மாரநாதா! (இயேசு வருகிறார்!)

316/366

மீட்கப்பட்டோருக்கான வெகுமதி!, நவம்பர் 11

“...ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.” - கொரிந்தியர் 3:14. Mar 629.1

தேவனுடைய சிங்காசனத்தையும் ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனத்தையும் சூழ்ந்துநிற்கிற உண்மையான ஊழியக்காரருக்குக் கொடுக்கப்படுகிற பரிசு மிகவும் மகிமை உள்ளதாயிருக்கும். அழிந்துபோகிற கண்களாலே தேவனுடைய மகிமையைப் பார்த்த யோவான் செத்தவனைப்போல கீழே விழுந்தான். அந்தக் காட்சியை அவன் சகிக்கக்கூடாதிருந்தான்; ஆனால், தேவ மக்கள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்போது, “அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசிப்பார்கள்” --1 யோவான் 3:2. மிகவும் அதிகமாக நேசிக்கப்படுகிற ஆண்டவரால் ஏற்றக்கொள்ளப்பட்டு, சிங்காசனத்திற்கு முன்பாக அவர்கள் நிற்பார்கள். அவர்களுடைய பாவங்களெல்லாம் அகற்றப்பட்டாயிற்று. அவர்களுடைய மீறுதல்களெல்லாம் மன்னிக்கப்பட்டாயிற்று; இப்பொழுது, தேவனுடைய சிங்காசனத்தின் மங்காத மகிமையை அவர்கள் பார்க்கலாம். கிறிஸ்துவுடன் அவருடைய பாடுகளிலே பங்கெடுத்திருக்கிறார்கள். மீட்பின் திட்டத்திலே அவர்கள் அவருடன் உழைத்திருக்கிறார்கள்; எனவே, நித்தியம் முழுவதுமாக தேவனைத் துதிக்கிற, தேவனுடைய இராஜ்யத்திலே மீட்கப்பட்ட ஆத்துமாக்களை காணும் மகிழ்ச்சியில், கிறிஸ்துவுடன் அவர்களும் பங்குகொள்கிறார்கள். Mar 629.2

அந்நாளிலே மீட்கப்பட்டவர்கள் பிதாவின் மகிமையிலும், குமாரனுடைய மகிமையிலும் ஜொலிப்பார்கள். தூதர்கள் தங்கள் பொற்சுரமண்டலங்களை மீட்டி, இராஜாவையும் அவருடைய வெற்றிச் சின்னங்களையும் வரவேற்பார்கள்...வெற்றி முழுக்கத்தின் ஆரவாரம் பரலோகத்தை நிரப்பும்; கிறிஸ்து வெற்றி சிறந்தார்; அவருடைய பாடுகளும் தியாகமும் வீணாகவில்லை என்கிறதற்கு சாட்சிகளாயிருக்கிற, அவரால் மீட்கப்பட்டவர்களோடுங்கூட அவர் பரலோக மன்றங்களுக்குள் பிரவேசிப்பார்... Mar 629.3

பூமியின் பரதேசிகளுக்கு அங்கே வீடுகளுண்டு; நீதிமான்களுக்கு வஸ்திரங்களுண்டு; அவர்களுக்கு மகிமையின் கிரீடமும் வெற்றியின் குருத்தோலைகளுமுண்டு; இந்த உலகத்திலே நமக்கு தேவனுடைய வழிநடத்துதல்களிலே நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய அனைத்தும் அங்கு தெளிவாக்கப்படும். விளங்கிக்கொள்ள கடினமாக இருந்த காரியங்கள் அனைத்தும் அச்சமயத்தில் விளக்கத்தைப் பெறும். கிருபையின் இரகசியங்களும் நம்முன் திறந்துவைக்கப்படும். எல்லைக்குட்பட்ட நமது மனங்கள் குழப்பத்தையும் மீறப்பட்ட வாக்குறுதிகளையுமே கண்டிருந்தன. ஆனால் இப்பொழுது நிறைவான நிலையையும் அழகான இசைவையுமே நாம் காண்போம். ஆனால் இப்பொழுது தோன்றியவைகளெல்லாம் பரிபூரண இசைவோடு நடந்திருப்பதைக் காணுவோம். மிகப் பெரிய சோதனைகளாக நமக்குத் தோன்றியவைகளை அந்த எல்லையற்ற அன்பு என்றழைக்கப்படும் தேவனே அனுமதித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். நமக்கு நன்மைக்கேதுவாக சகலத்தையும் நடத்தின அவருடைய விசாரிப்பை நாம் உணரும்பொழுது, சொல்லமுடியாத ஆனந்தத்திலும் நிறைவான மகிமையிலும் நாம் களிகூருவோம். Mar 630.1

மேகங்கள்மேல் வரப்போகிற கிறிஸ்துவைச் சந்திக்க நீங்கள் ஆயத்தப்பட வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்துகிறேன்... அவருடைய நியாயத்தீர்ப்பிற்கு ஆயத்தமாகுங்கள்; கிறிஸ்து வரும்பொழுது தம்மில் விசுவாசம்வைத்த அனைவராலும் பாராட்டுதலைப் பெறும்பொழுது, அவரைச் சமாதானமாகச் சந்திக்கிற அந்தக் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள்.⋆ Mar 630.2

வாக்குத்தத்த வசனம்: Mar 630.3

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” - யோவான் 14:12. Mar 630.4