சபைகளுக்கு ஆலோசனை
தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கள்
நாம் காலத்தின் முடிவைக் கிட்டிச் சேர்ந்துள்ளோம். பதில் அளிக்கும் கடவுளுடைய நியாயத் தீர்ப்புக்கள் பூமியிலே நிறைவேறுகின்றன. நடக்கப் போகிற சம்பவங்களைக் குறித்த எச்சரிப்பை கர்த்தர் நமக்கு அருளியிருக்கின்றார். கடவுளுடைய திரு வசனத்தின் வெளிச்சம் பிரகாசிக்கின்றது. இருள் பூமியையும் காரிருள் ஜனத்தையும் மூடுகின்றது. “அவர்கள் சமாதானம் சமாதானம் என்று கூறும் பொழுது அழிவு சடுதியாக அவர்கள் மேல் வரும். அவர்கள் தப்பிப் போவதில்லை.” 5T 99. CCh 711.2
தாம் விதித்திருக்கின்ற தடைகளை யெல்லாம் பூமியிலிருந்து கர்த்தர் அகற்றிப் போடுகின்றார். விரைவில் மரணமும், அழிவும், குற்றங்கள் அதிகரிப்பதும், கொடுமையும், எளியோருக்கு விரோதமாகத் தங்களை உயர்த்திக்கொண்ட ஐசுவரியவான்களுக்கு விரோதமான தீய கிரியைகளும் அதிகரிக்கும். கடவுளுடைய பாதுகாப்பு அற்றவராயிருப்போர் எவ்விடத்திலும் எந்நிலையிலும் பாதுகாப்பு அடையப்பெறார். உலகிலே கொல்லவும் காயப்படுத்தவும் மிகவும் அநீத சக்தி வாய்ந்த வல்லமையை உபயோகிப்பதற்கு மனித கரங்கள் பயிற்சியளிக்கப்பட்டு விஞ்ஞான ஆராய்ச்சிக்குரிய ஞானம் பயன் படுத்தப் பெறுகின்றது. 8T 50. CCh 712.1
தெய்வ நியாயத்தீர்ப்புக்கள் பூமியிலே விழுகின்றன. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும், நீரினாலும் நெருப்பினாலும் அழிவும் தோன்றப்போகும் ஆபத்துக் காலத்தின் முடிவு வரைக்கும் அதிகரித்துக் கொண்டே போகும். இவை யாவும் அக்காலம் மிகவும் சமீபமென்று காட்டுகின்றன. CCh 712.2
விரைவில் ஜாதிகளின் நடுவிலே மிகுதியான தொல்லை எற்படும். இயேசுவானவர் வருமட்டாக அத் தொல்லை நீங்காது. வானங்களிலே தம்முடைய சிங்காசனத்தை ஸ்தாபித்து அனைத்தையும் ஆண்டு ராஜரீகம் பண்ணுகிறவரைச் சேவிக்கும்படியாக ஒருபோதும் நாம் செய்திராத பிரகாரமாக ஒன்றுபட வேண்டும். தம்முடைய ஜனத்தைத் தெய்வம் கைவிடுகிறதில்லை. அவரை விட்டு நீங்காதிருப்பதே நம்முடைய பலமாகும். 3TT 286. CCh 712.3