எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

114/230

தன்னை ஜெயித்தல்

குணம் பரீட்சிக்கப்படும். நாம் மெய்யாய் உயிருள்ள திராட்சைச் செடியின் கொடிகளா இருந்தால் கிறிஸ்து நம்மில் வெளிப்படுவார். எரிச்சல்கள், கோபங்கள் மத்தியில் நாம் பொறுமையாயும், பட்சமாயும், சாந்தமாயும், சந்தோஷமாயும் இருப்போம். நாள் ஆக ஆக, வருஷம் செல்லச் செல்ல நாம் நம்மை ஜெயித்து மேன்மையான வீரியமடைந்து வளருவோம். இதுவே நமக்குக் குறிக்கப்பட்ட வேலை; ஆனால் இயேசுவின் இடைவிடாச் சகாயமும், உறுதியான தீர்மானமும், அசையாத நோக்கமும், ஓயா விழிப்பும் ஒழிய ஜெபமுமின்றி அதை நாம் நிறைவேற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் போர்புரிய வேண்டிய ஊர் போர் உண்டு. LST 137.2

போராட்டங்கள் அதைரியங்கள் மூலமாய் ஒவ்வொருவரும் தம் சொந்த வழியை ஜெயிக்கவேண்டும். போராட்டத்தைத் தளர விடுகிறவர்கள் வெற்றியின் பலத்தையும் சந்தோஷத்தையும் இழந்து போகிறார்கள். நாம் நாமாய்ச் செய்யவேண்டிய முயற்சி செய்யா விட்டால், ஒருவரும், தேவனுங்கூட, நம்மைப் பரலோகம் கொண்டு போகமுடியாது. நாம் நமது ஜீவியங்களில் அலங்கார அம்சங்களைப் போடவேண்டும். நம்மை இயேசுவைப் போலாக்காத கேவலமான இயற்கை அம்சங்களை நாம் அகற்றவேண்டும். தேவன் தமது தயவுள்ள சித்தத்தின் படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்கும்போது நாம் அவரோடு இசைந்து கிரியை செய்ய வேண்டும். LST 137.3

கிறிஸ்து மார்க்கம் இருதயத்தை மறுரூபமாக்குகிறது, லெளகீக சிந்தையுள்ளவனை வைதீக சிந்தையுள்ளவனாக்குகிறது; அதின் தூண்டுதலினால் தன்னயமுள்ள மனுஷன் தன்னால மற்றவனாகிறான்; ஏனனில் கிறிஸ்து இக்குணமுடையவர். அயோக்கிய உபாயியோக்கியமுள்ளவனாகிறான்; ஆகவே அவன் மற்றவர்கள் தனக்குச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்களை அவன் அவர்களுக்குச் செய்யும் படிக்கு அது அவனுக்கு இரண்டாம் சுபாவமாகி விடுகிறது. சீர்கேடன் சீர்கேட்டினின்று மாறிச் சீரடைகிறான். அவன் செம்மையான பழக் கம் பழகுகிறான். ஏனெனில் கிறிஸ்துவின் சுவிசேஷம் அவனுக்கு ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகி விட்டது. — 5T 344-5 LST 137.4

பரிசுத்தமாகுதல் தேவனுடைய சித்தத்துக்குப் பூரணமாய்க் கீழ்ப்படிந்து அனுதின கடமைகளைச் சந்தோஷமாய் நிறைவேற்றுவதில் அடங்கியுள்ளது. — COL 360 LST 138.1

சர்வலோகமும் விழுந்துபோன உலகமும் மற்றபடி பார்க்க முடியாத கிறிஸ்துவினுடைய குணத்தின் பூரணத்தை அவைகள் பார்க்கும் பொருட்டு மனிதருக்கு கிருபையின் ஆசிர்வாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. — C.H. 593. LST 138.2