சபைகளுக்கு ஆலோசனை

18/326

கர்த்தரை ஆராதிப்போம் வாருங்கள்

“... இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடி இருக்கிறார்களோ அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்று கிறிஸ்து சொன்னார். (மத்.18:20). எங்கெல்லாம் இரண்டு மூன்று பேர் விசுவாசிகள் இருக்கிறார்களோ அங்கே அவர்கள் ஓய்வுநாளில் ஒன்று கூடி தேவனுடைய வாக்கை நிறைவேற்ற அவரைக் கேட்பார்களாக. CCh 94.2

சிறு கூட்டங்களாக ஓய்வுநாளில் அவரைத் தொழுது கொள்ள கூடுகிறவர்கள் அவரது சிறந்த ஆசீர்வாதங்களை உரிமை பாராட்டிக் கேட்கலாம். கர்ததராகிய இயேசு அவர்களுடைய கூட்டத்தில் கண்ணிய மிக்க விருந்தினராக இருக்கிறார் என அவர்கள் நம்ப வேண்டும். ஓய்வுநாளை உண்மையுடன் ஆசரிக்கிற விசுவாசி ஓவ்வொருவனும் உங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்களை தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். (யாத்.31:13.) என்னும் வாக்கை தனதுரிமையாக்கிக் கொள்ளவேண்டும். 6T. 360-361. CCh 94.3

ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; லெளகீக ஜோலிகளிலிருந்து அவனது மனது விடுபட்டு தேவனுடைய நன்மையையும், மகிமையையும் சிந்தித்து ஆசீர்வாதம் அடையும்படி அது அவனுக்காக உண்டாக்கப்பட்டது. தேவனுடைய ஜனங்கள் அவரைப்பற்றி பேசும்படி ஒன்று கூடவும் தேவ வசனங்களின் கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்துகொள்ளவும், சற்று நேரம் ஜெபிக்கவும், ஓய்வுநாள் அவசியம். ஆனால் இவ்வாறு செலவிடும் நேரங்கள் ஓய்வுநாளிலும்கூட நீண்டதும் உற்சாகம் குன்றியதுமான நிகழ்ச்சிகளால் சோர்வுறச் செய்பவைகளாக இருத்தலாகாது. 2T. 583. CCh 95.1

போதகர் இல்லாத சமயங்களில் விசுவாசிகளில் ஒருவர் கூட்டங்களை நடத்தப் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் அவர் ஆராதனையின் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளவோ, பிரசங்கம் செய்யவோ அவசியமில்லை. சுருக்கமும் உற்சாகமுமான ஒரு வேதவாசகம் கொடுப்பது பிரசங்கத்தைப் பார்க்கிலும் அதிக பயன் தரும். இதைத் தொடர்ந்து ஜெபமும் சாட்சிக் கூட்டமும் நடைபெறலாம். CCh 95.2

ஓய்வுநாட் கூட்டங்களை அதிக கிளர்ச்சியுள்ளதாக்குவதற்கு ஒவ்வொருவரும் முயல வேண்டும். நீங்கள் வெறும் ஆசாரத்திற்காக கூடிவராமல், கருத்துக்களை பரிவர்த்தனஞ் செய்யவும் உங்கள் அனுதின அனுபவத்தைச் சொல்லவும், தோத்திரம் செலுத்தவும், தெய்வீக அறிவுறுத்தல்கள் பற்றிய உங்கள் வாஞ்சையை தெரிவிகக்வும். பிதாவையும் அவர் அனுப்பிய இயேசுக் கிறிஸ்துவையும் நீங்கள் அறிந்து கொள்ளவும், சபை கூடி வர வேண்டும். கிறிஸ்துவைக் குறித்து கூடி கலந்து பேசுவது, ஜீவியத்தில் வரும் போராட்டங்கள், பாடுகளைச் சகிக்க, ஆத்துமாவைப் பலப்படுத்தும். நீங்கள் தனித்து நின்று கிறிஸ்துவ வாழ்க்கை நடத்தலா மென்று எண்ணாதிருங்கள். ஒவ்வொருவரும் மனித சமுதாயமாகிய பிசூளூயூில் ஓர் இழை. ஒவ்வொருவரின் அனுபலவும் இன்னவகையானதென்று அநேகமாய் அவர்களைச் சேர்ந்தவர்களின் அனுபவத்தின் மூலம் தீர்மானிக்கப்படும். 361-362. CCh 95.3