மகா சர்ச்சை

8/43

அத்தியாயம் 6 - மறுரூபமடைதல்

இயேசுவின் மறுரூபமடைதலின் அனுபவத்தின் மூலமாக, சீடர்களின் விசுவாசம் மிகவும் திடப்பட்டதை நான் கண்டேன் இயேசுதான் வாக்குத்தத்தம் செய்யப் பட்ட மேசியா என்பதற்கு திடமான சாட்சியை அளிக்க தேவன் சித்தம் கொண்டார். இதனிமித்தம். மானிடர் தங்களது துயரங்களின் மத்தியிலும் ஏமாற்றங்களின் நடுவிலும் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் துறந்து விட அவசியமில்லை. இயேசு மறுரூபமான போது மோசேயும் எலியாவும் அவரோடே பேசும்படியாக பிதாவானவர் அனுப்பி வைத்தார். இப்பணியை செய்வதற்காக தமது தூதர்களை அனுப்பாமல், கர்த்தர், இவ்வுலகின் பாடுகளை ருசித்திருந்த இருவரை தெரிந்து கொண்டார். அவ்வேளையில், இயேசுவின் மிக நெருக்கமான சீடர்கள் மாத்திரமே இந்த மகிமையின் காட்சியை காண அனுமதிக்கப்பட்டார்கள். GCt 14.1

எலியா தேவனோடு நடந்தவர். அவருடைய ஊழியம் மனரம்மியமானதாக இருக்கவில்லை. அவர் மூலமாக, தேவன், பாவத்தை கண்டித்தார். தேவ தீர்க்கத்தரிசியான இவர். தனது ஜீவனை காத்துக்கொள்ளும்படி இடம் மாறிக்கொண்டே இருந்தார். GCt 14.2

காட்டு விலங்கைப் போல வேட்டையாடப் பட்ட இவரை தேவன் மறுரூபமாக்கி, பரத்திற்கு எடுத்துக்கொண்டார். GCt 14.3

மோசே தேவனால் கணப்படுத்தப்பட்டவன். அவருக்கு முன்பாக வாழ்ந்த எவரும் அவரைப் போல இருந்ததில்லை. ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதை போல, தேவனோடு முகமுகமாய் பேசிய வாய்ப்பை மோசே பெற்றிருந்தார். பரம பிதாவை மறைத்திருந்த பிரகாசமான வெளிச்சத்தையும், உன்னத மகிமையையும் கண்டிருந்தார். இஸ்வரவேலருக்கு மத்தியஸ்தராக இருந்து, அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவன் அவரை உபயோகப்படுத்தினார். இஸ்ரவேலர்களின் அவிசுவாசம், முறுமுறுத்தல், பாவங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தேவனின் கோபம் மூண்டபோது, மோசே இஸ்ரவேலர்கள் மீது வைத்திருந்த அன்பு - சோதிக்கப்பட்டது. இஸ்ரவேலர்களை அழித்துப்போடுவதற்காக, மோசே, அவர்களை ஒப்புக்கொடுத்தால், அவரை பெரிய ஜாதியாக்குவதாக தேவன் வாக்குத்தத்தம் கொடுத்த நிலையிலும் அவர்களுக்காக தேவனிடத்தில் ஊக்கத்துடன் வேண்டிக்கொண்டான். தேவனின் கடுங்கோபத்தை திசை திருப்பி, இஸ்ரவேலரின் பாவங்களை மன்னிக்கும்படி வின்னப்பித்த மோசே, அப்படி அவர்களை மன்னியாத பட்சத்தில், தனது பெயரை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கி போடும்படி வேண்டினான். GCt 14.4

தண்ணீர் கிடைக்காத, சூழ்நிலையில், இஸ்ரவேலர்கள், தேவனுக்கும் மேசேக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். கர்த்தர் அவர்கள் முறுமுறுப்பை கேட்டு, மோசேயை போய் கன்மலையை அடித்து, அதிலிருந்து புறப்படுகின்ற தண்ணீரை ஜனங்கள் குடிக்கும்படி உத்தரவிட்டார். மோசேயோ எரிச்சலில் கன்மலையை அடித்தார். இச்செய்கையின் மூலமாக தேவனுக்கு கிடைக்கவேண்டிய மேன்மையை, மோசே, தனக்கே எடுத்துக் கொண்டான். இதினிமித்தமாக தேவன் விசனமடைந்து, வாக்குத்தம் பண்ண பட்டிருந்த தேசத்தினுள் மோசே பிரவேசிக்கக்கூடாது என கட்டளையிட்டார். GCt 14.5

மோசே மலையிலிருந்து இறங்கியபோது, சாட்சிப் பலகைகள் இரண்டும் அவன் கையிலிருந்தது. அப்பொழுது அவன் இஸ்ரவேலர்கள் பொற்கன்றுக் குட்டியை தொழுதுக் கொண்டிருந்ததை கண்டு, கடுங்கோபங்கொண்டு, கையிலிருந்த இரண்டு சாட்சிப் பலகைகளையும் மலை அடியிலே எறிந்து உடைத்துப் போட்டான். இதனால் மோசே ஒரு பாவமும் செய்யவில்லை என்று நான் கண்டேன், தேவனுக்காக அவன் கோபங்கொண்டான் ஆகிலும், இதயத்தின் இயற்கையான உணர்வுகளுக்கு இடம் கொடுத்தபடியால், தேவனுக்கு கிட்டவேண்டிய மகிமையை, தான் பெற்றகொண்டான் என்று ஆயிற்று, ஆகையால், வாக்குத்தத்தம் செய்யப்பட தேசத்தினுள் அவன் நுழைய இயலாமல் போனது. GCt 15.1

மோசே தேவனை விசன படுத்தியது சாத்தானுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படியே, தேவகுமாரனையும் தான் வீழ்த்தப்போவதாக தனது தூதர்களிடம் சூளுரைத்துக் கொண்டிருந்தான். இந்த மீறுதலினால் மோசே, சாத்தானின் வல்லமைக்கு கீழே வந்தான். மோசே மரணத்தின் வழியாக கடந்து போனதை நான் கண்டேன். ஆகிலும், கலங்கமடைவதற்கு முன்பே மீகாவேல் அவனுக்கு உயிரைக் கொடுத்தார். மோசேயின் சரீரம் தனக்கே சொந்தம் என்று சாத்தான் எண்ணினான். மீகாவேலோ மோசேயை உயிரடையச் செய்து பரத்திற்கு எடுத்துச் சென்றார். ஏமாற்றமடைந்த சாத்தான், தேவனிடத்தில் மோசேயின் சரீரம் தன்னுடையது என வாதாடினான். இயேசுவோ, சாத்தானை நிந்தியாமல், அவனை தன் பிதாவிடம் திருப்பி, “கர்த்தர் நீதியை நடப்பிக்கட்டும்” என்று கூறினார். GCt 15.2

“இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிப்பார்ப்பதில்லை, என்று இயேசு தமது சீடர்களிடம் சொன்னார். அவருடைய மறுரூபமடையும் சம்பவத்தில் இத்தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது. இயேசுவின் முகத்தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டு, சூரியனைப் போல பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் வெண்மையாகவும் பிரகாசமாகவும் இருந்தது. இயேசுவின் இரண்டாம் வருகையின் போது மரணத்திலிருந்து எழுப்பப்பட இருப்பவர்களின் பிரதிநிதியாக மோசே வந்திருந்தான். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, மரணத்தைக் காணாமல் சாவாமையைப் பெற்றுக்கொள்ள இருப்பவர்களின் பிரதிநிதியாக எலியாவும் வந்திருந்தான். இயேசுவின் மாட்சிமையை சீடர்கள் பிரமிப்போடும், அச்சத்தோடும் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், தேவன், தமது கம்பீரச் சத்தத்தில், “இவர் என்னுடைய நேசக்குமாரன், இவருக்கு செவிக்கொடுங்கள்” என்று சொன்னார் GCt 15.3

பார்க்க : யாத்திராகமம் 32
எண்ணாகமம் 20:7-12
உபாகமம் 34:5
ஐஐ இராஜாக்கள் 2:11
மாற்கு 9:1-13
யூதா 9