சபைகளுக்கு ஆலோசனை
தனியாள் பய பக்தியின் முக்கியத்துவம்
இன்று நாம் அந்தரங்க ஜெபத்தையும் வேதாகம வாசிப்பையும் அசட்டை செய்வோமானால், நாளையத்தினம் மனச்சாட்சியின் வாதனை எதுமின்றி அவற்றை நாம் ஒதுக்கி விடுவோம். ஒரு நல்ல விதையானது இருதயத்திலே விதைக்கப் பட்டு, செய்ய வேண்டிய பல காரியங்கள் விடப்பட்டிருக்கும். ஆயினும் பேணப்பட்ட ஒவ்வொரு ஒளியும் பெருமிதமான ஒளி அறுவடையைத் தரும் . சோதனையை ஒரு ழுறை எதிர்த்துவிடும்பொழுது மறு மறை அதிக உறுதியுடனே அதை எதிர்ப்பதற்கு பெலனளிக்கும். தன்னலத்தின் மேல் ஒரு முறை ஜெயமடைந்தால், உயர்வும் மேன்மையுமுடைய அனேக வெற்றிகளைப் பெறுவதற்கு அது அடிகோலும். அடையும் ஒவ்வொரு வெற்றியும் நித்திய ஜீவனுக்கென்று விதைக்கப்பெறும். 5T 120. CCh 728.3
தெய்வத்தினிடமாக உண்மையான இருதயத்துடனே நெருங்கிச் சேர்ந்து, விசுவாசத்துடனே தன்னுடைய வேண்டுதல்களை அவரிடம் ஏறெடுக்கிறவனுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்படும். ஜெபத்திற்கு உடனடியான பதிலை நீங்கள் பெற்றாலும் பெறாவிட்டாலும் உங்களுடைய விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும். தெய்வத்தின் பேரில் நம்பிக்கை வைப்பதற்கு அஞ்சாதீர்கள். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்” என்று கூறுகின்ற அவருடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயத்தின் பேரில் சார்ந்து கொள்ளுங்கள். யோவான் 16:24. CCh 729.1
கடவுளுடைய ஞானம் தவறாது. நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற தம்முடைய பரிசுத்தவான்கள் அடையாதபடிக்கு நன்மையான எதையும் அவர் நிறுத்தி வைக்க மாட்டார். மனிதர் தவறுகின்றனர். உண்மையுள்ள இருதயத்திலிருந்து அவர்களுடைய பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் தங்களுக்கு நன்மையானதையோ அன்றி தெய்வத்தை மகிமைப்படுத்துவதானதையோ கேட்பதில்லை. காரியங்கள் இவ்வாறிருக்கும் பொழுதும், ஞானமுள்ள நம்முடைய நல்ல தகப்பன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டு, சில சந்தர்ப்பங்களிலே அவற்றிற்கு உடனடியாகப் பதிலளிக்கின்றார், ஆயினும் நமக்கு மிகுந்த நன்மையைத் தருவதும், அவருடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வருவதுமானவற்றையே நமக்கு ஆசீர்வாதங்களை அருளுகின்றார். நாம் அவருடைய திட்டத்தைத் தெளிவாக அறியக் கூடுமானால், நமக்கு மிகுந்த நன்மையானது எதுவென்று அவர் அறிகிறாரென்றும் காண்போம். நாம் கேட்ட காரியத்தினால் நமக்குத் தீமையே உண்டாகுமென்றுணர்ந்து, நாம் கேட்டவற்றிற்குப் பதிலாக நமக்குத் தேவையான ஆசீர்வாதத்தை அருளுகின்றார். CCh 729.2
நமது பிரார்த்தனைகளுக்கு உடனடியான பிரதியுத்தரம் கிடைக்காதது போல நமக்குத் தோன்றினாலும், அவ நம்பிக்கை நம்மிலே தோன்றி, தெய்வத்தையும் நம்மையும் பிரிக்காதபடிக்கு நம்முடைய விசுவாசத்தை நாம் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசம் தளம்புமானால், நாம் அவரிடமிருந்து எதையும் பெற மாட்டோம். தெய்வத்தின் பேரில் நம்முடைய நம்பிக்கை பலமாக இருக்க வேண்டும். நமக்கு அத்தியாவசியமாகவிருக்கும் பொழுது, மழையைப் போலவே ஆசீர்வாதம் நமது பேரில் பொழியும். 1T 120, 121. CCh 730.1