சபைகளுக்கு ஆலோசனை

46/326

தன்னை ஒறுக்கும் ஆவி

தேவ குமாரனுடைய விலையேறப்பெற்ற தியாகத்தினால் இரட்சணியத் திட்டம் உறுதியாயிற்று. கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வரும் சுவிசேஷ ஒளி தன்னலத்தைக் கடிந்து, தயாள்த்தையும் உதார குணத்தையும் ஊக்குகிறது. கொடுக்கும்படி பல அழைப்புகள் வருவது பற்றி நாம் வருந்தக் கூடாது. தேவன் தமது பாதுகாக்கும் சக்தியினால் தமது ஜனத்தைக் குறுகிய சேவையிலிருந்து பெரும் சேவைக்கு அழைக்கிறார். தீய இருள் உலகைக் கவிந்துகொண்டிருக்கிற இக்காலத்தில் அளவு கடந்த முயற்சி தேவைப் படுகிறது. தேவனுடைய ஜனங்களில் அனேகர் லெளகீகத்தாலும் இச்சைகளாலும் இழுக்கப்படும் ஆபத்துக்களிலிருக்கிறார்கள். ஆகவே, தேவன் தமது இரக்கத்தினால் அவர்களுடைய பொருளுக்குப் பலவித தெய்வீகத்திட்டங்களை ஏற்படுத்துகிறார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவதூதன், உதாரக் கிரியைகளை ஜெபத்தோடு இணைத்து வைக்கிறான். உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது என்று அவன் கொர்நேலியுவைப் பார்த்து சொன்னான். அப். 10.4. 3 T. 405. CCh 160.2

உங்கள் வீடுகளில் சிக்கனத்தைக் கையாடுங்கள். அனேகரால் விக்கிரகங்கள் பேணப்பட்டு, வணங்கப்படுகின்றன. உங்கள் விக்கிரகங்களை விட்டெறியுங்கள். உங்கள் சுயநல இன்பங்களை விட்டுவிடுங்கள். உங்கள் வீடுகளை அலங்கரிக்க பணத்தை விரயஞ்செய்யாதீர்கள், என உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; எனெனில் அது கடவுள் பணம்; அதை அவர் உங்கள் கையில் கேட்பார். உங்கள் பிள்ளைகளைப் பிரியப்படுத்தும்படி பெற்றோரே, நீங்கள் கர்த்தருடைய பணத்தை அனாவசியமாக உபயோகிக்க வேண்டாம். உலக செல்வாக்கைப் பெருக்கி மாய்மால டாம்பீகத்தைத் தேடும்படி அவர்களுக்குக் கற்பியாதேயுங்கள். கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்களை இரட்சிக்க இது அவர்களை ஒருமுகப்படுத்துமா? இல்லை; பகை, பொறுமை, துர்ப்பிரசாரம் முதலியவைகளை பிறப்பிக்கும். ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அவசியப்படாத உலகப் பகட்டையும் ஊதாரித்தனத்தையும் பின்பற்றுவதில் உங்கள் பிள்ளைகள் போட்டியிடவும் கர்த்தருடைய பணத்தை அவைகளுக்காகச் செலவிடவும் ஏவப்படுவார்கள். CCh 161.1

உங்கள் அன்பு அவர்களுடைய அகந்தை, வீண்டம்ப வாழ்க்கை ஆவியவைகளை ஆதரிப்பதாக அவர்கள் எண்ணும் படி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பியாதேயுங்கள். பணத்தைச் செலவழிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க இது காலமல்ல. சிக்கனமாய் வாழ்வதில் உங்கள் திறமைகளை உபயோகியுங்கள். உங்கள் சுயநல நாட்டங்களை திருப்தி செய்யாமலும், உங்கள் நிதான புத்தியைக் கெடுக்கக்கூடியவைகளுக்காக பணத்தைக் செலவழியாமலும், அதற்குப் பதிலாக உங்களை வெறுத்து, புதிய இடங்களுக்குச் சத்தியம் செல்லும்படி ஊதியம் கொடுத்துதவுங்கள். புத்தி சாதுரியம் ஒரு தாலந்து; உங்கள் பொருளை ஆத்தும இரட்சணிய வேலையில் எப்படி பிரயோகிக்கலாமென யோசிக்கும்படி அத் தாலந்தை கையாடுங்கள். 6T. 450, 451. CCh 161.2

தங்களை ஒறுக்கிறவர்கள் பிறருக்கு நன்மை செய்கிறார்கள்; தங்களையும் தங்களுக்குள்ள யாவையும் கிறிஸ்துவின் சேவைக்கென தத்தம் செய்கிறவர்கள் சுயநலப்பிரியன் நாடுகிற இன்பம் வீண் என்பதைக் கண்டுகொள்வார்கள். உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளை யெல்லாம் வெறுத்துவிடாவிட்டால், அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். (லூக். 13:44.) அன்பு தற்பொழிவை நாடாது. கிறிஸ்துவின் ஜீவியத்தில் காணப்பட்ட பட்ச பாதமில்லா அன்பு, உதாரத்துவம் என்பவைகளின் கனி இதுவே. நமது இருதயத்தில் தேவ கற்பனை இருப்பின், அது உன்னதமும் நித்தியமுமான காரியங்களுக்கு நமது நாட்டங்களைக் கீழ்ப்படுத்தும்.3T. 397. CCh 162.1