சபைகளுக்கு ஆலோசனை
அறியாமையில் வளரச் செய்வது பாவம்
பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு அவசியமான மார்க்க கல்வியை அளிக்கத் தவறினதுமன்றி, அவர்களுக்கு பள்ளிக் கல்வியையும் அளிக்காது விட்டனர். இரு விதமான பயிற்சியையும் அளிக்க வேண்டும். குழந்தைகளின் மனது சுறுசுறுப்பாக் இருக்கும். சரீர உழைப்பில் ஈடுபடாதே போனாலும், மனப் பயிற்சியில் முழுதுமாக கவனம் செலுத்தாவிட்டாலும், அவர்கள் தீமையான செல்வாக்கின் வசப்படுவார்கள். பிரயோஜனமாதும், ஆவல் ஊட்டுகிறதுமான புஸ்தகங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட வேண்டும். வேலை செய்வதற்கும், உடல் உழைப்பு செய்வதற்கும், படிப்பதற்கும், வாசிக்கிறதற்கும் அவர்களுக்குக் கற்பிக்க வேண் டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளைன் மனதை உயர்வு படுத்தவும், அவர்கள் மனோதிறனை விருத்தி செய்யவும் வகை தேட வேண்டும். பண்படுத்தப்படாததும் தன் மட்டில் விடப்பட்டதுமான மனது பொதுவாக கீழ்த்தரமும், இழிவான ஆசையும் சீர்கேடும் உடையதாக இருக்கிறது. தனக்கு அளிக்கப்படும் தருணத்தை சாத்தான் பயன்படுத்தி, சோம்பலுள்ள மனதை விருத்தி செய்கின்றான். 1T 398, 399. CCh 512.2
பிள்ளை பிறந்தது முதலே தாயாரின் அலுவல் ஆரம்பமாகிறது. தன் குழந்தையின் சித்தத்தையும், மனதையும் அவள் அடக்கிக் கீழ்ப்படுத்தி, அது கீழ்ப்படியுமாறு கற்பிக்க வேண்டும். குழந்தை வளர வளர, இதை செய்து நிறைவேற்றுவதை விட்டு விடாதீர்கள். ஒவ்வொரு அன்னையும் தன் பிள்ளைகளோடு பேசி, எது சரியென்று எடுத்துக் காட்டி விளக்கி, தவறுகளை எச்சரித்து, சரியான வழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். கிறிஸ்தவப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தெய்வப் பிள்ளைகளாகும்படி போதனை கொடுக்கிறார்களென்று அவர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளின் மார்க்கானுபவம் முழுவதும், அளிக்கப்படும் போதனையைச் சார்ந்திருக்கிறது. குழந்தைப் பிராயத்திலேயே குணம் உருவாகிறது. அப்பொழுது சித்தம் அடக்கப்பட்டு, பெற்றோரின் சித்தத்திற்கு உட்பட்டாலொழிய, பிற்காலத்தில் இதைக் கற்றுக்கொள்வது கடினமான காரியம். அடக்கப்படாத சித்தம் தெய்வ கட்டளைகளுக்கு அடங்குமாறு எத்தகைய கடும் பிரயத்தனமும், போராட்டமும் நடத்த வேண்டியதாகிறது. இந்த முக்கியமான வேலையைக் கைவிடுகின்ர பெற்றோர் பெரும் தவறு செய்கின்றனர். தங்களுடைய ஏழைப் பிள்ளைகளுக்கும் தெய்வத்துக்கும் விரோதமாகப் பாவஞ் செய்கின்றனர். 1T 390, 391. CCh 513.1
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்விப் பயிற்சியை அளிக்கும் கடமையில் நீங்கள் தவறி னால், அதினால் ஏற்படும் விளைவுகளுக்காக நீங்கள் அவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த விளைவுகள் உங்கள் பிள்ளைகளுடனே மாத்திரம் சம்பந்தமுடையதாக இராது. நிலத்தில் ஒரு முள் முளைத்து, அதைப்போன்ரு அனேகம் உற்பத்தியாகிப் பெருகுவது போலவே, உங்கள் தவறுதல்களினால் உற்பத்தியாகும் பாவங்களினால் உங்கள் பிள்ளைகளுடனே தொடர்பு கொள்ளுகிறவர்களும், அவர்களுடைய செல்வாக்கிற்குட்பட்டவர்களும் நாசமடைவார்கள். CG 115. CCh 513.2
உண்மையற்றவர்களாக இருக்கும் பெற்றோர்கள் பேரில் தேவனுடைய சாபம் சுமரும். இவ்வுலகத்தில் அவர்களைக் காயப்படுத்தும் முட்களை அவர்கள் பயிர் செய்வது மட்டுமல்ல, நியாய சங்கம் உட்காரும்பொழுது, தங்களுடைய உண்மைக் குறைவிற்காக அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பிள்ளைகளில் அனேகர் அப்பொழுது எழுந்து, தங்களை அடக்கி வைக்காமல் போனதற்காக தங்கள் பெற்றோர் பேரில் குற்றம் சுமத்தி, தங்களுடைய அழிவிற்கு பெற்றோர் காரணம் என்று கூறுவார்கள். பெற்றோரின் குருட்டுத் தனமான அன்பும், போலி அனுதாபமும் பிள்ளைகளுடைய தப்பிதங்களை அவர்கள் எண்ணாதிருக்கவும், அவர்களைத் திருத்தாமல் விட்டு விடவும் செய்தது. அதின் விளைவாக பிள்ளைகள் இரட்சிப்பை இழந்தார்கள். அவர்களுடைய ஆத்துமாக்களின் இரத்தப் பழி உண்மைக் குறைவுடைய பெற்றோரையே சாரும். 1T 219. CCh 514.1