சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம் 10
நமது நீதியாகிய கிறிஸ்து
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவா. 1:9. CCh 171.1
நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக தாழ்த்தும்படி தேவன் விரும்புகிறார்; அதே சமயத்தில் நம்பும் எவரையும் கைவிடாத உருக்கமான தந்தையென நாம் அவரை நம்ப வேண்டும். நம்மில் அனேகர் விசுவாசித்து அல்ல, தரிசித்து நடக்கிறோம். காணப்படுகிறவைகளை நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் தேவ வசனத்தில் சொல்லப்பட்ட விலை மதியா வாக்குகளை நன்குமதிக்கிறதில்லை; மேலும் அவர் சொல்வதை நம்பாததினாலும், நம்மிடம் பற்றுடன் இருக்கிறரா அல்லது வஞ்சிக்கிறாரா என்று சந்தேகிப்பதினாலும் நாம் தேவனை அதிகத் திட்டமாய் அவமதிக்கிறோம். CCh 171.2
நமது பாவங்களினிமித்தம் தேவன் நம்மைக் கைவிட்டுவிடுவதில்லை. நாம் தவறு செய்து, அவருடைய ஆவியைத் துக்கப்படுத்தலாம்; ஆனால், நாம் மனந்திரும்பி, நொறுங்குண்ட இருதயத்தோடு அவரிடம் வரும்போது அவர் நம்மை புறம்பே தள்ளுவதில்லை. விலக்க வேண்டிய தடைகள் உண்டு. தப்பான எண்ணங்கள் பேணப்படுகின்றன. அகந்தை, சுயதிருப்தி, கோபம், முறுமுறுப்புகள் காணப்படுகின்றன. இவையாவும் நம்மைத் தேவனிடமிருந்து விலக்குகின்றன. பாவங்கள் அறிக்கை பண்ணப்பட வேண்டும். இருதயத்தில் கிருபை ஆழமாய்க் கிரியை செய்யவேண் டு. பெலவீனரென உணர்ந்து, அதைரியப் பட்டவர்கள் தேவனுக்கென பலத்த மனிதர்களாகி, ஆண்டவருக்கு நல்ல வேலை செய்யலாம். மிக உன்னத நோக்கத்துடன் நாம் உழைக்க வேண்டும்; தன்னல நோக்கம் தலைகாட்டக்கூடாது. CCh 171.3
கிறிஸ்துவின் கல்விச் சாலையில் நாம் கற்க வேண்டும். அவருடைய நீதியே யல்லாமல் வேறெதுவும் அவருடைய கிருபையாகிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கு நம்மை தகுதியாக்காது. நீண்ட காலமாய் ஆசித்து, இந்த ஆசீர்வாதங்களை அடைய முயன்றோம், ஆனால் அவைகளைப் பெறவில்லை. ஏனெனில் அவைகளைப் பெற நம் முயற்சியால் நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளலாமென்ப எண்ணினோம். இயேசு ஜீவனுள்ள இரட்சகர் என்று விசுவாசித்து, நம் சுயத்தை அப்புறப்படுத்தப் பார்த்ததில்லை. நம் சொந்த புண்ணியங்களும் குணமும் நம்மை இரட்சிக்காது; கிறிஸ்துவின் கிருபை மட்டுமே நம் இரட்சிப்பின் ஒரே நம்பிக்கை. கர்த்தருடைய தீர்க்கதிரிசி மூலம் அவர்: துன்மார்க்கண் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன், அவர் அவன் மேல் மனதுருகுவார், நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன் என்கிறார். ஏசா. 55:7. நாம் அந்தத் தெளிவான வாக்குகளை விசுவாசிக்க வேண்டும். உணர்ச்சியை விசுவாசமென ஒப்புக்கொள்ளக் கூடாது. நாம் முற்றிலுமாய்த் தேவனை நம்பி, இயேசு பாவத்தை மன்னிக்கும் இரட்சகர் என்று அவரைச் சார்ந்தால், நாம் விரும்பும் எல்லா உதவியும் நமக்குக் கிடைக்கும். CCh 172.1
நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள திராணியுள்ளவர்கள் போல நாம் நம்மையே உற்று நோக்குகிறோம்; ஆனால் இப்படி நாம் செய்யக் கூடாதவர்களாகையால் இயேசு நமக்காக மரித்தார். நம் நம்பிக்கை, நீதி, நீதிமானாக்கப்படுதல் யாவும் அவருக்குள் இருக்கிறது. இரட்சகரில்லையே, அவருடைய இரக்கம் நமக்கில்லையேயென நாம் பயந்து கலங்கக் கூடாது. கதியற்ற இந்நிலையில் நாம் அவரண்டை வரும்படி அவர் நம்மை அழைத்து, தம் வேலையை நாம் செய்யும்படியும் இரட்சிப்படையும் படியும் கேட்கிறார். நம் அவிசுவாசத்தினால் நாம் அவரைக் கனவீனம் பண்ணுகிறோம். நம்மை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரும், தம் மாபெரும் அன்புக்கு அத்தாட்சி கொடுத்தவருமாகிய நம் மிக முக்கிய நண்பரை நாம் நம்பத் தயங்குவது வியப்பை யுண்டாக்குகிறது. CCh 172.2
என் சகோதரரே, உங்கள் நற்குணம் உங்களைக் கடவுள் தயவுக்குப் பாத்திரராக்குமென்றும், அவருடைய இரட்சிப்பைப் பெறுமுன் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் எண்ணுகிறீர்களா? உங்கள் மனதில் இப்படிப்பட்ட போர் நடந்து கொண்டிருந்தால், நீங்கள் பலமுடைய முடியாதென்றும், கடைசியாக அதைரியப்பட்டுப் போவீர்களென்றும் அஞ்சுகிறேன். CCh 173.1
வனாந்தரத்தில் விஷ சர்ப்பங்கள் கலகஞ் செய்த இஸ்ரவேலரைக் கடித்தபோது மோசேயினால் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தைக் கடிபட்டோர் நோக்கிப் பார்த்து உயிரடையும்படி தேவன் கட்டளையிட்டாட். பரலோகம் ஏற்படுத்திய இப்பரிகாரத்தில் அநேகருக்கு நம்பிக்கையில்லாமற்போயிற்று. CCh 173.2
மரித்தோடும் மரிக்கும் தருவாயிலிருந்தவர்களும் தங்களைச் சூழ்ந்து கிடக்கக் கண்டனர்; தேவ உதவியின்று அழிவு நிச்சயமென உணர்ந்தார்கள். ஆயினும் தங்கள் பலம் போகுமளவும் தங்கள் காயங்கள் நோய், நிச்சயமரணம் இவைகளைக் குறித்ஹ்டுப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். சுகப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் கண்கள் சொருகப்பட்டுப் போயின. CCh 173.3
“சாப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷ குமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்.” யோவா. 3:!4, 15. நீங்கள் உங்கள் பாவங்களை உணர்ந்தால், உங்கள் சக்திகளை யெல்லாம் புலம்புவதில் செல்விடாமல், நோக்கிப் பார்த்து ஜீவியுங்கள். இயேசு தாம் ஒருவரே நம் இரட்சகர்; குணமடைய வேண்டிய கோடிக்கணக்கானவர்கள் அருளப்பட்ட இரக்கத்தை உதறித்தள்ளினாலும், அவருடைய புண்ணியங்களை நம்புகிற எவனும் நாசமடைய விடப்படான். கிறிஸ்துவையன்றி நாம் கதியற்றவர்களென உணரும்போது, நாம் அதைரியப்படக்கூடாது; சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரை நாம் சார்ந்திருக்க வேண்டும். திக்கற்று, பாவப் பிணியால் வருந்தும் அதைரியப்பட்ட ஆத்துமாவே, நீ நோக்கிப்பார்த்து, உயிர்பெறு. இயேசு தமது வாக்கை அருளியிருக்கிறார்; அவரண்டை வரும் யாவரையும் அவர் இரட்சிப்பார். CCh 173.4
இயேசுவண்டை வந்து, இளைப்பாறுதலும்க் சமாதானமும் பெற்றுக்கொள். இப்பொழுதே நீ அந்த ஆசிர்வாதம் அடையலாம். நீ நீர்ப்பந்த நிலையிலிருக்கிறாயென்றும், ஆசீர்வாதம் பெற முடியாதென்றும் சாத்தான் உனக்குச் சொல்லலாம். நீ கதியற்றவன் என்பது மெய்தான். ஆயினும் இயேசுவை அவன் முன் உயர்த்து. எனக்கு உயிர்த்தெழுந்த இரட்சகரிக்கிறார். அவரை நான் நம்புகிறேன்; அவர் என்னை கலங்கவிடார். அவர் நாமத்தினால் நான் வெற்றியடைகிறேன். அவர் என் நீதி; என் மகிழ்ச்சியின் கிரீடம் -- என்று சொல். தன் காரியம் மிக மோசமானதென்று எவரும் எண்ண வேண்டுவதில்லை. ஏனெனில் அது அப்படியல்ல. நீங்கள் பாவிகளும் அதமானவர்களென்றும் உணரலாம். ஆனால் இதே காரணம் தான் உங்களுக்கு ஓர் இரட்சகர் உண்டென்று கண்டால், அறிக்கையிடத் தாமதியாதேயுங்கள். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார். 1 யோவா, 1:9. நீதியினிமித்தம் பசி தாகம் அடை கிறவர்கள் திருப்தியடைவார்கள்; ஏனெனில் இயேசு அப்பட் வ்வாக்களித்திருக்கிறார். விலைமதிக்கப்பட இரட்சகர்! நம்மை ஏற்றுக்கொள்ள அவர் கரங்கள் ஆயத்தமாயிருக்கின்றன. அவருடைய மாபெரும் இருதயம் நம்மை ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறது. CCh 174.1
தங்களைச் சீர்திருத்திக்கொள்ள தவணை வேண்டுமென்றும், அப்படித் தாங்கள் சீர்திருத்த மடைந்தாலன்றி ஆசீர்வாதங்களைப் பெற முடியாதென்றும், சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், இந்த அருமையான ஆத்துமாக்கள் இப்பொழுதே அவருடைய ஆசீர்வாதங்களாஇ உரிமைபாராட்டிக் கேட்கலாம். தங்கள் பெலவீனங்களில் அவருடைய உதவியைப்பெற அவர்களுக்கு அவருடைய கிருபையும், கிறிஸ்துவின் ஆவியும் அவசியம்; இவை இல்லாமல் கிறிஸ்தவ குணம் உருவமையாது. நாம் உள்ளபடி பாவிகளாக, கதியற்றவர்களாக, உதவிநாடியவர்களாக அவரிடம் வரவேண்டுமென அவர் விரும்புகிறார். CCh 175.1
மனந்திரும்புதல், பாவ மன்னிப்பைப்போலவே கிறிஸ்துவுக்குள் தேவன் அருளும் ஈவாயிருக்கிறது. பரிசுத்த ஆவியின் ஏவுவதால் மட்டுமே நாம் நமது பாவங்களைக் குறித்து உணர்த்தப்பட்டு, மன்னிப்பு அவசியமென உணருகிறோம். நொறுங்குண்டவர்கள் மட்டுமே மன்னிப்பை அடைவார்கள்; ஆனால் தேவ தயவு தான் நம் இருதயத்தை பாவ உணர்ச்சிக்கு வழி நடத்துகிறது. அவர் நமது எல்லா பவவீனங்களையும் குறைகளையும் அறிந்தவராகையால் நமக்கு உதவு செய்கிறார். CCh 175.2
மனத்திரும்பி, பாவ அறிக்கை செய்கிற சிலர் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக் விசுவாசித்தாலும் தேவனுடைய வாக்குகளாஇ உரிமைப்பாராட்டி கேட்பத்தில்லை. இயேசு எப்பொழுதும் தங்களுடன் இருக்கும் இரட்சகர் என்பதை அவர்கள் காண்பதில்லை; தங்கள் இருதயங்களில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட கிருபையின் கிரியையை அவர் பூர்த்திச் செய்யட்டுமென தங்கள் ஆத்துமாவை அவர்கள் பூரணமாய் அவரிடம் ஒப்புவிப்பதில்லை. தங்களைத் தேவனிடம் ஒப்புவிப்பதாக எண்ணும்போதே, அவர்கள் பெரும்பாலும் தங்கள் மேல் சார்ந்து நிற்கிறார்கள். மனசாட்சியுடன் வாழும் அனேகர் பகுதி தேவனையும் பகுதி தங்களையும் சார்ந்து நிற்கிறார்கள். அவருடைய வல்லமையினால் காக்கப்படும்படி தேவனை நோக்கிப்பார்ப்பதில்லை, ஆனால் சோதனைக்குள்ளாகாமல் விழித்திருப்பது, அவருடைய அங்கீகாரத்திற்கென சில கடமைகளை நிறைவேற்றுவதுமானவைகளைச் சார்ந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட விசுவாசத்தில் வெற்றி இராது. இப்படிப்பட்டவர்கள் குறித்த நோக்கத்தோடு உழைப்பதில்லை; அவர்கள் ஆத்துமாக்கள் எப்போதும் அடிமைத்தனத்திலிருக்கின்றன. இயேசுவின் பாதங்களண்டை தங்கள் பாரங்களைப் போடும் வரை அவர்கள் இளைப்பாறுதல் அடைவதில்லை. CCh 175.3
இடையறா விழிப்பும், ஊக்கம், அன்பு படைத்த பக்தியும் தேவை; ஆனால் இவையாவும், ஆத்துமா விசுவாசத்தின் மூலம் தேவ வல்லமையினால் காக்கப்படும் போது இயல்பாகவே வரும். தேவ தயவைப் பெற வேறெவ்விதத்திலும் நாம் நம்மைப் பாராட்டிக் கொள்ளவே முடியாது. நம்மையும், நற்கிரியைகளையும் நாம் ஒருபோதும் நம்பக்கூடாது; ஆனால் நாம் தவறுகிறவர்களாகவும் பாவிகளாகவும் கிறிஸ்துவிடம் வரும்போது, அவருடைய அன்பில் இளைப்பாறுதல் காண்போம். சிலுவை நாயகர் புண்ணியங்களை நம்பி வருகிற எவரையும் தேவன் அங்கீகரிக்கிறார். இருதயத்தில் அன்பு உதிக்தெழும்புகின்றது. பிரமையற்ற, நிலையான, நிம்மதியான நம்பிக்கை உண்டாகிறது. ஒவ்வொரு பளுவும் இலகுவடைகிறது; ஏனெனில் கிறிஸ்துவின் நுகம் இலகுவானது. கடமை மகிழ்ச்சியாகவும், தியாகம் பரமானந்தமாகவும் மாற், முன் இருளாய்த் தோன்றிய பாதை நீதியின் சூரிய கதிர்களால் ஒளி பெறுகிறது. இதுவே கிறிஸ்து ஒளியிலிருப்பது போல ஒளியில் நடப்பதாகும். 2T. 91-95. CCh 176.1