மகா சர்ச்சை

1/43

மகா சர்ச்சை

ஜீவிய சரித்திரத்தின் சுருக்கம்

எலன் கோல்ட் உவைட், 1827-1915

17 வயது வரை, எலன் அம்மையார் ஒரு மெத்தடிஸ்ட் திருச்சபையின் அங்கத்தினராக இருந்தார்கள். இவர், இயேசு கிறிஸ்துவின் விசுவாசமுள்ள சீடர். இயேசு கிறிஸ்துவின் துரித வருகையைக் குறித்து விசுவாசித்து, பேசியபடியால், அச்சபையிலிருந்து 1843ஆம் ஆண்டு நீக்கப்பட்டவர். உலகிற்கு அளிக்கப்பட வேண்டிய தூதினை, பரம தரிசனங்கள் மூலமாக, இரு நபர்களுக்கு, தேவன் அளித்தார். இந்த பெரிய பொறுப்பினை அவ்விருவரும் மறுத்ததினால், தேவன் அத்தரிசனங்களையும், தூதையும் இவருக்கு அளித்தார். இவர், அநேக கட்டுரைகளிலும், நூல்களிலும், தேவன் காட்டிய கண்டனங்களையும், எச்சரிப்புகளையும் விவரித்து எழுதினார். ஆரோக்கிய தூது பற்றிய வெளிச்சம் கிட்டியதிலிருந்து, ஆரோக்கிய வாழ்வை ஆதரிக்க துவங்கினார். ஆதியிலே, ஏதேன் தோட்டத்திலே, தேவன் வழங்கிய முதலாவது ஆகார பழங்கங்களை ஒத்த, தீய பொருட்களின் உபயோகத்திற்கு விலகியிருப்பதின் அவசியங்களையும், அனைத்து ரீதிகளிலும் கடைபிடிக்க வேண்டிய இச்சையடக்கத்தின் அவசியங்களைப் பற்றியும் சுதாரித்து வர, அழைப்பு விடுத்தார். GCt iii.1

அநேகர் அவரை தீர்க்கதரிசி என அழைப்பதை பொருட்படுத்தாத திருமதி உவைட், தன்னை அவர்களாகவே “தீர்க்கதரிசி” என்று அழைத்துக்கொள்ள வில்லை. அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, தான் ஒரு “தூதுவன்” என அறிவித்தார். இப்பதிலின் மூலமாக, தான் செய்து வந்த ஆரோக்கிய சீர்திருத்தங்கள், பாவத்திலிருந்து திரும்ப கொடுக்கப்பட்ட அழைப்புகள், மற்றும் உண்டாக்கப்பட்ட “திருச்சபையின் பிளவுகளை சரிசெய்தல்” போன்ற உயர்ந்த காரியங்களை செய்வதற்கு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருப்பது போதுமானதல்ல என்பதை தெளிவுபடுத்தி காட்டினார். அநேக பக்தி ரசமான நூல்களை படைத்த இவர், தான் எழுதிய நூல்களிலேயே, இந்த நூலாகிய “கிறிஸ்துவுக்கும் அவருடைய தூதர்களுக்கும், சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையே உண்டான மகா சர்ச்சை”யைத்தான் மிக முக்கியமாக கருதினார். GCt iii.2