சபைகளுக்கு ஆலோசனை
குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உண்டு
ஆண்களைப் போலவே பெண்கள் தேவனுடைய வேலையில் புளித்தமாவைப் போல் மறைந்திருந்து தேவ சத்தியங்களை வெளிப்படுத்தலாம். இந்த நெருக்கடியான நேரத்தில் கர்த்தர் அவர்கள் மூலமாக கிரியை செய்யத்தக்கதாக அவர்களுக்குரிய இடத்தைப் பெறலாம். வேலையின் உத்தர வாதத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்களானால், தேவ ஆவியின் வல்லமைக்குட்பட்டு ஊழியம் செய்வதற்கு அவர்களுக்கு அவசியமான சுயநம்பிக்கையைப் பெறுவார்கள். இந்த தற்தியாகமுள்ள பெண்மணிகள்மேல் மீட்பர் தமது திருமுகத்தைப் பிரகாசிக்க பண்ணுவார். இது அவர்களுக்கு ஆண்களைவிட அதிக வல்லமையை அளிக்கும். குடும்பங்களில் ஆண்கள் செய்யக்கூடாத ஓர் வேலையை பெண்கள் செய்யக்கூடும். அவர்கள் அவர்களின் உள்ளான ஜீவியத்தைத் தொடத்தக்க அளவுக்கு வேலை செய்யக்கூடும். ஆண்கள் நெருங்கமுடியாத அளவுக்கு இருதயத்தை நெருங்கி பெண்கள் ஊழியம் செய்யக்கூடும். அவர்கள் ஊழியம் அவசியம், பகுத்தறிவும், தாழ்மையுமுடைய சகோதரிகள் வீடுகளில் சென்று சத்தியத்தை விளக்கி நல்ல ஊழியம் செய்யக்கூடும். இவ்விதமாக விளக்கி காட்டப்படும் தேவ வசனம் தனது புளித்தமாவின் கிரியையைச் செய்து, அதன் செல்வாக்கினால் முழு குடும்பங்களும் மனந்திரும்பச் செய்யலாம். 9T.128,129. CCh 113.2
எல்லாரும் கடவுளுக்கு ஊழியம் செய்யலாம். சிலர் நேரமும், பொருளும், குடும்ப வேலையிலும், பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் செலவாகி விடுகிறது என போக்குச் சொல்லுகிறார்கள். பெற்றோரே, நீங்கள் ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்தில் வல்லமையும், திறனும் அதிகரிப்பத்ற்கு உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். பிள்ளைகள் கர்த்தருடைய குடும்பத்தின் இளைய அங்கங்கள். சிருஷ்டிப்பினாலும், மீட்பினாலும், அவருக்குச் சொந்தமாயிருக்கும் பிள்ளைகள் தங்களைக் கடவுளுக்குத் தத்தம் செய்யத்தக்கதாக வழி நடத்தப்படவேண்டும். அவர்களுடைய சரீர, ஆத்தும, மனோ சக்திகளெல்லாம் அவருடையதென்று போதிக்கப்படவேண்டும். சுய நலமற்ற பல துறைகளில் தொண்டாற்றும்படி அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படவேண்டும். அவர்கள் இடையூறாக இருக் காதபடிப் பாருங்கள். உங்களோட்ய் அவர்கள் ஆவிக்குரிய, சரீரத்திற்கடுத்த பாரங்களை சுமப்பதில் பங்கு கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்வதின் மூலம் அவர்களின் பிரயோஜனமும் சந்தோஷமும் அதிகரிக்கும். 7T,63. CCh 114.1
குடும்ப அங்கத்தினரிடையே கிறிஸ்துவுக்கான ஊழியம் ஆரம்பிக்கவேண்டும். கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட கல்விமுறைக்கு மாறுபட்ட கல்வி கொடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய சுபீட்சத்திற்கு இப்பொழுது இருப்பதைவிட அதிக உழைப்பு தேவை. இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த மிஷன் நாடு வேறு கிடையாது. போதனையாலும் சாதனையாலும் பெற்றோர் தம் பிள்ளைகள் மனந்திரும்பாதவர்களுக்காக உழைக்கும்படி போதிக்க வேண்டும். வயோதிபர், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், துயரப்படுவோர் ஆகியவர்களுக்குச் சகாயம் செய்யும்படி படிப்பிக்க வேண்டும். அவர்கள் சுவிசேஷ ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருக்கும்படிக் கற்பிக்கப்பட வேண்டும். அவர்களுடைய இளைமையிலிருந்தே பிறர் நலத்துக்கென தியாகஞ் செய்யவும் தன்னை வெறுக்கவும், கிறிஸ்துவின் ஊழிய முன்னேற்றத்திற்காக உழைக்கும்படியும் பழக்க வேண்டும். 6T. 429. CCh 115.1