சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-30
இன்பமும் வெற்றியுமுள்ள கூட்டு வாழ்க்கை
திருமண உறவிக்குள்ளே பிரவேசிக்கின்ற மக்களுக்குள்ளே சம்பூரண அன்பும் இணக்கமும் இருக்கவேண்டுமென்று கடவுள் நியமித்திருக்கின்றார். பெண்ணும், மாப்பிள்ளையும் கடவுளுடைய சிருஷ்டிகள் அனைத்தின் முன் நிலையில், கடவுள் நியமித்திருக்கின்ற வண்ணம், ஒருவரை யொருவர் நேசிக்கும் படி வாக்களிக்க வேண்டும்; மனைவி தன் கணவனை நன்கு மதித்து பயபக்தியாய் நடந்து கொள்ள வேண்டும்; கணவன் தன் மனைவியை நேசித்து ஆதரிக்க வேண்டும். CCh 382.1
புருஷனும் ஸ்திரீயும் தங்கள் மண வாழ்க்கையின் தொடக்கத்தில் தங்களை கடவுளுக்கு மறுபடியும் பிரதிஷ்டை பண்ண வேண்டும். CCh 382.2
எவ்வளவு கவனமாகவும் விவேகமாகவும் திருமணத்தில் பிரவேசித்திருந்த போதிலும், திருமணச் சடங்கு நடைபெறுகின்ற பொழுது முற்றிலும் இணைக்கப் பெற்ற தம்பதிகள் மிகச் சிலரே ஆவார். மண வாழ்க்கையில் தம்பதிகள் ஐக்கியம் பல்லாண்டுகளுக்கு பின்பு நடக்கின்ற காரியம். CCh 382.3
இல் வாழ்க்கையானது தனக்குரிய திகைப்பும் கவலையுமுள்ள பெருஞ் சுமையுடன் புதிய தம்பதிகளை சந்திக்கின்ற பொழுது, அவர்கள் மனத்தை பெரும்பாலும் கவர்ந்து அவர்களை மண வாழ்க்கையில் இணைபடும்படி செய்த மனக் கோட்டைகள் எல்லாம் மாயமாய் மறைந்து விடுகின்றன. கணவனும் மனைவியும் முன்னே காதலுறவு கொண்டிருந்த காலத்தில் ஒருவர் குணத்தை அடுத்தவர் உள்ளவாறு காணக்கூடா திருந்தமையால், அவற்றை இப்பொழுது கண்டறிகின்றனர். அது அவர்கள் அனுபவத்தில் மில்ல நுணுக்க ஆராய்ச்சிக்குரிய காலம். அவர்களது எதிர்கால வாழ்க்கையின் இன்பமும் பயனும் அவர்கள் இப்பொழுது ஆராய்ந்து தெளியும் தகுதியுள்ள போக்கைப் பொறுத்துள்ளது. பெரும்பாலும் அவர்கள்ல் ஒருவர் அடுத்தவரது ஐயத்திற்கு இடமில்லாத பலவீனங்களையும் குறைபாடுகளையும் வகையறுத்துணர்த்துகின்றனர். ஆயினும் அன்பினால் இணைந்துள்ள உள்ளங்கள் அது வரை அறியப்படாதிருந்த மாட்சிமையான குணங்களையும் வகையறுத்துணர்கின்றன. குறைபாடுகளைக் காட்டிலும் குண மாண்புகளையே கண்டுபிடிக்க யாவரும் வகை தேட வேண்டும். பெரும்பாலும் பிறருடைய பண்பை நமது சொந்த மணப்பான்மையும் சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றன. CCh 382.4
அன்பை வெளிப்படுத்துதல் பலவீனம் என்று எண்ணி ஒதுங்கி வாழ்வது பிறரையும் ஒதுங்கி வாழச் செய்கிறது. இந்த ஆவி அனுதாபத்தைத் தடுத்து விடுகின்றது. சமுதாய உணர்ச்சியும் தயாள சிந்தையும் ஒடுங்கும்பொழுது இருதயம் குளிர்ந்து பாழடைகிறது. இத் தவறு பற்றி நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அன்பு வெளிப்படுத்தல் இல்லாவிடின் நெடுநாள் நிலைத்திராது. உன்னுடன் தொடர்புகொண்ட ஒருவர் உள்ளம் பட்சமும் இரக்கமும் இல்லாமல் இயங்கிக் கிடக்கக்கூடாது. CCh 383.1
ஒவ்வொருவரும் அன்பு வலிந்து பெறுவதைக் காட்டிலும் வலிய அளிக்க வேண்டும். உங்களிடத்திலுள்ள உத்தம குணத்தைப் பண்படுத்தி வளர்த்து, அடுத்தவரிடத்திலுள்ள நற்குணங்களைத் தாமதமின்றி ஒப்புக்கொள்ளுங்கள். பிறர் தம்மைப் பாராட்டுதலால் உண்டாகும் உணர்ச்சி தமக்கு அதிகமான ஊக்கமும் திருப்தியும் நல்குகின்றது. அனுதாபமும் நன்கு மதிப்பும் மாட்சிமையுள்ள குணங்களை நாடும் முயற்சிக்கு ஊக்கம் விளைக்கின்றன; அன்பு சிறந்த மேன்மையுள்ள நோக்கங்களுக்கு ஊக்கம் அளிக்கும் பொழுது தானும் வளர்ந்து பெருகுகின்றது. CCh 383.2