சபைகளுக்கு ஆலோசனை

14/326

அத்தியாயம் 4

ஓய்வுநாள் ஆசரிப்பு

ஓய்வுநாள் ஆசரிப்பில் பேராசீர்வாதங்கள் அடங்கியுள்ளன; ஓய்வுநாள் நமக்கு ஓர் மனமகிழ்ச்சியான நாளாயிருக்க தேவன் விரும்புகிறார். ஓய்வுநாள் ஸ்தாபனமான பொழுது மகிழ்ச்சியுண்டாயிற்று. தமது கரத்தின் கிரியைகளை முடித்து கடவுள் திருப்தியடைந்தார். தாம் படைத்த யாவையும் நோக்கிப் பார்த்து: மிகவும் நன்றாயிருந்தது என்றார். ஆதி.1:31. CCh 85.1

வானமும் பூமியும் பூரிப்பால் நிறைந்திருந்தன, அப்பொழுது விடியர்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. யோபு.38:7. பாவம் பிரவேசித்து யாவையும் கறைப்படுத்திய போதிலும், அளவிடப்படாத நன்மையும் கிருபையும் பொருந்திய தெய்வம் யாவையும் படைத்தார் என்பதற்கு ஆதாரமாக அவர் நமக்கு ஓய்வுநாளை தந்தருளினார். ஓய்வுநாள் ஆசரிப்பு மூலமாக தம்மைப் பற்றிய அறிவை மக்களுள் பாதுகாக்க வேண்டுமென நம் பரம பிதா விரும்புகிறார். மெய்யான ஜீவனுள்ள தேவனை அறிவதற்கேதுவாக ஓய்வு நாள் நம் மனதை அவரிடம் திருப்பவும், அவரை அறிவதினாலே நாம் ஜீவனும் சமாதானமும் அடையும்படியாகவும் அவர் விரும்புகிறார். CCh 85.2

கர்த்தர், இஸ்ரவேலராகிய தம் ஜனத்தை எகிப்திலிருந்து விடுவித்து, அவர்களுக்குத் தம் பிரமாணத்தைக் கற்பித்த போது, ஓய்வுநாளை ஆசரிப்பதின் மூலம் அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரரிலிருந்து பிரத்தியேகப்பட்டவர்களாகக் காணப்பட வேண்ட்மென்று போதித்தார். இதனால் கடவுளைத் தங்கள் அரனாகவும் சிருஷ்டிகராகவும் ஏற்றுக்கொண்டவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குமுள்ள பாகுபாட்டை எடுத்துக்காட்டுவது ஓய்வுநாள் ஆசரிப்பாயிருந்தது. அது என்றென்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளக் கடவர்கள். (யாத். 31:17,16) என்று ஆண்டவர் உரைத்தார். CCh 85.3

இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்டு கானானில் பிரவேசித்தபோது, ஓய்வுநாள் இஸ்ரவேலை தனிப்பட்ட ஜனமாக காட்டும் ஒர் அடையாளமாயிருந்தது போல, இன்றும் அது உலகத்தைவிட்டு பரம கானான் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் தேவனுடைய ஜனத்தை பிரத்தியேகப்படுத்திக் காட்டும் ஓர் அடையாளமாயிருக்கிறது. தேவனுக்கும், அவருடைய ஜனத்திற்குமுள்ள உறவை காட்டி அவர்கள் அவருடைய கற்பனைகள் மதிக்கிறார்களென்பதற்கு அடையாளமாக ஓய்வுநாள் இருக்கிறது. அவரது மெய் பிரஜைகளுக்கும் மீறுகிறவர்களுக்குமுள்ள வித்தியாசத்தை அது காட்டுகிறது. CCh 86.1

மேகஸ்தம்பத்திலிருந்து ஓய்வுநாளைக் குறித்து கிறிஸ்து: நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப் படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். (எண். 31:13) என்று கூறினார். ஓய்வுநாள் கடவுளை சிருஷ்டிகர் என்று உலகத்துக்குக் காட்டுவதுபோல் அவரை பரிசுத்தப்படுத்துகிறவர் என்றும் காட்டுகிற அடையாளமாயிருக்கிறது. எல்லாவற்றையும் சிருஷ்டித்த வல்லமையே ஆத்துமாவை அவருடைய சாயலில் மீண்டும் சிருஷ்டிக்கிறது. ஓய்வுநாளை ஆசரிப்பவர்களுக்கு அது பரிசுத்தமாக்குதலின் அடையாளம். மெய்யான பரிசுத்தமாகுதல் தேவனோடு ஒன்றுபடுதலும் குணத்தில் அவரைப் போலாவதுமாகும். தேவனுடைய குணலட்சணத்திற்குப் பகர்ப்பாக உள்ள இலட்சியங்களுக்குக் கீழ்ப்படி வதின் மூலமாக தெய்வ சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகிறோம். ஓய்வுநாள் கீழ்ப்படிதலின் அடையாளம். நான்காம் கற்பனைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிபவன், முழுப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவான். கீழ்ப்படிதலின் மூலம் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். CCh 86.2

இஸ்ரவேலருக்கும்ப் போலவே நமக்கும் ஓய்வுநாள் நித்திய உடன்படிக்கையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய பரிசுத்தனாளைக் குறித்து பயபக்தியாயிருப்பவர்கள் தேவனால் தாங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதற்கு ஓய்வுநாள் ஓர் அடையாளமாயிருக்கிறது. தமது உடன்படிக்கையை அவர் நிறைவேற்றுவாரென்பதற்கு அது ஓர் உறுதிமொழியாயிருக்கிறது. தேவனுடைய ஆளுமையின் அடையாளத்தை அங்கீகரிக்கிற ஓவ்வொரு ஆத்துமாவும் அவருடைய தெய்வீக நித்திய உடன்படிக்கைக்குட் படுகிறான். கீழ்ப்படிதலாகிய தங்கச்சங்கிலியோடு அவர் தன்னை இணைத்துக் கொள்ளுகிறான்; அச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் ஒரு வாக்குத்தத்தமாய்ருக்கிறது. 6T. pp. 349-350. CCh 87.1