எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
சரீரம் தேவனுடைய வாசஸ்தலம்
சரீரம் தேவன் வாசஞ் செய்ய விரும்பும் ஓர் ஆலயமாயிருக்கிற தென்னும் கருத்து மாணவர் மனதில் பதிக்கப்படட்டும்; மேன்மையும் மகத்துவமுமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கும் இடமாக அது சுத்தமாயிருக்க வேண்டும், அங்கக் கூறு சாஸ்திரத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் மெய்யாகவே பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டோமென காண்கிறபடியினால் பயபக்தியின் ஆவி அவர்களைப் பிடிக்கும். தேவனுடைய கரத்தின் கிரியையை அவர்கள் கேட்பதற்குப் பதிலாக சிருஷ்டிகரின் மகிமையான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தங்களால் கூடியவற்றை ல்லாம் செய்வதற்காசைப்படுவார்கள். இவ்விதம் அவர்கள் சுய வெறுப்பின் காரியமாக எண்ணாமல் உள்ளபடியே அதை விலை மதிக்கப் படாத ஓர் சிலாக்கிமாகவும் ஆசீர்வாதமாகவும் எண்ணுவார்கள். ---- Ed. 201. LST 161.2