சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-44
வாலிபருக்கு வேண்டுகோள்
பிரியமுள்ள வாலிப நண்பர்களே, நீங்கள் விதைப்பது எதுவோ அதையே அறுப்பீர்கள். விதைப்புக்குரிய காலம் இதுவே. எத்தகைய அறுவடை ஏற்படும்? நீங்கள் எதை விதைக்கிறீர்கள்? நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நடப்பிக்கும் ஒவ்வொரு கிரியையும் நீங்கள் பலனையோ, கெட்ட பலனையோ தந்து, விதைப்பவர்க்கு சந்தோஷத்தையோ அல்லது துக்கத்தையோ விளைவிக்கும். போடப்பட்ட விதை போன்றே பயிரும் இருக்கும். கடவுள் பெரிய வெளிச்சத்தையும் அனேக சிலாக்கியங்களையும் உங்களுக்கு அளித்திருக்கின்றார். வெளிச்சத்தை அருளிய பிறகு, ஆபத்துக்களைக் குறித்து எச்சரித்த பிறகு, பொறுப்பு உங்களுடையதே. கடவுள் அருளும் மகிழ்ச்சியும் துன்பமும் உண்டாகக் காரணமாகலாம். உங்கள் முடிவை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். CCh 490.1
நீங்கள் அனைவரும் பிறர் மனதிலும் குண நலத்திலும் தீமைக்கேதுவான அல்லது நன்மைக்கேதுவான செல்வாக்கை உடையவர்களாயிருக்கிறீர்களென்று பரலோக புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுருக்கின்றது. ஒரு தேவதூதன் உங்களைக் கவனித்து, உங்களுடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் பதிவு செய்கின்றார். அதிகாலையிலே நீங்கள் விழித்தெழும்புகையில், உங்களுடைய பெலனற்ற நிலைமையை நினைத்து, தெய்வ பயம் தேவையென்று உணருகிறீர்களா? தாழ்மையுடனே உங்களுடைய தேவைகளை யெல்லாம் இருதய பூர்வமான பிரார்த்தனையின் மூலம் பரம பிதாவுக்கு தெரியப்படுத்துகிறீர்களா? நீங்கள் அவ்விதம் செய்தால் தேவ தூதர் கள் உங்கள் பிரார்த்தனையைக் கவனித்து, நீங்கள் உதட்டளவில் பிரார்த்திக்காமல் உண்மையான பிரார்த்தனை செய்திருந்தீர்களேயாகில், உங்களை அறியாமலே நீங்கள் தவறு செய்யும் அபாய நிலக்குட்பட்டு, பிறகும் தவறு செய்ய வழி நடத்துவதாக இருந்தால் உங்களுடைய காவல் தூதன் உங்கள் அருகில் நின்று, நீங்கள் நன்மை செய்வதற்கு தூண்டுதல் அளித்து, உங்கள் வாயில் சரியான வார்த்தைகளைப் போட்டு, உங்கள் கிரியைகளை யெல்லாம் மேம் பாடுடைய தாக்குவார். உங்கள் அபாய நிலையை நீங்கள் உணராமலும், சோதனைகள் எதிர்ப்பதற்கு அவசியமான பலத்திற்காகவும், உதவிக்காகவும் பிரார்த்திக்காமலும் இருந்தால், நிச்சயமாக நீங்கள் வழி தப்புவீர்கள். கடமையில் தவறினதற்கு உங்கள் பேரில் குற்றம் பதிவாகும். தீர்ப்பின் நாளிலே நீங்கள் குறையுள்ளவர்களாகக் காணப்படுவீர்கள். CCh 490.2
ஆவிக்குரிய காரியங்களில் போதனை பெற்றவர் சிலர் உங்களைச் சூழ உள்ளனர். சிலர் சீராட்டப் பெற்று, செல்வமாக வளர்க்கப் பெற்று முகஸ்துதியினாலும், நடை முறை வாழ்விற்கு இலாயக்கற்றவராக்கப் பெற்றனர். நான் அறிந்திருக்கிறவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். சீராட்டு, முகஸ்துதி, சோம்பேறித்தனத்தினாலும் அவர்களுடைய குணம் மாறுபாடுடைந்தால், அவர்கள் இவ்வாழ்விற்குப் பிரயோஜனமில்லாமல் போகின்றனர். இந்த வாழ்விற்கே பிரயோஜனமில்லாத போது, அனைத்தும் பரிசுத்தமும் தூய்மையும் உடையதாகவும் இலங்கி, அனைவருடனும் இசைந்து குண நலம் விளங்க வாழ்வதெபப்டி? இவர்களுக்காக நான் பிரார்த்திக்கின்றேன். அவர்களிடம் நேர்முகமாகவும் பேசியுள்ளேன். அவர்கள் தங்கள் செல்வாக்கினால் பிறர் மனதில் ஆடம்பரம், ஆடை மோகம், நித்திய காரியங்களைப் பற்றிய அசட்டை ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடுமென்று அறிகின்றேன். இந்த வகுப்பினர் தங்கள் விழிகளைக் கவனித்து, மேட்டிமையும் வீணனவைகளைச் சிந்திக்கிறதுமான தங்கள் இருதயங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கை யிட்டு மனம் திரும்புவதே இவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்க. 3T 363, 364. CCh 491.1