சபைகளுக்கு ஆலோசனை
பூரணமாய் ஒப்புவித்தல் அவசியம்
சகோதரரே, நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்ற எழும்ப வேண்டுமென்று கர்த்தருடைய நாமத்தினாலே அறை கூவி அழைக்கிறேன். உங்கள் இருதயங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு இடங்கொடுக்கட்டும். தேவனுடைய வசனத்தின் போதனைகளுக்கு அப்பொழுது தான் அது இணங்க்க்கூடும். பின்பு நீங்கள் தேவனின் இரகசியங்களை அறிந்து கொள்ள முடியும். CCh 693.1
பக்தி வினயமான கிறிஸ்துவின் சாட்சி உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டும். வெளிப்படுத்தின விசேஷத்தில் விலையேறப் பெற்றதும், மகா உன்னதமுமான வாக்குத்தத்தங்கள் காணப்படுவது போலவே, பக்தி வினயமான பயங்கர எச்சரிப்புகளும் காணப்படுகின்றன. CCh 693.2
சத்தியத்தின் அறிவு உண்டெனச் சொல்லுகிறவர்கள் கிறிஸ்துவானவர் யோவானுக்குக் கொடுத்துள்ள சாட்சிகளை வாசிக்க வேண்டாமா? இங்கு உத்தேச அபிப்பிராயமோ, விஞ்ஞான ஏமாற்றமோ கிடையாது. இங்கு நிகழ்கால, வருங்கால, நல் வாழ்வுக்கான சத்தியங்கள் இருக்கின்றன. கோதுமைக்கு முன்பாகப் பதர் எங்கே நிற்கும்? CCh 693.3
கர்த்தர் சீக்கிரம் வருகிறார். தேவனால் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சீயோன் மதில் மேல் நிற்கும் சாமக்காரர்கள் அழைக்கப்படுகிறார்கள். உல கத்திற்கான கடைசி எச்சரிப்பின் தூதாகிய இராக் காலம் பற்றி ஆவியின் வல்லமையால் அறிவிக்க சாமக்காரர்களை அழைக்கிறார். தூங்கித் தூங்கி மரண நித்திரை கொள்ளாதபடிக்கு ஆண்களையும், பெண்களையும் தட்டி எழுப்புவதற்காக காவற்காரரைத் தேவன் அழைக்கிறார். 8T 301, 302, 304. CCh 693.4