சபைகளுக்கு ஆலோசனை
அடக்கமற்ற பேச்சின் அபாயம்
தேவ பிரமாணத்திற்கு எதிரிடையில்லா தேச சட்டங்களுக்கு ஒத்துப்போகும்படி ஜனங்களுக்கு உபதேசி. 9T 238. CCh 668.5
நமது சகோதரர் பேசின, எழுதின காரியங்கள் சர்க்காருக்கும் சட்டத்திற்கும் முரண்பட்டவை என சிலர் வியாக்கியானப்படுத்திக் கூறுகின்றனர். இவ்விதம் நன்மை தப்பர்த்தப்படுத்த இடங்கொடுப்பது தவறு. சர்க்கார் அதிகாரிகளின் தவறுதல்களைக் காணத் தேடியலைவது புத்திசாலித்தனமன்று. தனி ஆளையோ, ஸ்தாபனங்களையோ தாக்குவது நமது வேலை அல்ல. அரசியல் அதிகாரிகளுக்கு நாம் எதிரிடை என நாம் நம்மை அர்த்தப்படுத்த இடங்கொடாதபடி சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். நாம் முன்னேறிப் போரிட வேண்டியவர்கள் என்பது மெய் தான். ஆனால் “கர்த்தர் சொல்லுகிறார்” என்ற தெளிவான வார்த்தைகளில் நமது ஆயுத பலம் இருக்க வேண்டும். கர்த்தருடைய மகா நாளுக்கென்று ஒரு ஜனத்தை ஆயத்தப் படுத்துவது நமது வேலை. நமது விசுவாசத்தைச் சேராதவர்களால் ஊக்கப்படும் எதிரிடைக்கும், ஆதரிக்கப்படும் கலகத்திற்கும் அருகே நாம் சென்று விடலாகாது. நாம் அஜாக்கிரதையாக குறை கூறும் குணமாகக் காணப் படும்படி பேசி எழுதியவைகளை நமது சத்துருக்கள் எடுத்து, நமக்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறும் காலம் வரும். அவ்வித வார்த்தைகளுக்குக் காரணமானவர்களை மட்டும் குற்றப்படுத்தாமல், அவற்றினிமித்தம் அட்வென்டிஸ்தர் அனைவரையும் குற்றஞ் சாட்டுவார்கள். அரசாங்க சட்டங்களுக்கு எதிரிடையாக நம் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு தேதியில் இவ்விதமாகச் சொன்னார் என குற்றம் சுமத்துவார்கள். நமக்கு எதிரிடையான எத்தனை காரியங்களை அவர்கள் பேணி வந்திருக்கிறார்கள் என்பதைப்பார்த்து அனேகர் பிரமிப்படைவார்கள். தாங்கள் சொல்லாத கருத்துக்களைக் கொடுக்கும் படியாகத் தங்கள் வார்த்தைகள் திரிக்கப்படுவதைக் கேட்டு அனேகர் வியப்படைவர். CCh 668.6
நமது ஊழியர் எப்பொழுதும், எச்சூழ் நிலையிலும், சர்வ ஜாக்கிரதையுடன் பேசுவார்களாக. எல்லா ஆத்துமாக்களையும் பரிசோதிக்கும் மகா உபத்திரவ காலத்திற்கு முன் கூட்டியே தங்கள் எண்ணமற்ற பேச்சுகளினால் அவ்வுபத் திரவ காலத்தை வருவித்துக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருப்பார்களாக. CCh 669.1
நாம் எவ்விதம் காணப்படுகின்றோமோ அதைக் கொண்டு உலகம் நம்மை நியாயந்தீர்க்கும் என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சீடர்கள் ஒவ்வாத குண லட்சணங்களை வெளிக் காட்டாதபடி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். மக்கள் முன் நிற்பதற்கு முன்பு, உயர இருந்து தூய ஆவி நமது பேரில் ஊற்றப்பட்டதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆவி ஊற்றப்படும் பொழுது, நாம் திட்டமான தூதைக் கொடுப்போம், சிலர் கொடுப்பதினின்றும் கண்டனமற்ற வார்த்தைகளாக அவை இருக்கும்; விசுவாசிக்கிறவர்கள் நமது எதிராளிகளின் இரட்சிப்பைக் குறித்து அதிக ஊக்கமுள்ளவர்களாவார்கள். அதிகாரிகளையும், சர்க்காரையும் கண்டிப்பதை தேவ பொறுப்பில் விடுங்கள். சாந்தத்தோடும், அன்போடும் அவருடைய உண்மையான வீரர்கள், கிறிஸ்துவில் உள்ளபடி சத்தியத்தின் இலட்சியங்களுக்காக போராடட்டும். 6T 394-397. CCh 670.1