மாரநாதா! (இயேசு வருகிறார்!)
அழுவதா அல்லது மகிழ்வதா?, ஜனவரி 31
“அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.” - எரேமியா 8:20. Mar 61.1
முடிவு மிகச் சமீபமென்று நிறைவேறுதலை அடைந்து கொண்டிருக்கும் காலங்களின் அடையாளங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகின்றன. இவைகளை புறக்கணிக்கவேண்டாமென்று சபையின் அங்கத்தினர்களை நான் வேண்டிக்கொள்கிறேன். ஆ! தங்களின் ஆத்துமாக்களின் இரட்சிப்பைக்குறித்து அக்கறையற்றிருக்கும் எத்தனை ஆத்துமாக்கள், “அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை” என்று வெகு சீக்கிரத்தில் கசந்த உள்ளத்தோடு புலம்புவார்கள். Mar 61.2
இந்த வாரத்தில் நீதிமன்றத்தில் நமது வழக்கானது எடுக்கப்பட்டு, அதின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைவுகூருவோமானால், ஆ! அது எத்தனை நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். தங்குதடையற்று சிற்றின்பங்களில் திளைப்பதையும், எல்லாப் பெருமையையும் அனைத்து சுயநலத்தையும் உதறித்தள்ளுவதற்காக விழித்திருந்து ஜெபிக்கும் வேளை இதுவே. வீணாக்குகிறோமென்று சொல்வதைவிட மிகவும் மோசமான நிலையிலே, அருமையான காலமானது விரையமாக்கப்படுகிறது. அத்தகைய நேரங்கள் ஜெபத்திலும், தியானத்திலும் செலவிடப்பட வேண்டும். தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களில் அநேகர், கடமையைச் செய்வதற்குப் பதிலாக, மன விருப்பத்தின்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுது, அவர்கள் இருக்கும் நிலையில் நித்திய ஜீவனுக்குத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய கவலையற்ற - அக்கறையில்லாத நபர்களிடம் நான் கூறுவது என்னவென்றால் : “உங்கள் வீணான சிந்தைகளும், உங்களது இரக்கமற்ற வார்த்தைகளும், உங்களது சுயநலம் நிறைந்த செயல்களும் பரலோகப் புத்தகத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன” என்பதாகும். பெல்ஷாத்சாரின் விக்கிரக வணக்கத்தோடுகூடிய கேளிக்கை விருந்திலே, அவர்களது முன்னால் நின்றுகொண்டிருந்த அதே தூதர்கள், நீங்கள் உங்களது மீட்பரை அவமதிப்பதைப் பார்த்தவர்களாக, உங்களுக்கு அருகில் நிற்கிறார்கள். இவ்வாறு இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்து, பகிரங்கமாக நீங்கள் வரை அவமானப்படுத்துவதைக் கண்டு, வேதனையடைந்து, துக்கம் மிகுந்தவர்களாக திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். Mar 61.3
கிறிஸ்து முடிசூட்டப்படும் அந்த நாளிலே, கறை, திரை மற்றும் எவையும் சுமந்தவர்களாக செல்லும் எவரையும் தம்முடையவர் எனக்கூறி ஒப்புக்கொள்ளமாட்டார். அவர் தமது உத்தமமான பிள்ளைகளுக்கு மகிமையுள்ள ஜீவாகிரீடத்தைத் தருவார். தங்கள் மீது அவர் ஆளுகை செலுத்துவதை விரும்பாதவர்கள், மீட்கப்பட்டோரின் சேனை அவரைச் சூழ்ந்து நிற்பதையும், அவர்களில் ஒவ்வொருவரும், “நமது நீதியாய் இருக்கிற கர்த்தர்” என்ற ஒரு அடையாளத்தைப் பெற்றிருப்பதையும் காண்பார்கள். ஒரு காலத்தில் முள்முடி சூட்டப்பட்டிருப்பதைக் காண்பார்கள். Mar 62.1
அந்நாளிலே மீட்கப்பட்டோர் பிதாவின் மகிமையோடும், அவரது குமாரனின் மகிமையோடும் ஒளிர்ந்து பிரகாசிப்பார்கள். பரலோகத்தின் தூதர்கள் பொற்சுரமண்டலங்களைப் பிடித்தவர்களாக இராஜவையும் அவரோடு கூட ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் தோய்த்து வெண்மையுமாக்கப்பட்டு, அவரது வெற்றியின் சின்னங்களாக அவருடன் நிற்கின்ற, மீட்கப் பட்டோரையும் வரவேற்பார்கள். வெற்றியின் ஒரு கீதமானது, பரலோகம் முழுவதையும் நிரப்பினது. கிறிஸ்து வெற்றி சிறந்தார். அவரது பாடுகள், தர்தியாகம் ஆகிய குறிக்கோளுடைய பணித்திட்டம் வீங்கப் போய்விடவில்லை என்று சாட்சிபகரக்கூடிய அந்த மீட்கப்பட்டோர் கூட்டம் புடைசூழ, பரலோக மன்றத்தில் கிறிஸ்து பிரவேசிக்கிறார்.⋆ Mar 62.2
வாக்குத்தத்த வசனம்: Mar 62.3
“...உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதாகச் சந்தோஷப்படுங்கள்.” - லூக்கா 10:20. Mar 62.4