தங்களது பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்க ஆயத்தமாக இல்லை. மெய்யாகவே அவர்கள் தேவனில்லாமலும், இவ்வுலகிலே சாதாரண பாவியைப்போல நம்பிக்கையில்லாமலும் இருக்கின்றார்கள் என்பதே சபைக்கு நான் கொடுக்கின்ற பக்திவிநயமான ஒரு செய்தியாகும். — ChS41 (1893). கச 125.1

சத்தியத்தைக் கேட்கவும் ஏற்றுக்கொள்ளவும் நல்ல சந்தர்ப்பங்களைப் பெற்று, ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் சபையுடன் தங்களை இணைத்துக் கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதாகத் தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், பெயரளவிலுள்ள மற்ற சாதாரண சபைகளைவிட, இன்னும் அதிக பெலனைப் பெற்றிராதவர்களாகவும், தேவனிடம் கற்பனைகளை எதிர்க்கின்ற மற்ற சபைகள் தேவனுடைய வாதைகளைப் பெற்றுக்கொள்ளப்போவது போலவே மெய்யாகவே இவர்களும் பெற்றுக்கொள்வார்கள். — 19MR 176 (1898). கச 125.2