எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
இயேசுவின் மகத்துவத்திற்கு சாத்தான் அஞ்சுகிறான்
சாத்தான் தனக்கு எதிரியானவரின் சத்துவத்துக்கும் மகிமைக்கும் அஞ்சி நடுங்குகிறபடியால் எவரும் வல்லமையுள்ள தன் எதிரியை நோக்கிக் கெஞ்ச அவன் சகியான். ஊக்கமான விண்ணப்பத்தின் சத்தத்திற்கே சாத்தானின் முழுச் சேனையும் நடுங்குகிறது. அவன் தன் நோக்கத்தை நிறைவேற்ற பொல்லாத தூதர்களை லேகியோன் கணக்காயழைகிறான். பரமாயுத மணியப்பெற்ற சர்வ வல்லமையுள்ள தூதர்கள் சோர்வடைந்துள்ள அவ்வேழை ஆத்துமாவின் சகாயத்திற்காக வரும்போது சாத்தானும் அவனுடைய சேனையும் போரில் தாங்கள் தோற்றுப் போவதாய் நன்கு அறிந்தவர்களாய் பின் வாங்குகிறார்கள் . சாத்தானின் பிரிய பிரஜைகள் உண்மையும் சுறுசுறுப்பும் ஏக நோக்க ஐக்கியமுள்ளவர்கள். அவர்கள் ஒருவரை யொருவர் பகைத்து ஒருவரோடுஒருவர் யுத்தம் செய்தாலும் யாவருக்கும் பொதுவாயுள்ள தங்கள் காரியத்தை முன்னேற்றஞ் செய்வதற்கு அவர்கள் சமயந் தப்பாது பார்த்துக் கொள்ளுகிறார்கள் . ஆனால் வானத்திலும் பூமியிலும் பெரிய தனகர்த்தராயிருப்பவர் சாத்தனின் வல்லமையை மட்டுப்படுத்தியிருக்கிறார் - 1T. 345-6. LST 122.2