மகா சர்ச்சை
அத்தியாயம் 1 - சாத்தானின் வீழ்ச்சி
இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்த படியாக சாத்தான், ஒரு காலத்தில், பரலோகத்தில் கீர்த்தி பெற்ற தூதனாக விளம்பினான் என்பதை தேவன் எனக்கு காட்டினார். அவனுடைய முகக்குறி சாந்தமும், பிற தூதர்களைப் போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத் துகிறதுமாயிருந்தது. அவன் நெற்றி உயர்ந்து, அகன்றிருந்தது. அஃது அவனது அறிவு நுட்பத்தை காட்டியது. அவனது சாயல் பூரணமாக இருந்தது. தேவன் அவரது குமாரனை நோக்கி, “நமது சாயலில் மனிதனை உண்டாக்குவோம்” என்று கூறியபோது, சாத்தான், இயேசுவின் மீது பொறாமை கொண்டான். மனிதனின் படைப்பில் தானும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினான். அவனது உள்ளம் பொறாமை மற்றும் வெறுப்பினால் நிறைந்திருந்தது. தேவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் தான் இருந்து, மிக உயர்வான கீர்த்தியை தானே அடையவேண்டும் என விரும்பினான். இக்காலம் வரை, பரலோகத்தில், அனைத்துமே ஒழுங்காகவும், ஒற்றுமையாகவும், தேவனின் அரசாட்சிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்ததாகவும் இருந்தது GCt 1.1
தேவ சித்தத்திற்கும், கட்டளைகளுக்கும் விரோதமாக எழும்புவது மகா பாவமாகும். பரலோகமே குழப்பத்தில் இருந்தது. தேவதூதர்கள் சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். தன்னையே உயர்த்தும் வாஞ்சையில், இயேசுவின் அதிகாரத்திற்கு பணிய விருப்பமில்லாமல், தேவனின் ஆட்சிக்கு மறைமுகமான எதிர்ப்பை சாத்தான் வளர்த்து வந்தான். சில தூதர்கள் சாத்தானின் எதிர்ப்புக்கு பரலோக தூதர்களின் இடையே வாதம் உண்டானது. சாத்தானும், அவனை சார்ந்த தூதர்களும், இயேசுவின் உன்னதத்தை எதிர்த்து, தேவன் இத்தீர்மானத்தை நிறைவேற்றியதின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அறியும்படி தேவனின் ஞானத்தை அளக்க ஆரம்பித்தனர். தேவ குமாரனின் அதிகாரத்தை எதிர்த்ததினால், இத்தூதர்கள் அனைவரும் பரம பிதாவின் முன்பாக அழைத்துவரப்பட்டார்கள். அச்சமயத்திலே, சாத்தானும் அவனைச் சார்ந்த தூதர்களும் பரத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்பின், பரலோகத்தில் ஒரு யுத்தம் மூண்டது. தேவதூதர்கள் இந்தப் போரில் ஈடுபட்டார்கள். தேவகுமாரனையும், அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த யாவரையும் ஜெயிக்க வேண்டும் என்று சாத்தான் வாஞ்சித்தான். இறுதியாக, உண்மையும் உத்தமமுமான தூதர்கள், போரை வென்றனர். சாத்தானும், அவனது ஆதரவாளர்களும் பரலோகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். GCt 1.2
வெளியே தள்ளப்பட்டு, பரதத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதை கண்ட சாத்தான், தனக்கு உண்டாயிருந்து சகல அலங்காரமும், பரலோக மகிமையும் நித்தியமாக தன்னை விட்டு எடுத்துக்கொள்ளப்பட்டதை உணர்ந்தான். இந்நிலையில், மனம் வருந்தினான். மீண்டும் பரலோகத்தில் தன்னை ஏற்றுக்கொள்ளவே•டும். என்று விரும்பினானன். ஆனால், பரலோகமோ ஆபத்தில் இருக்கலாகாது; மறுபடியும் உள்ளே வந்தால் பரலோகமே சிதைந்து விடக்கூடும்; ஏனெனில் பாவம் அவனில்தான் தோன்றியது; கலகமூட்டும் விதைகள் அவனில் இருந்தது. சாத்தானும் அவன் யோசனையும் மனங்கசந்து, அழுது. தேவனிடத்தில்,மன்னிப்பை கோரினார்கள் . ஆகிலும் அவர்கள் பாவம், வெறுப்பு, மற்றும் பொறாமை அவர்களுக்கு தண்டனையில்லாமல் மன்னிப்பு என்கிற நிலையை எட்டாத நிலையாக ஆக்கிற்று. GCt 2.1
தேவனுடைய அன்பை தான் இழந்து விட்டதை உணர்ந்த சாத்தான், தனது மெய்யான ரூபத்தை நிலை நாட்டத் துவங்கினான். தனது தீய தூதர்களோடு கலந்தாலோசித்து, தேவனுக்கு விரோதமாக செயலாற்ற ஆரம்பித்தான். ஆதாமும் ஏவாளும் அழகிய ஏதேன் தோட்டத்தில் வைக்கப் பட்டபொழுது, அவர்களை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டினான். தேவ கற்பனைகளுக்கு கீழ்படிந்து இருக்கும் வரை. ஆதாமையும் ஏவாளையும் அசைக்க முடியாது என்பதை சாத்தான் உணர்ந்தான். தேவ அன்பிற்கு பாத்திரவான்களாக இல்லாதபடி அவர்கள் முதற்கன் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக ஆக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் மூலமாக, தேவ கோபத்திற்கு அவர்கள் ஆளாகி, சாத்தானின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள் என திட்டம் வகுத்தான். மனிதனுக்கு ஆர்வம் பொங்குவதற்காக, சாத்தான் வேறு ஒரு சாயலை தரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தேவனுடைய சத்தியத்துவத்தை எதிர்த்து மெதுவாக தனது திட்டங்களை நகர்த்தி, மனிதனின் உள்ளத்தில் சந்தேகத்தை எழுப்பி அவர்களின் எதிர்பார்ப்பை தாண்டி, இறுதியாக, தான் செய்த தவறுக்கு ஒத்த ஒரு தவறை மனிதனும் செய்யவேண்டும் என்று எண்ணினான். இதற்காக, தேவன் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தெரிந்துகொண்டு, தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த நன்மை தீமை அறியக்கூடிய விருட்சத்தை பயன்படுத்தினான். GCt 2.2
பார்க்கவும் : ஏசாயா 14 : 12-20; எசேக்கியல் 28 : 1-19;
வெளி. 12 : 7-9