சபைகளுக்கு ஆலோசனை

171/326

குழந்தைகளின் எண்ணிக்கை

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், எனவே நாம் அவருடைய சொத்துக்களை கையாளுவது பற்றி அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். இதோ, கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் நானும் என்று சந்தோஷமாக தேவனிடம் வரத் தக்கதாக பெற்றோர் அன்பு, விசுவாசம் ஜெபத்தோடு தங்கள் குடும்பத்துக்காக பாடுபடுவார்களாக. CCh 417.3

பெற்றோர் பகுத்தறிவோடு நடந்து, தங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் சரியான கல்வி புகட்டவும், தய் தன் சிசுக்களை சிட்சித்து, தூதர்கள் சங்கத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்த போதிய பலமும் சமயமும் உள்ளவரையிருக்க வேண்டுமெனவும் தேவன் விரும்புகிறார். குடும்பத்திற்க்ம், சமுதாயத்திற்கு பிள்ளைகள் ஆசீர்வாதமாகும்படி, தாய் தன் பாகத்தை தேவ பயத்தோடும் அன்போடும் செய்ய தைரியம் பெற வேண்டும். CCh 418.1

இவைகள் யாவையும் புருஷன் கவனித்து சிந்தித்து, அதிக உழைப்பினால் தாயைப் பாரப்படுத்திக் கலங்க விடக் கூடாது. தன் பிள்ளைகள் தக்க முயற்சி பெறாமலொ போகும் அளவில் தாய் மிக்க சிரமத்திற்குட்படும்படி அவன் அவளை விட்டுவிடக்கூடாது. CCh 418.2

சில பெற்றோர் பெருங் குடும்பத்திற்குத் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற முடியுமா என்ற எண்ணமின்றி, கல்விக்கும் கவனத்திற்கும் பெற்றோரைச் சார்ந்திருக்கும் உதவியற்ற சிசுக்களால் வீட்டை நிரப்பி விடுகிறார்கள். இது தாய்க்கு மட்டுமல்ல, அவளுடைய குழந்தைகளுக்கும் சமுதாயத்துக்கும் விரோதமான விசனிக்கத் தக்க தவறு. CCh 418.3

வருஷா வருஷம் தாயேந்தும் குழந்தை அவளுக்கே பெரும் பாதமமாகும். இது சமுதாய சுபீட்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல, அடிக்கடி நாசப்படுத்தி, வீட்டுக் கஷ்டங்களையும் பெருக்குகிறது. பெற்றோர் அக் குழந்தைகளுக்குச் செலுத்த வேண்டிய கவனம், கல்வி, மகிழ்ச்சி யாவையும் இது கொள்ளை கொண்டு வருகிறது. CCh 418.4

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித திட்டங்கள் செய்யலாமென மிகக் கருத்தாய் சிந்திக்க வேண்டும். பிறருக்குப் பாரமாயிருக்கும்படி குழந்தைக்ளை உலகில் கொண்டு வர யாதொரு உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. CCh 419.1

குழந்தையின் கதி எவ்வளவு அற்ப சொற்பமாய்ச் சிந்திக்கப்படுகிறது! சரீர நாட்டமே மேலிட்டு மனைவிக்கு பாரம் அதிகப்படுகிறது; ஆனால் அவளுடைய சரீர சக்திகள் குன்றி ஆவிக்குரிய வலிமையும் பாதிக்கப்படுகிறது. சிதைந்த ஆரோக்கியத்தோடும், அதைரிய ஆவியோடும் தான் கவனிக்க வேண்டிய சிறு மந்தையைச் சரியாகக் கவனிக்கக் கூடாமலிருப்பதை உணருகிறாள். அவர்கள் தாங்கள் பெற வேண்டிய உபதேசங்களைப் பெறாமல், தேவனுக்கு கனவீனமாக நடந்து, தங்கள் தீய சுபாவத்தைப் பிறருக்குப் பரப்பி, சாத்தான் தன இஷ்டப்படி நடத்தும் சிறு படைகளாக எழுப்பப்படுகின்றனர். A.H. 159-164. CCh 419.2