மாரநாதா! (இயேசு வருகிறார்!)
சாத்தான் தனது முயற்சிகளை இருமடங்காக்குகிறான்!, மே 2
“கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” - சங்கீதம் 34:7. Mar 243.1
நமது மீட்பவரின் மிக உன்னதமான வல்லமைக்கடியில் நாம் பெற்றுக்கொள்ளும் விடுதலையும் பாதுகாப்பும் நமக்குமட்டும் இருந்திராவிட்டால், சாத்தானுடைய - அவனது சேனைகளுடைய வல்லமையும் பகைமையும் நம்மைத் துளிகூட பிசகாமல், பயத்தால் மூழ்கடித்துவிடும். தீய மனிதர்களிடமிருந்து நம்மையும் நமது சொத்தையும் பாதுகாப்பதற்காக, மிகக் கவனமாக நமது வீடுகளுக்கு தாழ்ப்பாள்களையும், பூட்டுகளையும் போட்டுவைக்கிறோம். தீயதூதர்கள் நம்மைத் தாக்குவார்களானால், நமது சொந்த பலத்தில் எந்தவிதமான பாதுகாப்பு முறையும் நமக்குக் கிடையாது. அத்தகைய தீயதூதர்கள் நம்மிடத்திற்கு நுழைவுரிமையை நாடித் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். இந்த தீயதூதர்களைப்பற்றி, நாம் சிறிதளவும் நினைத்துப்பார்ப்பதில்லை. தீயதூதர்கள் அனுமதிக்கப்படுவார்களானால், நம் உள்ளத்தின் கவனத்தைச் சிதறடித்து, நம் உடல்களைச் சீர்குலைத்து, கடும் வேதனைக்குட்படுத்தி, நமது உடமைகளையும் நமது ஜீவியங்களையும் அழித்துப்போடமுடியும். அவர்களது ஒரே மகிழ்ச்சி, நாம் படுகின்ற கடுந்துயரத்திலும் அழிவிலேயும் தான் இருக்கிறது. தீய சக்திகளின் கட்டுப்பாட்டிற்கு தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கின்றவரை, தெய்வீக உரிமை கோருதல்களை எதிர்த்து, சாத்தானின் சோதனைகட்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்களது நிலைமை மிகவும் அச்சந்தரக்கூடியதாகும்; ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், அவரது பராமரிப்பிற்கடியில் எப்பொழுதும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மேம்பட்ட வல்லமையுள்ள தூதர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் காவலைக் கடந்து, தீயசக்தி உள்ளே வரமுடியாது. Mar 243.2
சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் போராட்டமானது, முடிவடையும் தருவாயிலிருக்கிறது. சாத்தான் தனது கண்ணிகளில் ஆத்துமாக்களைக் கட்டிவைக்கவும், மனிதனின் சார்பிலே கிறிஸ்து செய்யும் பணியை முறியடிக்கவும், அந்தத் தீயவன் தனது முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்குகிறான். மீட்பரின் மத்தியஸ்த வேலை முடியும்வரை மக்களை இருளிலும், தவறுகளை அறிக்கை செய்யாத நிலையிலும் பிடித்துவைக்க முயல்கிறான்; அதற்குப்பின், பாவத்திற்கான ஒரு பலி எதுவுமில்லை. அந்த நோக்கத்தை நிறைவேற்றலே அவன் முயன்றுகொண்டிருக்கிறான். Mar 244.1
சாத்தானின் வல்லமையை எதிர்ப்பதற்காக சிறப்பான முயற்சிகள் எதுவும் செய்யப்படாதபொழுது, உலகத்திலும், சபையிலும் அக்கறையற்ற தன்மை நிலவும்பொழுது, சாத்தானும் அதைக்குறித்து கவலைப்படாமல் இருக்கின்றான்; ஏனெனில், யாரையெல்லாம் தனது சித்தத்தின்படி சிறைப்படுத்தி, நடத்திவந்திருக்கிறானோ அவர்களை இழந்துவிடுகின்ற எத்தகைய ஆபத்திலும் அவன் இல்லை; ஆனால், நித்திய காரியங்களைக்குறித்து அக்கரை செலுத்தும்படியாக கவனம் ஈர்க்கப்ப்படும்பொழுது, “நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று ஆத்துமாக்கள் வினவும்போழுது, அவன் கிறிஸ்துவின் வல்லமைக்கு எதிராக, தனது வல்லமை நிகரானது என்று காட்டுவதற்கு முயற்சித்து, களத்தில் இறங்குகிறான்... தேவனைத் தொழுதுகொள்ளத்தக்கதாகக் கூடிவரும்போழுது, அவன் அங்கு இருக்கின்றான். பார்வைக்கு காணப்படாமல் மறைந்திருந்தாலும், தொழுபவர்களுடைய உள்ளங்களை அடக்கியாளத்தக்கதாக சுறுசுறுப்பாகச் செயல்படுகிறான். ⋆ Mar 244.2
வாக்குத்தத்த வசனம்: Mar 244.3
“...பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” - யாக்கோபு 4:7. Mar 244.4