எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
வீட்டை நோக்கி பயணம்
நாம் வீட்டை நோக்கி பயணமாய் இருக்கிறோம். நமக்காக மரிக்கும் படி அவ்வளவு அதிகமாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்தவர் நமக்கென்று ஒரு நகரத்தை கட்டி வைத்திருக்கிறார். புதிய எருசலேம் நாம் இளைப்பாறும் ஸ்தலமாய் இருக்கிறது. அந்த தேவனுடைய நகரத்தில் துக்காம் என்பதே கெடயாது. வாருததினால் புலம்பும் யாதொரு புலம்பலும் எண்ணங்கள் நொறுங்கி போவாதினாலும் அன்புகள் புதையுண்டு போவாதினாலும் யாதொரு ஒப்பாரியும் ஒருபோது கேட்க படாது. துக்க வஸ்திரம் சீக்கிரம் கலியன வஸ்திரமாய் மாறும் சீக்கிரம் நாம் நமது ராஜாவின் மகுடாபிஷேகத்தை காண்போம். தங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே மறைந்திருக்க பெற்றவாகளும் பூமியில் விசுவாசத்தை நல்ல போராட்டத்தை போராடினவர்களும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் மீட்பரின் மகிமையை அடைந்து பிரகாசிப்பார்கள். LST 100.2
நித்திய ஜீவனைப் பற்றிய நமது நம்பிக்கைகளுக்கு நாடு நாயகமாய் இருக்கும் அவரை நாம் சீக்கிரத்தில் பார்ப்போம். இந்த ஜெவ்வனில் நாம் அடைந்த சகல நஷ்டங்காலும் வருத்தங்களும் அவரது சமூகத்தில் ஒன்று மற்றதை காணப் படும். LST 100.3
“ஆகையால் மிகுந்த பலனுக்கு ஏதுவான உங்கள் தைரியத்தை விட்டு விடா திருங்கள். நீங்கள் தேவருடைய சித்தத்தின் படி செய்து வாக்கு தத்தம் பண்ணப் பட்டதை பெரும் படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாய் இருக்கிறது. வருகிறவர் இன் னுங் கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்.” எபி. 10 35-37. மேல் நோக்கிப் பாருங்கள், உங்கள் விசுவாசம் எப்பொழுதும் விருத்தியடையட்டும். இவ்விசுவாசம் உங்களை தேவனுடைய நகரத்தின் வாசல் வழியாய் மீட்கப்பட்டோருக்கென்றிருக்கும் அம்மகா விச்தாரமும் அளவற்றதுமான மகிமைக்குள் நடத்தும் இடுக்கமான பாதை நெடுகிலும் கொண்டு செல்வதாக. “இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து இருதயங்களை ஸ்திரபடுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.” யாக்.5:7,8 LST 100.4
* * * * *