சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-31
கணவன் மனைவி உறவு முறை
திருமணவுறவு கடவுளது தூய கட்டளையினால் காப்பாற்றப் பெற்ற பரிசுத்த நியமங்களில் ஒன்று என்று மதிக்கின்றவர்கள், பகுத்தறிவின் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பார்கள். CCh 390.1
இயேசு மக்களில் எந்த வகுப்பினரையும் மணஞ் செய்யாமல் இருக்கக் கட்டாயப்படுத்தவில்லை. அவர் தூய்மையுள்ள திருமணவுறவு முறையை அழித்துபோட வரவில்லை; அதை மேன்மைப்படுத்தி அதன் ஆதித் தூய்மைக்கு அதைத் திரும்பக் கொண்டு வரவே வந்தார். தூய்மையும் தன்னலமற்ற அன்புமுடைய குடும்ப உறவுமுறையை அவர் மகிழ்ச்சியுடன் கண்ணேக்குகின்றார். CCh 390.2