சபைகளுக்கு ஆலோசனை
அளவை மிஞ்சுதல் ஆரோக்கிய சீர்திருத்தத்திற்கு கேடானது
நமது மக்களில் சிலர் தகாத உணவுகளைப் புசிப்பதை மனப்பூர்வமாய் விட்டிருக்கையில், சரீர பாதுகாப்புக்கு அவசியமான தாதுக்களை தாங்களே உண்ணாமல் அசட்டை செய்கின்றனர்., ஆரோக்கிய சீர்திருத்தத்தில் அளவு மிஞ்சின கருத்துடையவர்கள் தங்களைத் திருப்தி செய்யாத சுவையற்ற சக்தியளிக்காத ஆகாரங்களை ஆயத்தஞ்செய்யும் ஆபத்துக்குள்ளிருக்கிறார்கள். விருப்பத்தை யூட்டி, போஷாக்கையும் கொடுக்கதக்க விதமாய் உணவு ஆயத்தம் செய்யப்பட வேண்டும். சரீரத்துக்குத் தேவைப் பட்டவைகளை உணவிலிருந்து நீக்குதல் கூடாது. உப்பு இரத்தத்துக்கு தீங்குவிளவிக்காமல் அத்தியாவசையமானதால் நான் எப்பொழுதும் கொஞ்சம் உப்பு உபயோகிப்ப்பதுண்டு. காய் கறிகளில் கொஞ்சம் பால் அல்லது பால் ஆடை, அல்லது அதற்குச் சமமான பொருள் ஏதாவது சேர்த்து அவைகள் உருசிகரமாகச் செய்யப்படவேண்டும். CCh 607.2
சிறு பிள்ளைகளால் தாராளமாய் உபயோகிக்கப்படும் முட்டைகளின் தீமையைப் பற்றியும், வெண்ணெய் மூலமாய் ஏற்படும் நோய்களின் ஆபத்துக்களைப் பற்றியும் எச்சரிப்புக் கொடுக்கப்பட்டிருக்கையில் நன்றாய் பாதுகாக்கப்பட்டுப் போஷிக்கப்பட்ட கோழிகளிலிருந்து வரும் முட்டைகளை உபயோகிப்பது சட்டத்தை மீறுவதெனக் கருதக் கூடாது. சில விஷயங்களைப் போக்கத்தக்க குணமாக்கும் ஏதுப்பொருள்கள் முட்டைகளில் அடங்கி இருக்கின்றன. CCh 608.1
சிலர் பால், முட்டை, வெண்ணெய், முதலியவைகளை விலக்குவதினால் சரீரத்திற்குச் சரியான போஷணையுள்ள ஆகாரத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றனர்; அதன் பலனாக அவர்கள் பலவீனப்பட்டு வேலை செய்ய சக்தியற்றவர்களாகி விடுகின்றனர். இவ்விதமாய் ஆரோக்கிய சீர்திருத்தம் நிந்திக்கப்படுகிறது. நாம் ஸ்திரமாக கட்ட முயற்சித்த வேலை தேவன் வேண்டாத அன்னிய காரியங்களோடு குழப்பப்பட்டிருக்கின்றது. அதிலும் சபையின் சக்திகள் ஊனமடைந்திருக்கின்றன. ஆனால் இவ்வித முரட்டுத்தனமாக கருத்துக்களின் பலன்களைத் தடுக்க கடவுள் குறுக்கிடுவார். பாவமுள்ள சந்ததியை கடவுளுக்கு இசைப்பண்ணுவதே சுவிசேஷம். அது ஐசுவரியவான்களையும், ஏழைகளையும் இயேசுவின் பாதத்தண்டை கொண்டு வருகிறதாயிருக்கிறது. CCh 608.2
நாம் இப்பொழுது உபயோக்கிற பால், பாலாடை, முட்டைகள் முதலிய உணவுப் பண்டங்களில் சிலவற்றை விலக்க வேண்டிய காலம்வரும். ஆனால், காலத்துக்கு முன் அளவு மிஞ்சின விலக்குத் திட்டங்களினால் நம் மெல் மனக்கலக்கத்தைக் கொண்டுவர அவசியமில்லை. சந்தர்ப்பம் வரு மட்டும் அதற்குக் காத்திருங்கள், அதற்காகக் கர்த்தர் வழியை ஆயத்தம் செய்கிறார். CCh 608.3
ஆரோக்கிய சீர்திருத்த திட்டங்களைக் கூறி அறிவிப்பதில் சித்திபெற விரும்புகிறவர்கள் தேவனுடைய வசனத்தைத் தங்கள் வழிகாட்டியாகவும், ஆலோசனைக் கர்த்தாவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கிய சீர்திருத்தத் திட்டங்களைப் போதிக்கிறவர்கள் இப்படிச் செய்யும் போது தான் அவர்கள் அனுகூல ஸ்தானத்தில் நிற்கின்றனர். நாம் விலக்கின தீமையை விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்குப் பதிலாக, உருசிகரமான முழுச் சத்து உணவை உபயோகிக்கத் தவறி ஒரு போதும் ஆரோக்கிய சீர்த்திருத்தத்துக்கு விரோதமாக சாட்சி பகராதிருப்போமாக. கிளர்ச்சியூட்டும் பொருள்கள் பேரில் உண்டாகும் ஆவலை எவ்விதத்திலும் ஊக்கப்படுத்தாதே. ஆரோக்கிய சீர்திருத்த ஒழுங்குகளுக்காக, தேவனுக்கு இடைவிடாது நன்றி செலுத்தி, சாதாரண, எளிய, முழுச் சத்துள்ள உணவை மாத்திரம் சாப்பிடு. எல்லாக் காரியங்களிலும் நேர்மையும் உண்மையுமாயிரு. அப்பொழுது நி விலைமதியா வெற்றிகளைப் பெறுவாய். CCh 609.1