சபைகளுக்கு ஆலோசனை
தாளிதம் பண்ணிய உணவுகள்
உலகத்தார் உபயோகிக்கும் காரப் பொருட்கள், ஜீரண சக்தியைக் குன்றச் செய்கின்றன். CD 339. CCh 580.5
இந்த துரிதமான காலத்தில், கிளர்ச்சியூட்டும் உணவைக் குறைத்தல் நல்லது. காரப் பொருட்கள் இயற்கையாகவே கெடுதியுள்ளவை. கடுகு, மிளகு, வாசனைத் திரவியம், ஊறுகாய், இன்னும் அத்தன்மை போன்ற பொருட்கள் இரைப்பைக்கு அழற்சி யுண்டாக்கி, இரத்தத்தைக் கெடுத்து, கொதிப்படையச் செய்கிறது. அழற்சியுள்ள குடிகாரனுடைய இரைப்பை மதுபானத்தினால் உண்டாகும் கெடுத்திக்கு ஓர் உதாரணமாகும். கிளர்ச்சி யூட்டும் காரப் பொருட்களினால், அவ்வித அழற்சி நிலைமை ஏற்படுகிறது. நாளடைவில் சாதாரண ஆகாரம் பசியைத் தணிப்பதில்லை. சரீரம் ஒரு தேவையை உணருகிறது. அதிகக் கிளர்ச்சி யூட்டும் மற்றப் பொருட்களை நாடுகிறது. MH 325. CCh 580.6
சிலர் தங்கள் நாவின் சுவையைப் பேணி வருகின்றனர். அவர்கள் நாட்டங்கொள்ளும் சுவையுடைய உணவுப்பொருள் அவர்களுக்குக் கிடைக்காவிடில், அவர்கள் சாப்பிடவிரும்புவதில்லை. காரப் பதார்த்தமும் வாசனையிட்ட உணவுகளும் அவர்களுக்கு முன் வைக்கப்படுமாகில், இந்தக் காரசாரப் பொருட்களைக்கொண்டு இரைப் பையை வேலை செய்யப் பண்ணுகின்றனர்; ஏனெனில், கிளர்ச்சியூட்டாத உணவை ஏற்றுக்கொள்ளாதபடி அது கையாளப்பட்டிருக்கிறது CD 340. CCh 581.1
வாசனைத் திரவியம், முதலாவது இரைப் பையின் உட் புறத்தில் சுற்றியிருக்கும் மெல்லிய சவ்வை உறுத்தி, பின்பு இந்த மெல்லிய சவ்வின் இயற்கை உணர்ச்சியை அழித்து விடுகின்றது. இரத்தத்தில் கொதிப்பு ஏறி, மிருகத் தன்மை கிளரப்பட்டு, சன்மார்க்க விவேக சக்திகள் பெலவீனமாக்கப்பட்டு, கீழ்த்தரமான இச்சைகளுக்கு அடிமைகளாகின்றனர். தாய் தன் குடும்பத்துக்கு முன் சத்துள்ள உணவை வைக்கும் படி கற்க வேண்டும். CH 114. CCh 581.2