சபைகளுக்கு ஆலோசனை

281/326

அனைவரும் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய ஊழியம்

நம்முடைய உலகிலே சத்தியத்திற்கு எதிராக இருக்கும் துவேஷத்தை மாற்றுவதற்கு செய்யப்பட வேண்டிய வைத்திய மிஷனெரி ஊழியத்துடனே சுவிசேஷத்தை அறிவிக்கும் போதகர்களும் ஐக்கியப்பட்டுச் செயலாற்ற வேண்டும். CCh 653.2

நோயை எவ்வாறு குணப்படுத்துவதென்று ஒரு சுவிசேஷ ஊழியர் அறிந்திருந்தால் அவர் தன்னுடைய ஊழியத்திலே இரட்டிப்பான சித்தியுள்ளவராயிருப்பார். CCh 653.3

ஜனங்கள் இருக்கிற இடத்திலே அவர்களுடைய அந்தஸ்து யாதாயினும், நிலை யாதாயினும், எவ்வகையிலும் அவர்களுக்கு உதவி அளிப்பதே சுவிசேஷ ஊழியம். நோயடைந்திருப்போரின் வீடுகளில் ஊழியர்கள் பிரவேசித்து, “நான் உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். என்னால் முடிந்ததை நான் செய்வேன். நான் வைத்தியன் அல்ல. ஊழியனே. நோயடைந்தோருக்கும், துன்பமடைந்தோருக்கும் ஊழியம் செய்ய நான் விரும்புகிறேன்” என்று சொல்ல வேண்டியது ஆகலம். சரீர நோய் அடைந்தவர்கள் அனேகமாக ஆத்தும நோயும் உடையவர்களாகயிருப்பர். ஆன்மா நோய்வாய்ப்படும் பொழுது சரீர வியாதியும் உண்டாகிறது. சுவிசேஷ ஊழியத்தையும் வைத்திய ஊழியத்தையும் வெவ்வேறாகப் பிரிக்கக் கூடாது. சுவிசேஷ ஊழியரைப் போன்று வைத்தியனும் ஊக்கமுடன் திருத்தமாகவும், ஆன்ம இரட்சிப்பிற்காகவும் சரீரம் குணமாக்கப்படவும் உழைக்க வேண்டும். மனதையும் சரீரத்தையும் குணமாக்குவதற்கு இளைஞருக்குப் பயிற்சி அளிப்பதின் பயனை அறியாத சிலர், நோயாளிகளைக் குணமாக்குவதற்குத் தங்கள் நேரத்தை செலவிடுகின்ற வைத்திய ஊழியர்களின் ஆதரவுக்கென்று தசமபாகம் செலவிடப்படக்கூடாது என்று கூறுகிறார்கள். இத்தகைய கூற்றுகளுக்குப் பதிலாக காரியத்தின் உண்மையை அறிந்து கொள்ளாதபடி மனதானது குறுகியிருக்கக்கூடாதென்று சொல்லுமாறு கட்டளை பெற்றேன். வைத்திய ஊழியராக இருக்கும் சுவிசேஷ ஊழியர் சரீர நோய்களை குணமாக்குவதால் அதைச் செய்யக்கூடாத ஒருவரைப் பார்க்கிலும் அதிக திறமை உடையவராக விளங்குவார். சுவிசேஷ ஊழியராக அத்தகையர் செய்யும் ஊழியமானது அதிக நிறைவு உடையது. CCh 653.4

வேறு ஊழியர்கள் பிரவேசிக்க முடியாத நமது பட்டணங்களிலே வைத்தியராகப் பயிற்சி பெற்ற ஊழியர் பிரவேசிப்பார்களென்று கர்த்தர் கூறுகிறார். ஆரோக்கிய சீர்திருத்த தூதைக் கற்பியுங்கள். இத் தூது ஜனங்களிடைய செல்வாக்குடையதாகும். CCh 654.1

நல் அறிவுடைய வைத்தியர் ஒருவர் வேதாகம இலட்சியங்களை எடுத்துக் கூறுவது அனேகர் மனதில் மிகுந்த பலனை உண்டுபண்ணும். வைத்தியர் ஒருவருடைய ஊழியத்தையும் சுவிசேஷ ஊழியம் செய்வதையும் தன்னுடைய செல்வாக்குடனே ஒன்று படுத்தும் ஒருவரிடத்திலே திறமையும், சக்தியும் அடங்கியிருக்கிறது. அவருடைய ஊழியம் நல்லதென்று ஐனங்களே நிதானிக்கின்றனர். CCh 655.1

இவ்வாறு நம்முடைய வைத்தியர்கள் உழைக்க வேண்டும். அவர்கள் சுவிசேஷ ஊழியர்களாக ஊழியஞ்செய்து கர்த்தராகிய இயேசுவால் எவ்வாறு ஆன்மா சுகமடையுமென்று போதிக்கையிலே கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்துடனே நோயாளிகளுக்காக எவ்வாறு ஜெபிப்பதென்றும், அதே சமயத்திலே சரியான சிகிச்சை அளிக்கவும் வைத்தியர் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். அதே வேளையில் மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் சரீர ஆத்தும இரட்சிப்பையும் குறித்து போதிக்கிற கடவுளின் ஊழியர்களில் ஒருவராயும் அவர்கள் விளங்க வேண்டும். இத்தகைய ஊழியங்களின் ஒன்று கூடுதல் அவருடைய செல்வாக்கை மிகவும் விரிவாக்கும். MM 237-247. CCh 655.2

வைத்திய ஊழியமானது சத்தியம் செல்வதற்கான வாசலைத் திறக்கும். மிஷனெரி நர்சுகள் நிறைவேற்ற வேண்டிய அனேக விதமான ஊழியங்கள் இருக்கின்றன. நன்றாக பயற்சி பெற்ற நர்சுமார்கள் வீடுகளிலே சென்று சத்தியத்திலே ஆர்வத்தை எழுப்ப வகை தேடுவதற்கு அனேக தருணங்கள் இருக்கும். ஒவ்வொரு சமுதாயத்தின் நடுவிலும் எத்தகைய மார்க்கக் கூட்டங்களுக்கும் போகாத பெருந்திரளானவர் இருப்பர். இவர்களுக்குச் சுவிசேஷம் அறிவிக்கப் பட வேண்டியதானால், அவர்களுடைய வீடுகளுக்கு அதைச் சுமந்து செல்ல வேண்டியதாகும். பல தருணங்களில் அவர்களின் சரீர வேதனைகளை நீக்கும் ஒரே வழியினாலே மாத்திரம் அவர்களை நாம் அணுகமுடியும். மிஷனெரி நர்சுமார் நோயாளிகளைக் கவனித்து, எளிமைபட்டவர்களின் மன சஞ்சலத்தை நீக்கவும், அவர்களுக்கு வாசிக்கவும், இரட்சகரைக் குறித்து அவர்களிடத்திலே பேசவும் அனேக தருணங்கள் கிடைக்கும். இச்சையால் சீர்கெட்ட போஜனப் பிரியத்தை அடக்குவதற்குப் போதிய சித்த பலமற்றிருக்கும். உதவியற்ற இவர்களுடனே அவர்கள் ஜெபிக்கலாம். தோல்வியும் சோர்பும் அடைந்தவர்களின் வாழ்விலே நம்பிக்கையின் ஒளிக் கதிரை அவர்கள் அளிக்கலாம். தன்னல மற்ற அவர்கள் அன்பானது இத்தகைய பிரதி பலனை எதிர்பாராத பட்சமுள்ள கிரியைகள் மூலமாக வெளிப்பட்டு, துன்பமடைந்தவர்கள் கிறிஸ்து வானவரின் அன்பிலே நம்பிக்கை வைப்பதற்கு வழியை இலகு வாக்கும். CCh 655.3

விழுந்து போன நிலையிலிருந்து சரியான உழைப்பின் மூலம் கைதூக்கி விடப்படக் கூடியவர்களை, ஒரு காலத்திலே நற்சீருடையதாயிருந்த மனதும் பிரசித்தி பெற்ற தகுதியும் உடையவர்களாயிருந்தவர்களை அவர்கள் தாழ்ந்திருக்கும் சீர்கேடான ஆழங்களிலே வைத்திய மிஷனெரி ஊழியர் கண்டுபிடிப்பார். அனுதாபத்துடனே அவர்களைப் பராமரித்து அவர்களின் சரீர தேவைகளை அளித்த பின்பு இயேசுவானவரில் இருக்கிற பிரகாரமாக சத்தியத்தை மனிதருடைய மனது அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அத்தகைய ஆத்துமாக்களுக்காக ஊழியஞ்செய்கிற மனித ஏதுக்களுடனே ஒத்துழைக்கிறார். சிலர் தங்களுடைய மார்க்க விசுவாசத்திற்கு ஒரு அடிப்படை தோன்றுவதை விரும்புவர். CCh 656.1

சரீரம் உட்பிரவேசிப்பதற்கான வாசல்களைத் திறப்பதற்கு வலதுகரம் உபயோகமாகின்றது. இதைத்தான் வைத்திய மிஷனெரி ஊழியம் செய்ய வேண்டும். இக்காலத்திற்குரிய சத்தியத்தை மனிதர் ஏற்றுகொள்வதற்கு வழியை ஆயத்தம் செய்வதே இவ்வூழியம். கரங்களின்றி சரீரம் ஒன்றும் செய்யமுடியாது. சரீரத்திற்கு கனம் அளிக்கப்படுகையிலே அதற்கு உதவியாக இருக்கும் கரங்களுக்கும் கனம் அளிக்கப்பட வேண்டும். அவை மிகவும் முக்கியமான ஏதுக்கள், அவையன்றி சரீரம் ஒன்றும் செய்யக் கூடாது. எனவே வலது கரத்தின் உதவியை ஏற்க மறுத்து அதை அசட்டையாக நடத்துகின்ற சரீரம் எதையும் நிறைவேற்றாது. CCh 656.2

சுவிசேஷ இலட்சியங்களின்படி வாழ்ந்திருப்பது ஜீவனுக்கு ஏதுவான ஜீவ வாசனையாக இருக்கும். சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கிக்கிறவருக்கு அடைப்பட்ட கதவுகள் நல்லறிவுடைய வைத்திய ஊழியனுக்குத் திறக்கப்படும். சரீர வேதனையை நீக்குவதின் மூலமாக தெய்வம் இருதயங்களில் உட்பிரவேசிக்கிறார். மனதிலே சத்தியத்தின் வித்தொன்று ஊன்றப்பட்டு, தேவனால் நீர்ப்பாய்ச்சப்படுகிறது. இந்த வித்து உயிரடைவதற்கு அதிக காலமும், மிகுதியான பொறுமையும் தேவையாகலாம், முடிவிலே அது முளைத்து, நித்திய ஜீவனுக்கான பலனைக் கொடுக்கிறது. MM. 238-247. CCh 657.1