எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
கடைசிப் போராட்டம்
நாம் முடிவு காலத்தில் வசிக்கிறோம் . விரைவில் நிறைவேறி வருகிற காலங்களின் அடையாளங்கள் கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருக்கிறதென்று கூறுகின்றன . நாம் வசிக்கும் இக்காலம் பக்தி வினயமானதும் முக்கியமானதுமாயிருக்கிறது. தேவா வியானவர் மெதுவாய் ஆனால் நிச்சயமாய் பூமியைவிட்டு எடுத்துக் கொள்ளப் படுகிறார்.தேவ கிருபையை நிந்திப் போரின் மேல் இயற்கனவே வாதைகளும் தண்டனைகளும் விழுகின்றன . தரையிலும் கடலிலுமுண்டாகும் ஆபத்துகள், நிலையற்று நிற்கும் சமூகநிலை , யுத்த ஆரவாரங்கள் முதலியவைகள் எல்லாம் துர்ச்சகுனங்களாம் . இனி நடக்கும் மகத்தான சம்பவங்களை அவைகள் முன் குறிக்கின்றன . பொல்லாங்கின் கூட்டத்தினர் தங்கள் படைகளை ஒன்றாய்க் கூட்டிச் சேர்க்கிறார்கள். அவர்கள் கடைசிப் பெரும் போருக்காகத் தங்களை திடப்படுத்துகிறார்கள். நமதுலகில் சீக்கிரம் பெரும் மாறுதல்கள் நடைபெற வேண்டும் , கடைசி இயக்கங்கள் துரிதமானவைகளாயிருக்கும் -- 9:11 LST 123.2