மாரநாதா! (இயேசு வருகிறார்!)
செப்டம்பர்
நீதிமன்றங்களுக்கும் ஆலோசனை மன்றங்களுக்கும் முன்பாக நிற்கவேண்டியதிருக்கும்!, செப்டம்பர் 1
“நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.” - சங்கீதம் 119:46. Mar 487.1
“இந்த மாபெரும் ஊழியம் முடிவடையப்போகிற காலத்திலே, எப்படி சமாளிப்போம் என்று அறிந்திராத குழப்பங்களை நாம் சந்திப்போம் என்றாலும், பரலோகத்தின் மிகப்பெரிய மூன்று வல்லமைகளும் கிரியைசெய்துகொண்டிருக்கின்றன என்பதையும், காலச்சக்கரத்தின்மேல் தேவனுடைய கரம் இருக்கிறது என்பதையும், தேவன் நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதையும் நாம் மறந்துபோகாதிருப்போமாக. Mar 487.2
அவருடைய நாமத்தினிமித்தம் ஆயிரமாயிரம் மக்களுக்கு முன்பாகவும், ஆலோசனை மன்றங்களுக்கு முன்பாகவும் நிற்க வேண்டிய வேளை வரும். ஒவ்வொருவரும் அவரவருடைய விசுவாசத்திற்கான காரணத்தைச் சொல்லவேண்டியதிருக்கும். Mar 487.3
நமது மக்களால் எடுத்தாளப்படும் ஒவ்வொரு சத்தியமும் மாபெரும் மேதைகளின் திறனாய்விற்கு உட்படும். உலகின் மாபெரும் அறிவாளிகளிலும் மிக உயர்ந்தவர்கள், சத்தியத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நாம் சத்தியத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நாம் சத்தியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நாம் சத்தியத்தை எடுத்தாளும் ஒவ்வொரு நிலையும் தீர்க்கமாக வேதவார்த்தைகளைக் கொண்டு சோதிக்கப்படும். இன்றைக்கு நாம் உலகத்தாரால் அறியப்படாதவர்களைப்போன்று தோற்றமளிக்கலாம். ஆனால், நிலைமை இப்படியே என்றும் இருக்காது. நம்மை முன்னணிக்குக் கொண்டுவர இயக்கங்கள் வேலைசெய்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை நம்முடைய சத்தியங்கள் வரலாற்று அறிஞர்களாலும் அல்லது உலகின் தலைசிறந்த மனிதர்களாலும் சின்னபின்னப்படுத்தப்படலாம்; ஆம், அவ்வாறே செய்யப்படும். Mar 487.4
சத்துருக்கள் தடுக்கவோ, மறுத்துப்பேசவோ கூடாதபடிக்கு, வல்லமையான நாவையும் ஞானத்தையும் கர்த்தராகிய இயேசு தமது சீடர்களுக்குக் கொடுப்பார். சாத்தானுடைய தந்திரங்களை தங்களது பகுத்தறிவினாலே ஜெயிக்க முடியாதவர்களுங்கூட, படித்த ஞானிகள் என்னப்படுகிறவர்களை குழப்புவதற்கேதுவாக சத்தியத்திற்கு திட்டமான சாட்சி பகருவார்கள். கல்லாதவர்களின் நாவுகளிலிருந்து, மனங்களை அசைக்கத்தக்கதாக, மற்றவர்களும் சத்தியத்தை நம்பி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, வல்லமையோடும் ஞானத்தோடும் வார்த்தைகள் பிறக்கும்; அநேகர் சத்தியத்திற்குத் திரும்புவார்கள். அவர்களுடைய சாட்சியினால், ஆயிரக்கணக்கானவர்கள் மனந்திரும்புவார்கள். Mar 488.1
படித்தவர்களுக்குக் கிடைக்காத வல்லமை ஏன் படிக்காதவர்களுக்குக் கிடைக்கிறது? படிக்காதவர்கள், கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசத்திலால் பரிசுத்தமான-தெளிவான-சத்திய ஒளிக்குள் பிரவேசித்திருக்கிறார்கள். படித்தவர்களோ சத்தியத்தைவிட்டு விலகிச்சென்றுவிட்டார்கள்; ஏழையான மனிதன் கிறிஸ்துவிற்கு சாட்சியாகிறான். சரித்திரத்திற்கோ, அல்லது உயர்ந்த ஞானமென்று பெயர்பெற்றிருக்கிற அறிவியலுக்கோ அவன் வேண்டுகோள் விடுக்கமுடியாது; ஆனால் வேத வாக்கியங்களிலிருந்து வல்லமையான அக்காட்சிகளை அவன் சேகரித்திருக்கிறான். தேவ ஏவுதலினாலே அவன் பேசுகிற சத்தியம் சுத்தமுள்ளதாகவும், கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது; எனவே, அவனுடைய சாட்சியை எவரும் எதிர்த்துப்பேச முடியாது.⋆ Mar 488.2
வாக்குத்தத்த வசனம்: Mar 488.3
“...உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 30:17. Mar 488.4