சபைகளுக்கு ஆலோசனை

326/326

ம்பிக்கையும் தைரியமுமுடைய பிரிவு மொழி

நான் நீண்டநாள் வாழப் போவதில்லை. என்னுடைய வேலை அனேகமாக முடிந்தது... நம்முடைய ஜனங்களுக்கு நான் அளிக்கும் சாட்சி மொழிகள் வேறு இராது என்று எண்ணுகிறேன். தேறிய மனதையுடைய நமது மனிதர் வேலையை உயர்வு பெறச் செய்து அதை உயர்வடையச் செய்யவும் மேற்கட்டடத்தை நிருமாணிப்பதற்கும் நன்மையான வற்றை செய்வதற்கு அறிவார். ஆயினும் தங்கள் இருதயத்திலே தெய்வ அன்புடையவர்களாகத் தெய்வ காரியங்களைப்பற்றிய ஆராயச்சியின் மிகுதியான ஆழங்களிலே அவர்கள் தங்களை ஈடுபடுத்துதல் வேண்டும். CCh 760.3

நம்முடைய பழைய சரித்திரத்தை புரட்டிப் பார்க்கும் பொழுது முன்னேறிய நமது தற்போதைய நிலையின் ஒவ்வொரு படியிலும் நின்று பிரயாணம் செய்த நான் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக் கூடும். கர்த்தர் செய்திருப்பதை நான் கண்டு வியப்பினாலும் கிறிஸ்துவாகிய தலைவரின் பேரில் கொண்டுள்ள நம்பிக்கையினாலும் நிறைந்திருக்கிறேன். நம்முடைய பழஞ் சரித்திரம் நிறைவேறிய காலங்களில் கர்த்தர் நமக்கு அளித்த போதனையையும் அவர் நம்மை நடத்திய வழியையும் மறந்து விடுவதால் அல்லாமல் நமது எதிர் காலத்தைக் குறித்து நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. LS 196. CCh 761.1