மாரநாதா! (இயேசு வருகிறார்!)

215/366

ஒழுக்கநிலை சார்ந்த பண்பின் அடிப்படை ஆதாரம்!, ஆகஸ்டு 2

“எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்.” ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது... உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாயிருக்கிறோம். - 2 கொரிந்தியர் 10:15, 16. Mar 427.1

சாத்தானின் வசிய நிலப்பரப்பினின்று நீங்கள் விலகியிருக்க வேண்டும். தேவனிடம் நீங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினின்று உங்கள் மனங்கள் தடுமாறிப்போய்விட அனுமதிக்கக்கூடாது. கிறிஸ்துவின்மூலமாக, நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். சுயத்தைக் கட்டுப்படுத்திவைத்திருக்கும் குணங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும். உங்களது சிந்தனைகள் தேவனுடைய சித்தத்திற்க்குக்கீழ் அடங்கியிருக்கத்தக்கதாக கொண்டுவரப்பட வேண்டும். உங்களது உணர்வுகள், மார்க்கம்-பகுத்தறிவு ஆகியவைகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். உங்களது கற்பனாசக்தியானது தடையின்றி கொந்தளித்து, அதின் சொந்தப்போக்கிலே செல்லும்படியும், கட்டுப்பாடு அல்லது ஒழுங்கு முறையின்றி செல்வதற்கு அனுமதிக்கப்படத்தக்கதாகவும் கொடுக்கப்படவில்லை. சிந்தனைகள் தவறாயிருக்குமானால், உணர்ச்சிகள் தவறாக இருக்கும். சிந்தனைகளும் உணர்வுகளும் சேர்ந்து ஒழுக்கமான குணத்தை உருவாக்குகின்றது... உங்களது எண்ணப் பதிவுகளுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து, சந்தேகம், உறுதியற்ற உணர்வு, மனஉளைச்சல் ஆகியவைகளின் போக்கிலே உங்களது சிந்தனைகளை ஓடுவதற்கு அனுமதிப்பீர்களானால், உலகில் வாழும் மக்களிலே நீங்கள்தான் மிகவும் மகிழ்சியற்றவர்களாக இருப்பீர்கள்.. Mar 427.2

அன்புள்ள சகோதரி F, உங்களது கற்பனாசக்தியானது வியாதிப்பட்டிருக்கிறது. உங்களது பகுத்தறிவையும் தீர்மானிக்கும் திறனையும் உங்களது எண்ணங்களை முற்றிலும் அடக்கியாள அனுமதித்து, அவ்வாறு தேவனைக் கனயீனம் செய்கிறீர்கள். உங்களிடத்திலே தீர்மானமான ஒரு சித்தம் இருக்கிறது; அதினால், உங்களது சிந்தனையானது உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது; அதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் சமநிலை தவறி, சில உறுப்புகளிலே இறுக்கத்தை உண்டாக்குகிறது. உங்களது எண்ணங்களுக்கு உங்களது ஆரோக்கியத்தை தியாகஞ்செய்கிறீர்கள். Mar 427.3

நீங்கள் ஒரு தவறுசெய்துகொண்டிருக்கிறீர்கள்: அது சரிப்படுத்தப்படாவிட்டால், அங்களது சந்தோஷத்தை மாத்திரம் சீர்குலைத்துப்போடுவதோடு நின்றுவிடாது. நீங்கள் திட்டமாக ஒரு தீமையை உங்களுக்குமட்டுமல்ல, உங்களது குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கும் செய்கிறீர்கள். மிக அதிகமாகச் செயல்புரிந்து கொண்டிருக்கும் உங்களது கற்பனாசக்தி, உங்களது பகுத்தறிவைக் கட்டுப்படுத்தியிருக்கிறது... உங்களது உணர்ச்சிகளின்மீது உங்களுக்கு வல்லமையிராவிட்டால், அது ஒரு பாவமாக இருக்காது. சத்துருவிற்கு ஒப்புக்கொடுக்கத்தக்கதாக, அது இவ்வாறு பதில் கொடுக்காது. தேவனுடைய காரியங்களை எதிர்க்கத்தக்கதாக, அணிவகுத்து நிற்பதற்குப்பதிலாக, உங்களது சித்தமானது பரிசுத்தமாக்கப்பட்டு, அடக்கியாளப்படுவது அவசியமாகிறது. Mar 428.1

துக்கம், கவலை, குழப்பம் ஆகியவைகள் இருக்கின்ற ஒரு உலகத்திலே மனிதன் வைக்கப்பட்டிருக்கிறான். ஆதாம் ஏவாளைப் போல சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படத்தக்கதாகவும் வைக்கப்பட்டிருக்கிறான்; மேலும், சரியான குணத்தை உருவாக்கி, முரண்பாட்டிலும் குழப்பத்தின் மத்தியிலும் ஒரு இணக்கத்தைக் கொண்டு வரவேண்டும். நமக்காக இவ்வாறு அதிகமாக செய்யப்பட வேண்டியது அவசியம். நாம் மகிழ்ச்சி அனுபவிக்க ஏராளமான காரியங்கள் இருக்கின்றன. கிறிஸ்துவின்மூலமாக நாம் தேவனோடு ஒரு தொடர்புக்குள் கொண்டுவரப்படுகிறோம். அவரது இரக்கங்கள் தொடர்ந்து அவருக்குக் கடமைப்பட்ட நிலையில் நம்மை தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அவைகளில் மிகக் குறைவானதாகக் கருதப்படும் காரியத்திற்காகக்கூட பாராட்டி மதிப்பிட வேண்டும். ⋆ Mar 428.2

வாக்குத்தத்த வசனம்: Mar 428.3

“நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.” - நீதிமொழிகள் 21:21. Mar 428.4