சபைகளுக்கு ஆலோசனை
ஆடையைத் தீர்மானிக்கும் இலட்சியங்கள்
பொதுப்படையாக கூறும்பொழுது, ஆடையும் அது அணியப் பெற்றிருக்கும் விதமுமே ஒரு ஆண் அல்லது பெண்ணின் குண நலத்தை அறிந்துகொள்ள உதவுகின்றது. CCh 482.1
ஒருவர் ஆடை அணியும் பாங்கு அல்லது விதத்தைக் கொண்டு அவருடைய குணம் இவ்விதமானதென்று கருதுகின்றோம். அடக்கமும், தெய்வ பயமுமுடைய ஒரு மாது அடக்கமான விதமாக ஆடையை அணிவாள். செம்மையான மனதின் சுவையும், பண்பட்ட மனதும் எளிய தகுதியுடைய ஆடையினால் வெளியாகின்றது. எளிமையும் வெளிவேஷங்கள் எதுவுமில்லாமலே ஆடை பணியும் பெண்மணியும் அவள் நடந்துகொள்ளும் விதமும், உத்தம ஸ்திரீ தனது சன்மார்க்கத்தினாலே அறியபப்டுவதை அவள் அறிந்திருக்கிறாள் என்று காட்டும்; எளிய முறையில் ஆடை அணிதல் மனதிற்கு எத்தனை இன்பமும் நலமுமாகத் தோற்றம் அளிக்கும்! அவ்விதமாக ஆடை உடுத்துவதினால் உண்டாகும் சோபிதம் காட்டு மலர்களின் அழகிற்கு நிகராகும். CCh 482.2
தேவனுக்கு முன்பாக நம்முடையவர்கள் கவனமாகவும் பொருத்தமாகவும் நடந்துகொள்ள வேண்டுகிறேன். ஆரோக்கிய வாழ்வின் இலட்சியங்களுக்கு முரண்பாடில்லா தவரைக்கும் ஆடை விஷயத்தில் தேசாசாரத்தை அனுஷ்டியுங்கள். நல்லதும் உறுதியானதும் இக்காலத்திற்கு பொருந்துவதுமான ஆடையைச் சாதாரனமானதாக இருப்பதையே அனேகர் அணிந்து வருவது போலவே நமது சகோதரிகளும் அணியட்டும். ஆடையணிதலையே சிந்தனை யாக்காதீர்கள். நம்முடைய சகோதரிகள் எளிய முறையிலேயே உடுத்த வேண்டும். மரியாதையான ஆடை உடுத்தி நாணத்தையும் சாந்தத்தையும் உடையவர்களாக விளங்க வேண்டும். இருதயத்தில் மறைந்திருக்கின்ற கிருபையின் அலங்காரம் உடையின் மூலம் உலகினருக்கு வெளிப்பட வேண்டும். CCh 482.3
அணிவதற்கு செளகரியமும், ஆரோக்கியமான அமைப்பையும், மரியாதைப் பொருத்தமும் உடைய ஆடையை உடுத்துவதற்கு உலகில் ஆரம்பம் செய்தால், அது கடவுளுடன் நாம் கொண்டுள்ள தொடர்பிற்கு ஊறு செய்யாது. உலகினர் அவ்வாறு செய்யத் தலைப்பட்டதால், நாம் வேறு விதமாக உடுத்த ஆரம்பிக்க வேண்டியதில்லை. கிறிஸ்துவுடையவர்கள் அவரைப் பின்பற்றிக் கடவுள் திருமொழிக்கிணங்க உடுத்திக்கொள்ள வேண்டும். இதிலே மிதமிஞ்சின போக்குகள் கூடாது. நேர்மையானதோர் போக்கைத் தாழ்மையுடனே கடைப்பிடித்து பிறர் பாராட்டுதலுக்காகவோ கடிந்து கொள்ளுதலுக்காகவோ அப்போக்கில் மாறுதல் செய்யாது, எது சிரமமோ, அது சிரமம் என்பதற்காகவே அதைச் செய்து நிறைவேற்ற வேண்டும். CCh 483.1
முட்டாள்தனமான புதிய மோஸ்தர் ஆடைகளை உடுத்த எண்ணி, அதற்கென்று நேரம் செலவிடாதீர்கள். சுத்தமாகவும் தகுதியாகவும் உடுத்துங்கள். ஆனால் விதவிதமான ஆடை அணிகிறீர்களென்றோ சுத்தமான நல்லுடை அணியவில்லை யென்றோ ஒருவரும் குறை கூற இடம் அளிக்க வேண்டாம். கடவுள் பார்வை உங்கள் பேரில் இருப்பதால் அவரைத் திருப்திபடுத்தவே நீங்கள் ஆடை அணிகிறீர்களென்று விளங்கட்டும். நீங்கள் அவ்வாறு அறிந்திருப்பதாக ஆடையின் தோற்றம் வெளியாக்கட்டும். C. G. 413-415. CCh 483.2