எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

60/230

“ரிவியு அண்ட் ஹெரால்டு”

1850 நவம்பரில் அப்பத்திரிக்கை மெயின் மாகாணத்திலுள்ள பாரிசில் வெளியாகப்பட்டது. இங்கே அது பெரியதாக்கப்பட்டு இப்பொழுது அட்வேந்து ரிவியு அண்ட் சாபது ஹெரால்டு எனப்பட்ட நாமம் அதற்கு மாற்றப்பட்டது. நாங்கள் சகோதரர் A. வுடன் தங்கியிருந்தோம். அப்பத்திரிக்கை நடந்தேறும் பொருட்டு நாங்கள் சுளுவாய் பிழைக்கச் சித்தமாயிருந்தோம். சத்தியத்தை நேசித்தோர் தொகையில் சொற்ப பேரையும் உலக இஸ்வர்யத்தில் ஏழைகளாய் இருந்ததினாலும் நாங்கள் இன்னும் வறுமையோடும் பெரிய அதைரியத்தோடும் கிடந்து போராடும் படி கட்டாயபடுத்தப் பட்டோம். நாங்கள் அதிகக் கவலை அடைந்திருந்தோம். அச்சுப்பிழை பார்ப்பதற்கு அடிக்கடி நடுராத்திரி மட்டும் சில வேளைகளில் விடியற்காலம் இரண்டு மூன்று மணி மட்டும் விழித்திருந்தோம். LST 68.2

ஓயாமல் உழைத்து கவலையும் ஆத்திரமும் உள்ளவராய் இருந்ததினாலும் சத்துள்ள சரியான ஆகாரம் கிடையாதிருந்ததினாலும், பனிக் காலங்களில் நீண்ட பிரயாணங்கள் செய்ததினாலும், என் புருஷன் தாங்க ஒண்ணாபாரத்தினால் சோர்வடயலானார். அசாபிசுக்கு நடக்க முடியாதபடி அவர் அவ்வளவு பலவீனம் ஆனார். எங்கள் விசுவாசம் வெகுவாய் பரீட்சிக்கப் பட்டது. நாங்கள் கஷ்ட நஷ்டங்களை மனப்பூர்வமாய் சகித்தோம். என்றாலும் எங்கள் உள் நோக்கங்கள் தப்பர்த்தம் பண்ணப்பட்டன.; ஜனங்கள் எங்களை நிந்தித்துப் புறக்கணித்தார்கள். நாங்கள் அவர்களின் நன்மைக்கென்று கஷ்டப்பட்டோம். அவர்களில் ஒருவரும் எங்கள் முயற்சிகளை பாராட்டினதாய் தோன்றவில்லை. LST 68.3

நித்திரை செயவாதற்கோ அல்லத்ஹு இளைபாருவதற்கோ முடியாது, அவ்வளவு கஷ்டப்பட்டோம். நித்திரை செய்து இளைப்பாற வேண்டிய நேரங்களை அடிக்கடி பொறாமையினால் எழுதப்பட்ட நீண்ட நிருபங்களுக்கு பதில் அளிப்பதில் கழித்தோம். மற்றவர்கள் நித்திரை செய்கையில் நாங்கள் கர்த்தருக்கு முன்பாக விசனத்துடன் கண்ணீர் சிந்தி பல மணி நேரங்கள் செலவிட்டோம். கடைசியாக என் புருஷன் என்னை நோக்கி, “மனைவியே, இனி நாம் இப்படி கஷ்டப்பட்டு உழைப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இம்மட்டில் நான் நின்று விடுகிறேன். நான் அப்பத்திரிக்கையை இனி பிரசுரிக்கிரதில்லை என்று அச்சாபிசுக்க்கு எழுதிவிட்டேன்.” என்று சொன்னார். எழுதின கடிதத்தை எடுத்துக்கொண்டு அச்சாபிசுக்கு புறப்பட்டு போகையில் நான் மெய் மறந்து கிடந்தேன். அவர் திரும்பி வந்து எனக்காக ஜெபித்தார். அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. நான் விடுதலை பெற்றேன். LST 69.1

அடுத்த நாள் காலையில் நான் குடும்ப ஜெபத்தில் இருக்கையில் தரிசனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இக்காரியன்களைக் குறித்துப் போதிக்கப்பட்டேன். என் புருஷன் அப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாத்தான் பிரயாசப்பட்டுக் கொண்டும் தன தூதர்கள் மூலம் இதை செய்யும்படி கிரியை செய்து கொண்டும் இருந்தபடியினால், அவர் பத்திரிக்கையை நிறுத்த கூடாதென்று நான் கண்டேன். நாங்கள் அதை தொடர்ச்சியாக பிரசுரிக்கும் போது கர்ஹ்டார் எங்களை பராமரிப்பாரென்று எனக்க் காட்டப்பட்டது. LST 69.2

சீக்கிரம் பல மாகாணங்களில் கூடங்கள் நடத்தும்படி எங்களுக்கு அவசர அழைப்புகள் வந்தன. மசாசுசெஸ் மாகாணத்தை சேர்ந்த போச்டனிலும், கணக்டிக்கெட்டை சேர்ந்த ராக்கி ஹில்லிலும், நியூ யார்க்கை சேர்ந்த கம்டன், உவேச்டு மில்ட்டனிலும் கடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு போகும்படி நாங்கள் தீர்மானித்தோம். இவைகள் எல்லாம் வேலை விஷயமான கூட்டங்கலாயிருந்தாலும் சிதறியிருந்த நமது சகோதரர்களுக்கு மிகவும் பிரயோஜனமானவைகள். LST 69.3