எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

108/230

இரண்டாம் பிரிவு—கிறிஸ்தவ நடத்தை, ஆவிக்குரிய வளர்ச்சி, குணக் கட்டுமானம்

இந்த ஜீவியத்தில் உருவாகும் குணங்கள் பிற்கால கதியைத் தீர்மானிக்கும். கிறிஸ்து வரும் போது எவருடைய குணத்தையும் அவர் மாற்றமாட்டார். நமது குணமாகிய அங்கிகளை ஆட்டுக்குட்டி ஆனவரின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொள்வதற்கு அருமையான தவணையின் காலம் இப்போதுதான் அருளப்பட்டிருக்கிறது. பாவக்கறைகளை நீக்குவதற்கு ஆயுள் காலம் வேலை செய்ய வேண்டும். தன்னை அடக்கி சுயவெறுப்பான ஜீவியம் செய்ய அனுதினமும் புதிதாய் முயற்சிக்கவேண்டும். நாடோறும் புரிய வேண்டிய போர்களும் அடையவேண்டிய வெற்றிகளுமுண்டு. சிலுவையின் மகத்தான வெற்றிகளுக்காக ஒவ்வொரு நாளும் ஆத்துமா தேவனோடு ஊக்கமாய்ப் போராடவேண்டும்.—4 T. 429. LST 133.1