மகா சர்ச்சை
அத்தியாயம் 4 - கிறிஸ்துவின் முதல் வருகை
இதற்கு பின், இயேசு மனித சாயலை ஏற்று, மனிதனாக தம்மை தாழ்த்தி, பிசாசின் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை நான் கண்டேன். GCt 7.2
அவருடைய பிறப்பு எவ்வித உலக ஆடம்பரங்களும் இல்லாதிருந்தது. ஒரு மாட்டுத் தொழுவத்தில் புல்லனையில் பொதியப்பட்டவராக அவர் பிறந்தார். இருப்பினும் மற்ற எந்த பிறப்பும் பெற்றிராத கீர்த்தியை இப்பிறப்பு பெற்றது. மேய்ப்பர்களுக்கு தேவதூதர்களே இந்நற்செய்தியை கொடுத்தார்கள். இச்சம்பவத்தை பரலோகின் ஒளியும், மகிமையும் கௌரவித்தன. பரமசேனை தங்கள் கின்னரங்களினால் பரம பிதாவை வாழ்த்தினார்கள். தேவன் தமது குமாரனின் முடிவை பெருமிதத்துடன் கவனித்தார். தூதர்கள் அவரை பணிந்து சேவித்தார்கள். GCt 7.3
இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது தேவதூதர்கள் சூழ்ந்திருக்க, பரிசுத்த ஆவியானவர் புறாவின் தோற்றத்தில் வந்திறங்க, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்”, என்ற பரம பிதாவின் சத்தம் வானத்தில் உண்டாயிற்று. GCt 8.1
யோர்தானில் ஞானஸ்தானம் கொடுத்த யோவானிற்கு தான் சந்தித்தது இவ்வுலகின் இரட்சகர் என்று உறுதியாக தெரிந்திருக்கவில்லை. தேவன் கொடுத்திருந்த அடையாளத்தின் படியே ஆவியானவர் புறாவின் வடிவிலே வந்திறங்கினதை கண்டவுடன், உரத்த தொனியில், “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” என சாட்சியளித்தார். GCt 8.2
யோவான், மேசியாவின் வருகையை குறித்தும், அவர் ஆற்ற இருக்கும் மகா ஊழியங்களை குறித்தும், தனது சீடர்களுக்கு கற்று தந்தார். தனது நாட்கள் முடியும் காலம் வந்துவிட்டபடியால், அவர்கள் அனைவரும் தனக்கு பின் வருகிறவரை பின்பற்றும் படி வினவினார். யோவான் தனித்திருந்து, எளிய வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டே தனது ஊழியத்தை செய்து வந்தார். இயேசுவின் முதல் வருகையை அறிவித்தவர் என்ற பெயரை யோவான் பெற்றிருந்தும், கடைசி நாட்களில், இயேசுவோடு சேர்ந்து ஊழியத்தில் பங்குபெறும் வாய்ப்பு அவருக்கு கிட்டாது போனது. இருப்பினும், கோடரியை மரங்களின் வேர் அருகே வைத்தவர் யோவான். திரளான ஜனங்கள், தங்கள் வேலைகளை விட்டு, வனாந்தரத்தில் பிரசங்கித்து கொண்டிருந்த யோவானின் செய்தியை கேட்க வாஞ்சையோடு வந்தார்கள். முடிவைப் பற்றி கவலை கொள்ளாமல், பாவத்தை கண்டித்தார். தேவ ஆட்டுக்குட்டியின் வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணினார். GCt 8.3
யோவானின் தெளிவான செய்திகளை ஏரோது கவனித்த படியால், பெரிதும் பாதிக்கப்பட்டான். அவன், யோவானின் சீடனாக விரும்பினான். இந்நிலையில், உயிரோடிருக்கும் தனதுசகோதரனின் மனைவியை, ஏரோது மணம் முடிக்க விரும்பியதை யோவான் அறிந்து, அதனை கண்டித்தார். ஆகிலும், அந்த பெண்ணையே விவாகம் பண்ணிய ஏரோது, அவளின் செல்வாக்கினால் யோவானை சிறையில் அடைத்தான். சிறையிலிருந்த நாட்களில், தனது சீடர்களின் மூலமாக, இயேசுவின் வல்லமையான ஊழியங்களைக் குறித்து அறிந்து, தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். விரைவிலேயே, மனைவியின் வசீகரத்தினால் ஏரோது, யோவானை சிரைச்சேதம் பண்ணி கொலை செய்தான். ஆகிலும், இயேசுவை பின்பற்றி, அவருடைய ஆறுதலான வார்த்தைகளை கேட்டு, அவரை விசுவாசிக்கிறவன், யோவான் ஸ்நானகனிலும் உயர்ந்தவன் என்று நான் கண்டேன். GCt 8.4
எலியாவின் ஆவியோடும், வல்லமையோடும். யோவான் இயேசுவின் முதல் வருகையைக் குறித்துப் பிரசங்கித்தது போல, கடைசி நாட்களில் வாழ்கின்ற யாவரும் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்த சத்தியத்தை எடுத்துரைக்க புறப்பட வேண்டியதின் அவசியத்தை நான் கண்டேன். GCt 8.5
ஞானஸ்நானத்திற்கு பின் இயேசு, பிசாசினால் சோதிக்கப்படும்படியாக, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். தீவிரமான இச்சோதனைகளை எதிர்கொள்ளும்படி, தூய ஆவியானவர், இயேசுவை, ஆயத்தப்படுத்தி இருந்தார். நாற்பது நாட்களாக பிசாசினால் சோதிக்கப்பட்டவர். அந்நாட்களிலே ஒன்றும் புசியாதிருந்தார். சூழ்நிலைகள் அனைத்தும் மனித பெலத்தில் இருக்கும் எவரும் மடிந்து விடக்கூடிய நிலையில் தான் இருந்தது. பிசாசோடும், காட்டு விலங்குகளோடும். இயேசு தனித்திருந்தார். அவர் உபவாசித்து இருந்தபடியால், தேவகுமாரன் மிகவும் சோர்ந்து, இளைத்துப் போயிருந்ததை கண்டேன். அனாலும், அவருக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த பொறுப்புகளை அவர் சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை இருந்தது. GCt 9.1
மனிதனாக தம்மை தாழ்த்தியபடியால், இயேசுவை எளிதில் வீழ்த்தி விடலாம் என எண்ணி, சாத்தான் மகிழ்ந்தான். இதினிமித்தமாக, அநேக சோதனைகளை அவர் மீது தொடுத்தான். அவன் இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்குளாகும்படி சொல்லும்” என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்த்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் எனறு எழுதியிருக்கிறதே” என்று கூறினார். GCt 9.2
இயேசு, தேவகுமாரனாக இருப்பதை குறித்து ஒரு தர்க்கதை எழுப்ப சாத்தான் விரும்பினான். இயேசுவின் பலவினமான தோற்றத்தை காண்பித்து, அவரைக் காட்டிலும் தான் பலவான் என்று பெருமைப்படுக்கொண்டான். ஆகிலும், இந்த இன்னல்கள் அனைத்திலும் தனது பரமபிதா அறிவித்த செய்தி இயேசுவை பெலப்படுத்தியது. சாத்தானுக்கு, அவனுடைய பலவீனங்களையும், இயேசுதான் உலகின் இரட்சகர் என்கிற உண்மையையும், சொல்லத் தேவைப்பட்டதாக இயேசு ஒருபோதும் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை, என்று நான் கண்டேன். இயேசுவின் அதிகாரத்திற்கு அவன் கீழ்ப்படியாததே, அவனை புரலோகத்திலிருந்து வெளியேற்றியது. GCt 9.3
அவனுடைய பலத்தை நிரூபிப்பதற்காக, சாத்தான், இயேசுவை எருசலேம் தேவாலயத்தின் கோபுரத்தின் மேல் கொண்டு நிறுத்தினான். அங்கே, மீண்டும் அவரைச் சோதிக்கும்படி, “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது” என்று கூறினான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறது” என்றார். மீட்பின் திட்டம் தோற்று விட வேண்டும் என சாத்தான் வாஞ்சித்தான். ஆனால் அத்திட்டம் மிக ஆழமாக போடப்பட்டிருப் பதையும், அதனை சாத்தானால் கெடுக்க இயலாது என்பதையும் நான் கண்டேன். GCt 9.4
சோதிக்கப்படுகின்ற கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவே உகந்த உதாரணம் என நான் கண்டேன். சோதனைகளை பொருமையோடு கையாளவேண்டும். தேவன், தாமே, மகிமையடையக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர வேறு எதற்கும் நாம் தேவனை அழைத்து, அற்புதங்களை நிகழ்த்த வைப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை, இயேசு, ஒருவேளை தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக் குதித்திருந்தால், அஃது பரம தகப்பனுக்கு கணமாகாது. ஏனெனில், சாத்தானையும் தூதர்களையும் தவிர வேறு எவரும் இக்காட்சியை காணவில்லை. தேவ வல்லமையை பிசாசிடம் காட்டுவது கர்த்தரையே சோதித்ததாகும். மேற்கொள்ளப்பட வேண்டிய நபரிடம், இயேசு, தம்மை தாழ்த்திக் கொண்டதை போலாகிவிடுமல்லவா? GCt 10.1
“மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல இராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து : நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு, அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். GCt 10.2
இங்கு சாத்தான், இயேசுவிற்கு உலக ராஜ்யங்களை காட்டினான், அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமாக காட்டப்பட்டது. தன்னை பணிந்துகொண்டால் அவையெல்லாம் இயேசுவிற்கு கொடுப்பதாக ஆசை காட்டினான். இரட்சிப்பின் திட்டம் நிறைவேறினால், தனது வல்லமை பறிக்கப்பட்டுவிடும் என்று சாத்தான் அறிந்திருந்தான். மனிதனை மீட்பதற்காக இயேசு மரித்தால், அவனது சக்தி முடிந்துவிடும் என்றும், அவனும் அழிந்துபோவான் என்றும் சாத்தான் நன்றாக அறிந்திருந்தான். ஆகைய்hல் கூடிமட்டும் மீட்பிக் திட்டத்தை தடுத்துவிட திட்டம் போட்டான். மனிதனின் மீட்டு திட்டம் தோல்வியடையும் என்றும். அப்படி நடந்தால், பரலோக தேவனுக்குஎதிராக ஆளுகை செய்யப் போவதாக பெருமிதம் கொண்டான். GCt 10.3
இயேசு, பரத்திலேயே தனது மகிமையையும், வல்லமையையும் விட்டுவிட்டு வெளியேறியபோது சாத்தான் பேரானந்தம் அடைந்தான். தேவகுமாரன் தனது வல்லமைக்குள் ஒப்படைக்கப்பட்டதாக நினைத்தான். ஏதேனில் தம்பதியினரை வஞ்சித்தது போல, தேவகுமாரனையும் வீழ்த்திவிடலாம் சாத்தான் நினைத்தான். பரமபிதாவின் சித்தத்திற்கு விரோதமாக இயேசுவை செயல்பட வைத்துவிட்டால், தனது கொடிய திட்டம் நிறைவேறிவிடும் என கனவு கண்டான். ஆனால் இயேசுவோ, “அப்பாலே போ சாத்தானே” என்று கடிந்து கொண்டார். அவர் தமது பரம தகப்பனை மட்டுமே பணிந்துகொள்வார். தமது ஜீவனைக் கொண்டு, சாத்தானின் பிழயை தகர்த்தெறியும் காலம் நெருங்கி வருவதை இயேசு உணர்ந்தார். இவ்வுலக ராஜ்யங்கள் அனைத்தும் தன்னுடையது என்றும், அவனை பணிந்துகொண்டால், அவருடைய சிரமங்களிலிருந்து விடுபெறலாம் என்றும் இயேசுவை சோதித்தான். இயேசு மிக உறுதியாக இருந்தார். பாடுகள் நிறைந்த ஜீவனை தெரிந்துகொண்டு, மரணபரியந்தமும் தம்மை தாழ்த்தி போராட்டத்தை எதிர்கொள்ள அவர் ஆயத்தமாய் இருந்தார். உலக ராஜ்யங்கள் அனைத்தையும் சாத்தானிடமிருந்து மீட்டு, தமது பிதாவின் கரத்தில் கொடுக்கவேண்டும் என்று அவர் ஆசித்தார். சாத்தானையும் பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுத்து, நித்திய மரணத்தினால் அவனை அழித்து அதினிமித்தமாக இயேசுவும், மகிமையின் பரிசுத்தவான்களும் நிம்மதியாக இருக்க முடியும். GCt 10.4
பார்க்க : உபாகமம் 6 : 16, 8 : 3;
ஐஐ இராஜாக்கள் : 17 : 35-36;
சங்கீதம் 91 : 11-12;
லூக்கா 2-4 அதிகாரங்கள்