மாரநாதா! (இயேசு வருகிறார்!)

92/366

ஏப்ரல்

உலகிலுள்ள மாபெரும் ஊழியம்! , ஏப்ரல் 1

“...நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” - மாற்கு 16:15. Mar 181.1

“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்பதுவே கிறிஸ்து தமது பின்னடியார்களுக்குக் கொடுத்த கட்டளையாகும். இதன் பொருளை சாதாரணமாக நோக்குமிடத்து எல்லாரும் போதகர்களாகவோ அல்லது இறைப்பணியாளர்களாகவோ அழைக்கப்பட்டவில்லை என்பது தெரியும்; எனினும், தங்களுடைய உடன்மனிதர்களுக்கு “நற்செய்தியை” கொடுப்பதில் ஆண்டவரோடு சேர்ந்து அனைவரும் ஊழியக்காரர்களாக இருக்கலாம். பெரியோர் அல்லது சிறியோர், கற்றவர்கள் அல்லது கல்லாதவர்கள், முதியோர்கள் அல்லது வாலிபர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. Mar 181.2

இந்தக் காலத்திற்குரிய சத்தியத்தை அறிந்திருக்கிற ஒவ்வொருவர்மீதும் இந்த சத்தியத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு அவர்கள்மீது தங்கியிருக்கிறது. இந்த உலகத்தின் இரட்சிப்பிற்கும் அதின் உயர்நிலைக்கும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களே அதிக அளவில் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவிற்காக ஆத்துமாககளைக் கொண்டுவரும் ஊழியத்திலே, தேவனோடு அவர்கள் உடன் வேலையாட்களாக இருக்கிறார்கள். Mar 181.3

கிறிஸ்துவே, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே, ஒரு பாவியின் இதயத்தைக் கவர்ந்திழுக்கின்ற ஆய்வுப்பொருளாக இருக்கின்றார். கல்வாரிச் சிலுவையின்மீது தமது இணையற்ற அன்பினாலே இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டவராக நிற்கிறார். பசியோடிருக்கும் திரள்கூட்ட மக்களுக்கு இவ்வாறே அவரை முன்னிலைப்படுத்துங்கள். அவரது அன்பின் வெளிச்சமானது மனிதரை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், மீறுதலிலிருந்து கீழ்ப்படிதலிற்கும், உண்மையான பரிசுத்தத்திற்கும் வெற்றிகொள்ளும். வேறு எதுவுமே செய்யக்கூடாத அளவிற்கு கல்வாரி சிலுவையின் மீது நிற்கும் இயேசுவை நோக்கிப்பார்த்தலானது, பாவத்தின் கொடுமையான தன்மையைக் காணத்தக்கதாக, மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது. Mar 181.4

எந்த மீட்பரின்மீது தங்களது நித்திய வாழ்விற்கான நம்பிக்கைகள் மையங்கொண்டிருக்கிறதோ, அந்தச் சிலுவையில் அடிக்கப்பட்ட, உயிர்த்தெழுந்த இரட்சகர்மீது நமது சபை அங்கத்தினர்கள் தங்களது கண்களால் நோக்கிப் பார்க்கமாட்டார்களா? இதுவே நமது தூது, நமது விவாதம், நமது கொள்கை, மனந்திரும்பாதவர்களுக்கு நமது எச்சரிப்பு, துக்கத்திலிருப்போருக்கு நாம் கொடுக்கும் உற்சாகம், ஒவ்வொரு விசுவாசிக்கும் நாம் கொடுக்கும் நம்பிக்கையாகும். மக்களின் மனங்களில் ஒரு ஆர்வத்தை எழுப்பி, அதின்மூலமாக கிறிஸ்துவின்மீது தங்களது கண்களைப் பதிக்கத்தக்கதாகச் செய்யக்கூடுமானால், நாம் சற்றே விலகி நின்று, தொடர்ந்து தேவ ஆட்டுக்குட்டியின்மீது தங்களது கண்களைப் பதிக்கத்தக்கதாக மாத்திரம் நாம் அவர்களைக் கேட்க எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள். சுயநலத்திற்கு அந்த நபர் மரித்துப்போனவராகிவிடுவார். கிறிஸ்துவிலே உயர்த்தப்பட்ட தேவனுடைய வார்த்தை அனைத்திலும் அந்த நபர் விசுவாசம் வைத்திருபார். Mar 182.1

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டுமட்டும் இருக்காமல், வருகையைத் துரிதப்படுத்துவதே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குமுரிய சிறப்புரிமையாகும். அவரது பெயரைக் கொண்டிருக்கிற அனைவரும், அவரது மகிமைக்கான கனியைக் கொடுப்பார்களானால், எவ்வளவு விரைவாக நற்செய்தியின் விதையானது உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுவிடும். கடைசி அறுவடையானது எவ்வளவு துரிதமாக முதிர்ச்சி அடையும். எவ்வளவு சீக்கிரத்தில் கிறிஸ்து வந்து, தமக்கு அருமையான தானியத்தைக் கூட்டிச்சேர்த்துக்கொள்வார்!⋆ Mar 182.2

வாக்குத்தத்த வசனம்: Mar 182.3

“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்”. - மத்தேயு 28:20. Mar 182.4