எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
விசுவாசத்தில் துணிந்து தாவுதல்
எங்களுக்கு எதிரில் உண்டாயிருந்த பிளப்புக்கு அடுத்த பக்கத்தில் ஆர்ன்கூல உயரம் உள்ள பசும் புல் நிறைந்த அழகான வெளி நிலம் ஒன்று இருந்தது. நாம் சூரியனை பார்க்கமுடியவில்லை. அனால் சுத்த பொன் வெள்ளிக்கு ஒப்பான பிரகாசம் உள்ள மெல்லிய ஒளியின் கதிர்கள் அந்த நிலத்தின் மேல் அமர்ந்து இருந்தன. அந்த நிலத்தின் அழகுக்கும் மகிமைக்கும் பூமியில் நான் பார்த்த யாதொன்றையும் ஒப்பிட முடியாது. ஆனால நாம் அதை அடைந்து கொள்ள கூடுமோ என்பதே எங்கள் ஆதிரமுள்ள கேள்வியாய் இருந்தன. கயிறு அறுந்து போனாலோ எங்களுக்கு நாசமே. திரும்பவும் வ்யாகூலதுடன் ஒருவரை ஒருவர் ரகசியமாய் “கயிறாய் பிடிதிருப்பதென்ன?” என்று கேட்டோம். LST 92.3
துணிந்து தாவுகிறதற்கு சற்று திகைத்து நின்றோம்.பிறகு நாங்கள், “கயிற்றை முழுவதுமாய் நம்புவது தான் நம்முடைய ஒரே நம்பிக்கை. கஷ்டமான பாதை நெடுகிலும் அது தான் நமது தஞ்சமாய் இருந்திருக்கிறது. இப்பொழுது அது நம்மைக் கை விடாது” என்று ஓலமிட்டோம். இன்னும் நாங்கள் க்லேசதுடன் தடுமாறி தான் நின்றோம். பிறகு தேவன் “கயிற்றைப் பிடித்திருக்கிறார் நாம் பயப்பட வேண்டியதில்லை” என்று வார்த்தைகள் பேசப் பட்டன. எங்களுக்கு பின்னே இருந்தவர்கள் அதே வார்த்தைகளை மறுபடியும் சொல்லிக் கொண்டு, “அவர் இப்போது நம்மைக் கை விட மாட்டார். இது மட்டும் அவர் நம்மை பத்திரமாய்க் கொண்டு வந்திருக்கிறார்” என்றார்கள். LST 93.1
பிறகு என் புருஷன் தாஎம் ஒரே தாவில் பயங்கர பாதாளத்தை தாவி அவ்அழகிய நிலத்தில் போய் நின்றார். பின்னே உடனே நானும் தாவினேன். ஓதேவன் நமாக்கு அருளிய ஆறுதலுக்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அடைந்த வெற்றிக்காக தேவனுக்கு செலுத்தப் பட்ட ஸ்துதியின் சத்தங்களை நான் கேட்டேன். நான் பூரண சந்தோசம் அடையலானேன். LST 93.2
நான் விழிததும் அக்கஷ்டமான பாதையை கடந்து செல்வதில் நான் அடைந்த கவலையினாலும் வருததிநாலும் என் சரீரத்தில் உள்ள நரம்பு இல்லம் நடுக்கம் அடைந்திருந்தைக் கண்டேன். இசொப்ப்னத்தை விஸ்தரிக்க வேண்டிய தில்லை. எனக்கு நியாபகம் இருக்கும் மட்டும் அதில் உள்ள சங்கதிகளை எல்லாம் நான் ஒரு பொழுதும் மறவாதிருக்கும் பொருட்டு அது என் மனதின் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்தது. LST 93.3
* * * * *