மாரநாதா! (இயேசு வருகிறார்!)

60/366

பாதுகாப்பான ஒரு புகலிடம்!, பிப்ரவரி 28

“இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடதிருக்கும்.” - ஏசாயா 26:21. Mar 117.1

ஏறத்தாழ அனைத்து பட்டணத்துவாசிகளும் முழுமையாக — பாவத்திற்குள் நிச்சயமாக — வேகமாக விழுந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது துணிகரமான பாவம் சீராக உயர்ந்துகொண்டிருக்கிறது. அங்கு நிலவிவரும் ஊழல், ஒரு மனிதனின் எழுதுகோலின் விவரிக்கும் சக்திக்கும் அப்பாற்பட்டதாயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது கலகம், இலஞ்சம், மோசடி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. இதயத்தை பாதிக்கின்ற வன்முறை, ஒழுங்கின்மை, மனிதர்களின் துன்பத்தில் அக்கறையின்மை, கொடூரமான — மனிதனேயமற்ற — அசுரத்தனமான — முறையில் மனித உயிர்கள் அழியும் காரியங்கள் தினந்தினம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன... Mar 117.2

நம் தேவன் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறார். அவர் தமது பிரமாணத்தை மீறுபவருடன், நீடிய பொறுமையுடனும் மிகுந்த பரிவுடனும் போராடுகிறார்... கர்த்தர் மனிதனுடனும், நகரங்களுடனும் மிகவும் பொறுமையாயிருந்து, தெய்வீகக் கோபத்திலிருந்து அவர்களைத் தப்பிவிக்கத்தக்கதாக, இரக்கமுடன் எச்சரித்துக்கொண்டிருக்கிறார்; ஆனால், பரிந்துபேசும் குரல் இனி ஒருபோதும் கேட்கக்கூடாத காலம் வரும்... Mar 117.3

சமுதாயத்தில், குறிப்பாக தேசங்களின் பெரும் நகரங்களில் நிலவிவரும் சூழல், தேவ நியாயத்தீர்ப்பு வருகிறது என்றும், உலகத்தின் முடிவு சமீபமாயிருக்கிறது என்றும் இடிமுழக்கம்போல பறைசாற்றுகிறது. முடிவுகாலத்தின் துவக்கத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். அக்கினி, வெள்ளம், பூமியதிர்ச்சி, யுத்தம், இரத்தம் சிந்துதல் என்பது போன்ற தேவனுடைய நியாயத்தீர்ப்பிகள் ஒன்றன்பின் ஒன்றாக துரிதமாகத் தொடர்ந்துவரும்... Mar 117.4

தேவ ஆக்கினையின் புயல் திரண்டுவந்துகொண்டிருக்கிறது; அவரது இரக்கத்தின் அழைப்பை ஏற்று... தெய்வீக அரசரின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிந்து, பரிசுத்தமடைந்தவர்கள் மட்டுமே அந்தப் புயலில் நிலை நிற்க முடியும். அந்த அழிவு கடந்து போகுமட்டும், நீதிமான்கள் கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைத்துக் காக்கப்படுவார்கள். Mar 118.1

“வேறு எந்தப் புகலிடமும் எனக்கு இல்லை;
உதவியற்ற எனது ஆத்துமா
உம்மையே சார்ந்திருக்கிறது.

என்னைத் தனியே விட்டுவிடாதேயும்;
தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்துத் தேற்றும்.
மறைத்துக்கொள்ளும்,
ஆ! என் மீட்ப்பரே! மறைத்துக்கொள்ளும்.

வாழ்வின் புயல் கடந்துசெல்லும்வரை
பாதுகாப்பான அந்தப் புகலிடத்திற்க்குச் செல்ல
எனக்கு வழிகாட்டும்;
ஆ! இறுதியிலே என்னை ஏற்றுக்கொள்ளும்.”*
Mar 118.2

வாக்குத்தத்த வசனம்: Mar 118.3

“கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.” - நீதிமொழிகள் 19:16. Mar 118.4