மாரநாதா! (இயேசு வருகிறார்!)

264/366

வாதை ஊற்றப்படுங்காலத்தில் துன்மார்க்கருடைய நிலை…!,செப்டம்பர் 20

“இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.” - ஆமோஸ் 8:11,12. Mar 525.1

இரக்கத்தின் இனிய குரல் ஓய்ந்தபோது, துன்மார்க்கரை பயமும் நடுக்கமும் பிடித்துக் கொண்டது. மிகவும் பிந்திவிட்டது! மிகவும் பிந்திவிட்டது!! என்கிற பயங்கரமான வார்த்தைகளை மிகத் தெளிவான நிலையில் அவர்கள் கேட்டார்கள். Mar 525.2

தேவனுடைய உக்கிர கோபத்தின் கலசங்கள் அவர்கள்மீது ஊற்றப்படும்போது, பாவிகள் அடையும் வேதனையை, கிறிஸ்துவும் பாவிகளுக்காக சிலுவையின்மேல் அடைந்தார். குற்ற உணர்வோடு இருக்கிற மக்களை, இருண்ட-நம்பிக்கையற்ற நிலையானது, ஒரு மரணப்போர்வையைப்போன்று சுற்றிலும் சூழ்ந்துகொள்ளும். பாவத்தின் இயல்பான பாவத்தன்மையைக் குறித்து முற்றிலுமாக அப்பொழுது நன்கு புரிந்துகொள்வார்கள். Mar 525.3

தேவனுடைய வார்த்தைகளுக்கு இதுவரை முக்கியத்துவங்கொடுக்காதவர்கள், அச்சமயத்தில் ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரம்வரைக்கும், வடக்கிலிருந்து கிழக்குவரைக்கும் ஆண்டவருடைய வார்த்தைகளைத்தேடி நிலையற்று அலைந்து கொண்டிருந்தார்கள். “அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். தேசத்தின்மேல் பஞ்சம்; அது ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல; ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல; கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சம். தேவன் தங்களை அங்கீகரித்துவிட்டார் என்ற அந்த ஒரு வார்த்தைக்காக, எதைத்தான் அவர்கள் கொடுக்காமல் இருப்பார்கள்!...(அதாவது எதையும் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்கள்) Mar 525.4

வாதையின் கொடுமைகளைச் சகிக்கமாட்டாத துன்மார்க்கரில் அநேகர், மிகவும் அதிகமாக வெகுண்டெழுந்தார்கள். அது மிகவும் பயங்கரமான — கடுந்துயர் நிறைந்த-ஒரு காட்சியாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோசமாக தூஷித்தார்கள். அப்படியே பிள்ளைகள் பெற்றோரையும், சகோதரர்கள் சகோதரிகளையும், சகோதரிகள் சகோதரரையும் நிந்தித்தார்கள்… “நீங்கள் எங்களை எச்சரிக்கவில்லை. உலகம் முழுவதும் மனம் மாறிவிடும் என்றீர்கள். எங்களுக்குள் உண்டான பயத்தையும் சமாதானம், சமாதானம் என்று சொல்லி அமர்த்திவிட்டீர்கள். இப்படிப்பட்ட வேளை வருமென்று நீங்கள் எங்களுக்குச் சொல்லவில்லையே! எங்களுக்கு இந்த எச்சரிப்பைக் கொடுத்த ஜனங்களைப்பற்றி, அவர்கள் கொள்கை வெறியர்கள், பொல்லாதவர்கள், உங்களைக் அழித்துவிடுவார்கள் என்று சொல்லி, தடுத்துவிட்டீர்கள்” என்று மக்கள் கசப்பான வெறுப்போடு போதகர்களைத் தாக்கினார்கள்; எனவே, போதகர்களும் தேவனுடைய உக்கிர கோபத்துக்குத் தப்பவில்லையென்று நான் கண்டேன்; அவர்களது சபையாரைக் காட்டிலும் அவர்கள் அடைந்த துன்பங்கள் பத்துமடங்கு அதிகமாயிருந்தது. Mar 526.1

“உன்னதமானவருடைய மறைவில்” தங்கியிருப்பவர்களுடைய நிலையைப்பார்த்து, அதாவது ஆண்டவர் தம்மை நேசித்து தமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிற அனைவரையும் தமது கூடாரத்தின் மறைவிலே மறைத்துவைக்கின்ற நிலையைக்கண்டு, துன்மார்க்கர் ஆ! எவ்வளவு அதிகமாகப் பொறாமை கொண்டிருப்பார்கள்!⋆ Mar 526.2

வாக்குத்தத்த வசனம்: Mar 526.3

“நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.” - சங்கீதம் 37:23,24. Mar 526.4