எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
பதினேழாம் அத்தியாயம்—அசைவு
சிலர் பலத்த விசுவாசதொடும் வேதனை உள்ள கூக்குரலோடும் தேவனை நோக்கி மன்றாடுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகங்கள் வெளுத்து அவர்களுடைய மனத்தின் போராட்டத்தை வெளிப்படுத்தும் விசனமும் கவலையும் அடைந்திருந்தது. உறுதியும் பெரிய ஊக்கமும் அவர்களுடைய முகங்களில் விளங்கிற்று. வியர்வையின் பெருந்துளிகள் அவர்களுடைய நெற்றிகளில் இருந்து விழுந்தன. வேளா வேளைகளில் அவர்களுடைய முகங்கள் தேவ உலகின் அடையாள குறிகளினால் பிரகாசம் அடைந்திருக்கும். பிறகு திரும்பவும் பக்தி வினயமும் ஊக்கமும் கவலையும் உள்ள பார்வை காணப்படும். LST 84.2
அவர்கள் கண்கள் தங்களைச் சுற்றஈ உள்ள இருளைக் கவனிக்கவும் அவ்விதம் அவர்கள் தேவனை நம்பாமல் அவருக்கு விரோதமாய் முறு முறுக்கவும் தக்கதாக பொல்லாத தூதர்கள் இயேசுவை அவர்கள் பார்வைக்கு மறைத்து கொள்ளுகிற அந்த காரத்தால் அவர்களை சுற்றி நெருங்கினார்கள். அவர்கள் கண்கள் உயர நோக்கிக் கொண்டிருந்ததால் மாத்திரம் அவர்கள் தப்பினார்கள். தேவருடைய ஜனங் களைப் பாதுகாக்க தெய்வ தூதர்கள் கட்டளை பெற்று இருந்தார்கள். பொல்லாத தூதர்களின் கெட்ட காற்று கவலை நிறைந்த இவர்களை சுற்றி நெருக்கின போது அக்கனத்த இருளை போக்குவதற்கு பரம தூதர்கள் தங்கள் செட்டைகளை அவர்கள் மேல் ஓயாமல் வீசிக் கொண்டிருந்தார்கள். LST 84.3
ஜெபத்தில் நின்றவர்கள் இடைவிடாமல் ஊக்கமாய் மன்றாடின போது இடைக்கிடையே யேசுவிடம் இருந்து ஒரு ஒளி ரேகை வந்து அவருடய இருதயங்களை தைரியப் படுத்தி அவர்களுடைய முகங்களை பிரகாசிப்பித்தது. வேதனையுடன் போராடும் அவ்வேளையில் சிலர் பங்கு பெற வில்லை என்று நான் கண்டேன். அவர்கள் நிர்விசாரமும் அஜாக்ரதையும் உள்ளவர்களாய் காணப்பட்டார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி உள்ள இருளை எதிர்த்து நிற்காததினால் அது அவர்களை சுற்றிலும் கனத்த ஒரு மேகம் போல் மூடிக் கொண்டது. தேவ தூதர்கள் இவர்களை விட்டு விட்டு ஊக்கமாய் மன்றாடி நின்றோருக்கு உதவி செய்யப் போனார்கள். தங்கள் முழு பலத்தோடும் பொல்லாத தூத்ஹர்களை எதிர்த்து போராடினவர்களும் இடை விடாமல் தேவனை நோக்கி கோப்பிதூஉ தங்களுக்கு தாங்களே என்ற மட்டும் உதவி செய்யது கொள்ளும் படி பிரயாசப்பட்டவர்களுமானு அனைவருக்கும் சகாயம் புரிவதற்கு தேவ தூதர்கள் திவ் இரித்து சென்றதை நான் கண்டேன். ஆனால் எவர் எவர்ர் தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ள யாதொரு முயற்சியும் எடுக்கதிருந்தார்களோ அவர்களை தேவ தூதர்கள் விட்டு வீட்டாற்ற்கள். நான் அவர்களை பிறகு பார்க்கவில்லை. LST 85.1
நான் கண்ட அசைவின் அர்த்தம் என்ன என்று கேட்ட போது அது லவோதிகேயருக்கு உண்மையுள்ள சாட்சியின் ஆலோசனை படி கூறப்பட்ட நேர்ர்மையான சாட்சியினால் ஏற்படும் என்று எனக்கு காண்பிக்கப் பட்டது. இதை எவன் ஏற்றுக் கொள்ளுகிறானோ அவனுடைய இருதயத்தில் அது கிரியை செய்து பிரமாணத்தை உயர்த்தவும் நேர்மையான சத்தியத்தை காண்பிக்கவும் அவனை வழி நடத்தும். சிலர் இந்த நேர்மையான சாட்சியை போருக்க மாட்டார்கள். அவர்கள் அதற்கு விரோதமாய் எழும்புவார்கள். இதுவே தேவனுடைய ஜனங்களுக்குள் ஓர் அசைவை உண்டாக்குகிரதாய் இருக்கிறது. LST 85.2
உண்மையுள்ள சாட்சியினால் கூறப் பட்டது அரைவாசி கவனிக்கப் படவில்லை என்று கண்டேன். சபையின் கதையை தீர்மானிக்கும் அந்த பக்தி வினைய சாட்சி மொழி அற்பமாய் எண்ணப் பட்டிருக்கிறது. அல்லது முழுவதும் அவமதிக்கப் பட்டிருக்கிறது. இச்சாட்சி மொழி பூரண மணந திரும்புதலை உண்டாக்க வேண்டும். அதை உண்மையாய் ஏற்றுக் கொள்ளும் அனைவரும் அதற்கு கீழ்படிந்து சுத்தமாக்கப் படுவார்கள். LST 85.3
“கவனித்துக் கேள்” என்று தூதன் சொன்னான். சீக்கிரத்தில் நான் பலகீத வாத்தியங்கள் இன்னிசையுடன் இன்பமாய் தொனிக்கு ம்ப் போல ஒரு சத்தம் கேட்டேன். இதற்கு முன் கேட்டுள்ள எந்த கீத ராகமும் அதற்கு நிகர் ஆகாது. அன்றியும் அது இரக்கம் உருக்கம் நிறைந்து உள்ளதையும் பரிசுத்த சந்தோஷத்துடன் பரவசப் படுத்துகிற தாயும் இருந்தது. நான் பெரும் வியப்பும் பூரிப்பும் அடைந்தேன். “நோக்கிப் பார்” என்று தேவ தூதன் சொன்னான். அப்போது பலமாய் அசைக்கப் பட்டிருந்த முன்னான அக்கூட்டத்தை நான் திரும்பவும் பார்த்தேன். ஆவியின் வேதனையினால் முன்னால் அழுது ஜெபித்தோர் எனக்கு காண்பிக்கப் பட்டார்கள். அவர்களை சுற்றி பாது காத்திருந்த தேவ தூதர்களின் கூட்டம் இரட்டிப்பாயிற்று. பின்னையும் அவர்கள் சிரசு முதல் பாதாம் வரை ஒரு ஆயுதம் தரித்து இறந்தனர். போர் வீரரின் கூட்டத்தை போல அவர்கள் அணிவகுத்து சென்றனர். அவர்கள் சகித்த கடும் போரை மன வேதனையுடன் கடந்து சென்ற போராட்டத்தை அவர்கள் முக தோற்றம் வெளியிட்டது என்றாலும் கொடிய மன வேதனை அடைந்து காணப்பட்ட அவர்கள் முகங்கள் இப்போது பரம வெளிச்சத்தினாலும் மகிமையினாலும் பிரகாசித்தன. அவர்கள் ஜெயம் பெற்று இருந்தனர். அவர்கள் உள்ளத்தில் இருந்து ச்தொதிரமும் பரிசுத்த சந்தோஷமும் பொங்கிற்று. LST 85.4
இக்கூட்டதினரின் இலக்கம் குறைவு பட்டிருந்தது. சிலர் அசைக்கப் பட்டு வழியிலே விடப் பட்டனர். வெற்றி அடையும் இரட்சிப்பையும் தகுந்த விதம் மதித்து அதற்காக ஊக்கமாய் போராதினவர்களுடன் சேராதிருந்த அந்த நிர்விசாரிகள் அதை அடைய வில்லை. அவர்கள் பின்னல் இருளிலே விடப் பட்டார்கள். அவர்காளுடைய இடங்களை உடனே சத்தியத்தை பற்றிக் கொண்டு கூட்டத்தோடு சேர்ந்த மற்றாவர்கள் வந்து நின்றார்கள். பொல்லாத தூதர்கள் இன்னும் அவர்களை சுற்றி நெருக்கியும் அவர்கள் மேல் அவர்களுக்கு ஒரு வல்லமையும் இல்லாதிருந்தது. LST 86.1
ஆயுதம் தரித்திருந்தோர் மகா வல்லமையுடன் சத்தியத்தை கூறி அறிவிக்கிராதை நான் கேட்டேன். அது பலன் செய்தது. சில மனிவைகால் தங்கள் புருஷரோடும் சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரோடும் அனேகர் ஒன்று சேர்க்கப் பட்டார்கள். சத்தியத்தைக் கேட்க விடாமல் தடை செய்யப் பட்டிருந்த உத்தமன் இப்போது அதை ஊக்கமாய் கேட்டார்கள். இனத்தாரைப் பற்றிய பயம் எல்லாம் பறந்து போயிற்று.சத்தியம் மாத்திரம் அவர்களுக்கு அறிய பெரிய காரியமாய் இருந்தது. அவர்கள் சத்தியத்திற்காக பசியாகவும் தாகமாகவும் இருந்தார்கள். ஜீவனை விட அது அவார்களுக்கு அதிக அருமையாய் இருந்தது. இந்த பெரிய மாறுதல் உண்டானதற்கு முகாந்திரம் என்ன என்று நான் கேட்டேன். அதற்கு தூதன் சொன்னதாவது” அது பின் மாறியும் கர்த்தரின் சந்நிதானத்தில் இருந்து வரும் இளைப்பாறுதலும் மூன்றாம் தூதனுடைய பலத்த சத்தமுமாய் இருக்கிறது.” LST 86.2
தெரிந்து கொள்ளப்பட்ட இவர்களிடம் பெரிய வல்லமை இருந்தது. தூதன் நோக்கி பார் என்றான். நான் திரும்பி துன் மார்க்கரை அல்லது அவிசுவாசிகளை பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் அமைதல் இல்லை. தேவர்களுடைய ஜனங்கள் இடத்தில காணப்பட்ட வைராக்கியமும் வல்லமையும் அவர்களுடை கோவத்தை மூட்டி விட்டது. குழப்பம் எங்கும் குழப்பமாய் இருந்தது. தேவ வல்லமையும் வெளிச்சத்தையும் பெற்று இருந்த அக்கூட்டத்தினருக்கு விரோதமாக ஒழுங்குகள் செய்யப் பட்டத்தைக் கண்டேன். அவர்களை சுற்றி கனத்த இருள் மூடினது என்றாலும் அவர்கள் தவனால் அங்கீகரிக்கப் பட்டவர்களாய் அவரை நம்பி உறுதியாய் நின்றார்கள். அவர்கள் ததளிதிருந்ததை நான் கண்டேன். “தேவனே உமது சித்தம் ஆக கடவது. உமது நாமத்துக்கு மகிமை உண்டாக. உமது ஜனங்கள் தப்பிப் பிழைப்பதற்கான ஒறு வழியை உண்டாக்கி அருளும். எங்களை சுற்றி உள்ள புற ஜாதிகளின் நின்று எங்களை விடுவியும். அவர்கள் எங்களை மரணித்திற்கு என்று நியமித்திருக்கிறார்கள். அனால் உமது புயம் இரட்சித்து அருளக் கூடும்” என்று அவர்கள் இரவும் பகலும் கூபிடார்கள். சகலரும் தங்கள் அப்பத்திர தன்மையை ஆழ்ந்து உணர்ந்தவர்களாய் காணப்பட்டதும் அன்றஈ தேவன் உடைய சித்துக்கு பூரணமாய் கீழ்படிந்தும் காணப்பட்டார்கள். எங்கிலும் அவர்கள் ஒவ்வொருவரும் யாக்கொவை போல இரட்சிப்புக்காக ஊக்கமாய் ஜெபித்துப் போராடினார்கள். LST 87.1
அவர்கள் ஊக்கமாய் கூப்பிட ஆரம்பித்ததும் பரிதாபத்துடன் தேவ தூதர்கள் அவர்களை போய் விடுவிக்க விரும்பினார்கள். அனால் அதிகாரம் உள்ள நெட்டையான ஒரு தூதன் அவர்களை போக விட வில்லை. அவன் சொன்னதாவது “தேவ சித்தம் இன்னும் நிறைவேற வில்லை” அவர்கள் அந்த பாத்திரத்தில் பானம் பண்ண வேண்டும். அவர்கள் அந்த ஸ்நானத்தைப் பெற வேண்டும்.” LST 87.2
சீக்கிரம் வானங்களையும் பூமிகளையும் அசையச் செய்த தேவ சத்தத்தை நான் கேட்டேன். ஒரு பலத்த பூமி அதிர்ச்சி உண்டாயிற்று. எங்கும் கட்டங்கள் விழுந்தன. பிறகு நான் கம்பீர வெற்றியின் சத்தம் பலமாயும் தெளிவாயும் ராகத்துடனும் முழங்கக் கேட்டேன். சற்று நேரத்துக்கு முன்னால் எவ்வளவோ இடுக்களிலும் அடிமைத்தனத்திலும் இருந்த அக்கூட்டத்தை நான் பார்த்தேன். அவர்களுடைய சிறை இருப்பு நீங்கிற்று. மகிமையான ஒரு வெளிச்சம் அவர்கள் மேல் பிரகாசித்தது. அப்பொழுது அவர்கள் எவ்வளவு சிறப்பைக் காணப் பட்டார்கள். கவலை சோர்வின் குறிகள் எல்லாம் போய் அவர்களுடைய முகங்கள் சுகமாயும் சுந்தர வடிவமாயும் காணப்பட்டன. அவர்களை சுற்றிலும் உள்ள புற ஜாதிகளான அவர்களுடைய சத்ருக்கள் செத்தவர்கள் போல் விழுந்தார்கள். இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் மேல் பிரகாசித்த ஜோதியை சகிக்க கூடாதிருந்தது. இயேசு வானத்தின் மேகங்கள் மேல் காணப்படும் அளவும் இந்த வெளிச்சமும் மகிமையும் அவார்கள் மேல் நிலைதிருந்தது.. உண்மையுள்ள புடம் இட்ட அக்கூட்டத்தார் ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப் பொழுதிலே மகிமையின் மேல் மகிமை அடைந்து மறு ரூபமாக்கப் பட்டார்கள். கல்லறைகள் திறவுண்டன. பரிசுத்தவான்கள் அழியாமையை தரித்தவர்களாய் “மரணத்தின் மேலும் பாதாளத்தின் மேலும் ஜெயம்” என ஆர்ப்பரித்துக் கொண்டு வெளிப்பட்டனர். அன்றியும் அவர்கள் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களோடே தாங்கள் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டார்கள். அப்பொழுது மானிட நாவுகளில் இருந்து ஜெய கீதங்கள் இனிமையாய் எழும்பின. LST 87.3
* * * * *