சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-37
விடுமுறை, ஆண்டு விழாக்களில் குடும்ப அலுவல்கள்
உலக முன்மாதிரியைப் பின்பற்றி நமது விடுமுறை நாட்கள் செலவிடப்படலாகாதென நான் கண்டேன். ஆயுனும் விடுமுறை நாட்களைக் கவனமற்ற முறையில் தள்ளி விடுவதும் சரியல்ல, ஏனெனில் நம் பிள்ளைகளுக்கு இது அதிருப்தியைக் கொடுக்கும். தீமைகள் மலிந்த இந்நாட்களில் உலக சிற்றின்பங்களாலும், கிளர்ச்சிகளாலும் கறைப்படும் தீய செல்வாக்குகளுக்கு நம் பிள்ளைகள் ஆளாக ஏதுவாகும்; எனவே, பெற்றோர் அதிக ஆபத்துகரமான பொழுது போக்குகளுக்குப் பதிலாக சில நல்ல காரியங்களைக் கண்டு பிடிப்பார்களாக. அவர்களுடைய நலமும் மகிழ்ச்சியுமே உங்கள் நோக்கம் என்பதை உங்கள் பிள்ளைகள் உணரட்டும். CCh 437.1
உலகிலும் சபையிலும் உள்ளவர்கள் விடுமுறை நாட்களை அனுஷ்டிப்பதினால் இந்த சோம்பலான நாட்கள் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் மிக அவசியமென விசுவாசிக்கும் படி கற்பிக்கப்படுகிறார்கள். ஆனால் அதன் பலன் தீமை நிறைந்ததென வெளிப்படுத்துகிறது. CCh 437.2
இந்நிலைகளை மாற்றும்படி, நாம் விடுமுறை நாட்களைச் சிறுவருக்கும், வாலிபருக்கும் கூடிய அளவு இனிமையாக்க முயன்றிருக்கிறோம். அவிசுவாசிகளின் வீண் உல்லாசப் பொழுது போக்குகளிலிருந்து அவர்களை விலக்குவதே நம் நோக்கம். CCh 437.3
இன்ப நாட்டத்திற்கென செலவிட்ட நாள் முடிந்ததும், இன்பப் பிரியனுக்குக் கிடைத்த திருப்தி எங்கே? கிறிஸ்தவ ஊழியர்களாக மிக மேன்மையான சிற்ந்த பரிசுத்த ஜீவியத்திற்கு அவர்கள் யாருக்கு உதவியிருக்கிறார்கள்? தூதன் எழுதியவைகளை அவர்கள் நோக்கினால், அவர்கள் எவைகளைக் காண்பார்கள்? ஒரு நாள் வீணாயிற்று! அவர்களுடைய சொந்த ஆத்துமாவுக்கு ஒரு நாள் வீணாயிற்று, கிறிஸ்துவின் சேவைக்கான நாள் ஒன்று வீணாயிற்று. ஏனெனில் ஒரு நன்மையும் செய்யப்படவில்லை. வேறு நாட்கள் அவர்களுக்குக் கிடைக்கலாம். ஆனாலும் இழிவான முட்டாள்தனமான சம்பாஷணையில் பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளோடும், ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளகளோடும் செலவழித்த அந் நாள் வீணாயிற்று. CCh 437.4
இதே வாய்ப்புகள் மீண்டும் கிடையாது. அதை விட அந்த விடுமுறை நாளில் மிகச் கடினமான வேலை செய்வார்களாக. அவர்கள் தங்கள் வ்டுமுறை காலத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. நியாத்தீர்ப்பில் அவர்களைக் கலவரப்படுத்தும் ஒரு வீணாக்கிய நாளாக அது நித்தித்திற்குள் கடந்துவிட்டது. CCh 438.1