எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
எட்டாம் அத்தியாயம்—ஓய்வு நாளும் பரலோக பரிசுத்தஸ்தலமும்
1864இல் மசாச்சுசெட்ஸ் மாகாணத்திலுள்ள நியூபெட் போர்டுக்கு போயிருக்கையில், நான் ஜோசப் பேட்ஸ் போதகருடன் அறிமுகமானேன். அவர் ஏற்கனவே அட்வெந்து விசுவாசத்தைப் பற்றிக் கொண்டு அதற்காக வெகு சுறுசுறுப்பாய் உழைத்தவர். அவர் மரியாதையும் அன்புமுள்ள ஓர் உத்தம கிறிஸ்தவ பக்தனாகக் காணப்பட்டார். LST 48.2
நான் பேசினதை அவர் முதல் கேட்ட போது அதிக ஊக்கத்தைக் காண்பித்தார். நான் பேசி முடித்ததும் அவர் எழும்பிச் சொன்னதாவது : “நான் சந்தேகிக்கும் ஓர் தோமா. நான் தரிசனங்களை நம்புகிறவனில்லை. ஆனால் இச்சகோதரி இன்றிரவு கூறின காட்சி மெய்யாய் நமக்கு தேவ சத்தமாயிருக்குமென நான் நம்பக் கூடுமாயின், ஜீவனுள்ளவர்களில் நானே மிக்க பாக்கியவானாக வேண்டும். என் உள்ளங் கலங்குகின்றது. பேசினவர் நேர்மையானவர் என்று நம்புகிறேன்; ஆனால் அவர் நமக்குச் சொன்ன அதிசயமான காரியங்கள் அவருக்குக் காண்பிக்கப்பட்ட தெப்படி என்பதைக் குறித்து நான் விவரித்துச் சொல்ல முடியாது.” LST 48.3
பேட்ஸ் போதகர் வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஓய்வை ஆதரித்து வந்தவராகையால் , அவர் அதுவே மெய்யான ஓய்வேன்பதாய் எங்களுக்கு ஊர்ஜிஹமாய்க் காண்பித்தார். நான் அதின் முக்கியத்தை உணராமல், அவர் மற்ற ஒன்பது கற்பனைகளையும் விட நான்காம் கற்பனையைப் பற்றி மாத்திரம் அதிகமாய்ப் பேசினது தப்பிதமென யோசித்தேன். LST 48.4
ஆனால் கர்த்தர் பரலோக பரிசுத்த தளத்தைக் குறித்து எனக்கு ஓர் தரிசனம் அளித்தார். பரலோகத்திலே தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. கிருபாசனத்தல் மூடப்பட்ட தேவ னுடைய உடன்படிக்கைப் பெட்டி எனக்குக் காட்டப்பட்டது. உடன்படிக்கைப் பேட்டியின் இரு முனைகளிலும் இரண்டு தூதர்கள் தங்கள் செட்டைகளைக் கிருபாசனத்தின் மேல் விரித்துக் கொண்டு தங்கள் முகங்கள் அதை நோக்கின வண்ணமாய் நின்றார்கள். இது, தேவனுடைய விரலால் எழுதப்பட்ட தேவனுடைய நியாயப் பிரமாணத்தை பரமசேனை எல்லாம் வணக்கமாய் நோக்கியிருப்பதைக் காட்டினதென்று என்னுடன் வந்த தூதன் சொன்னான். LST 48.5
இயேசு உடன்படிக்கைப் பேட்டியின் மூடியை உயர்த்தினார், அப்போது பத்துக் கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகளை நான் கண்டேன். பத்துப் பிரமாணங்களின் மத்தியில் நான்காம் பிரமாணமிருப்பதையும் அதைச் சுற்றிலும் பசுமையான ஒளி வீசுவதையும் நான் கண்டு பிரமிப்படைந்தேன். தூதன் சொன்னதாவது, “வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனைக் காட்டுவது பத்தில் அந்த ஒரே பிரமாணமே.” LST 49.1
பூமியின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட போது ஓய்வின் அஸ்திபாரமும் போடப்பட்டது. மெய்யான ஒய்வு கைக்கொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் ஒரு நாஸ்திகனாகிலும் அல்லது நிரீச்சுரவாதியாகிலும் இருந்திருக்க மாட்டான் என்று எனக்குக் காட்டப்பட்டது. ஓய்வுநாள் ஆசரிப்பு உலகத்தை விக்கிரகாராதனையினின்று காத்திருந்திருக்கும். LST 49.2
நான்காம் கற்பனை காலின் கீழ் மிதிக்கப் பட்டிருந்த படியால் நாம் நியாயப் பிரமாணத்தில் திறப்பானதை அடைக்கும்படிக்கும் பரிசுத்த குலைச்சலாக்கப்பட்ட ஒய்வுக்காகப் பரிந்து பேசவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தினவனும் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைத்தவனுமாகிய பாவ மனுஷன் ஏழாம் நாள் ஓய்வை வாரத்தின் முதலாம் நாளுக்கு மாற்றிவிட்டான். இப்படிச் செய்ததில் அவன் தேவனுடைய நியாயப் பிரமாணத்தில் ஓர் திறப்பை உண்டாக்கினான். தேவனுடைய பெரிய நாளுக்கு சற்று முன் அந்திக்கிறிஸ்து உடைத்துப்போட்ட தேவனுடைய நியாயப் பிரமாணமானத்திற்கு ஜனங்கள் மறுபடியும் அமைந்து நடக்க வேண்டுமென்று அவர்களை எச்சரிக்கும் பொருட்டு ஓர் தூது அனுப்பப்படுகிறது. போதனையினாலும் சாதனையினாலும் நியாயப் பிரமாணத்தில் உண்டாக்கப் பட்ட திறப்பிற்கு கவனம் இழுக்கப்பட வேண்டும். LST 49.3
ஏசாயா 58:12-12ல் சொல்லப்பட்ட அருமையான வாக்குத்தத்தங்கள் மெய்யான ஓய்வைத் திரும்பவும் ஸ்தாபிக்க உழைப்போருக்குத் தான் பொருந்துமென எனக்குக் காட்டப்பட்டது. LST 49.4
தேவனுடைய கற்பனைகளையும் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கூறியறிவிக்கும் மூன்றாம் தூதன், இத்தூதை ஏற்றுக் கொண்டு தேவனுடைய கற்பனைகளைக் கண்மணியைப் போல அவருடைய நியாயப் பிரமாணத்தைப் பாதுகாக்கவும் வேண்டுமென்று தங்கள் சத்தத்தை உயர்த்தி உலகத்தை எச்சரிக்கும் ஜனங்களைக் குறிக்குமென்று எனக்குக் காட்டப்பட்டது; இவ்வெச்சரிப்பைக் கேட்டு அநேகர் கர்த்தரின் ஓய்வை ஆச்சரிப்பார்கள். வெளி. 14:9-11 பார்க்க. LST 49.5
* * * * *