எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

40/230

சத்தியத்தின் பூரணவொழுங்கின் திறவுகோல்

1844ல் அடைந்த ஏமாற்றத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தினது பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய விஷயமே. அது சத்தியத்தின் வொழுங்குள்ள சத்தியங்களை ஒன்றுக்கொன்று இசைவிணைப்பு உள்ளதாய்க் காண்பித்து, தேவனுடைய கரமே அப்பெரிய அட்வெந்து இயக்கத்தை நடத்தினதென்றும் அவருடைய ஜனங்களின் நிலையும் வேலையும் இன்னதென்று வெளிப்படுத்தினபடியால் அவர்களுடைய தற்காலக் கடமை என்னவென்றும் தெரிவித்தது. இயேசுவின் சீஷர்களுடைய சொல்லொண்ணா விசனமும் எமாற்றமுமான அந்தப் பயங்கர அந்த பயங்கர இரவிற்குப் பின்பு “அவர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷ”மடைந்தது போல, அவருடைய இரண்டாம் வருகைக்காக விசுவாசத்தோடு எதிர்பார்த்திருந்தவர்கள் இப்பொழுது சந்தோஷப் படுகிறார்கள். அவர் தமது ஊழியக்காரருக்குப் பலனளிக்க மகிமையில் வெளிப்படுவாரென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் நம்பிக்கைகள் தவறிப் போனதில் இயேசுவை அவர்கள் காண முடியவில்லை.... இப்பொழுது அவர்கள் அவரை மறுபடியும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இரக்குமுள்ள தங்கள் பிரதான ஆசாரியாகவும் சீக்கிரத்தில் வெளிப்படவிருக்கும் தங்கள் ராஜாவும் மீட்பருமாகவும் கண்டார்கள். LST 46.1

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்த வெளிச்சம் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பிரகாசிப்பித்தது. தேவனுடைய தவறாத கரம் தங்களை நடத்தினதென்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஆதி சீஷரைப் போல அவர்கள் கொண்டு போன தூதின்னதென்று தெரிந்துகொள்ளக் கூடாதிருந்த போதிலும் அது சகல விஷயத்திலும் சரியான தூதாகத்தான் இருந்தது. அவர்கள் அதைக் கூறியவிதத்தில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினார்கள், அவர்கள் பட்ட பிரயாசங்கள் கர்த்தருக்குள் வீணாய்ப் போகவில்லை. “ஜீவனுள்ள நம்பிக்கையுண்டாகும்படி மறுபடியும் ஜெபிக்கப்பட்டவர்களாய் அவர்கள் சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் கனிகூர்ந்தார்கள்.” (1 பேது. 1:4,8) LST 46.2

“இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும் வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்று தானியேல் 8:14ல் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமும் “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என்று வெளி. 14:7ல் சொல்லப்பட்ட முதலாம் தூதனுடைய தூதுமாகிய இரண்டும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நடக்கும் கிறிஸ்துவின் ஊழியமாகிய நுட்ப நியாய விசாரணையைக் குறிப்பிட்டதே ஒழிய தமது ஜனங்களை மீட்டு இரட்சிக்கிறதற்கும் பொல்லாதவர்களை அழிக்கிறதற்கும் வரும் கிறிஸ்துவின் அந்த வருகையைக் குறிப்பிட்டதில்லை. LST 46.3

தீர்க்கதரிசன காலங்களைக் கணிப்பதில் தப்பிதம் ஏற்படாமல் 2300 நாட்களின் முடிவில் நடக்கும் சம்பவத்தில் நான் தப்பிதம் ஏற்பட்டது. இப்பிசகிலேயே விசுவாசிகள் எமாற்றமடைந்தார்கள். என்றாலும் தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப் பட்டதெல்லாம், அப்படி அவர்கள் எதிர்பார்க்க வேண்டுமென்று சொன்ன வேதவாக்கியங்க ளெல்லாம் நிறைவேறிற்று. LST 47.1