சபைகளுக்கு ஆலோசனை

145/326

விவாகத்திற்குப் பின்பு தன்னந்தனிமையாய் மனந்திரும்பி வருகிறவருக்கு ஆலோசனை

குணப்படுகிறதற்கு முன்னே மணஞ் செய்துகொண்டவர்கள் தம் துணைவர் மத விசுவாசத்தில் எவ்வளவு அதிகமாய் வேறுபட்டிருந்தாலும், தம் குணப்படுதலினால் அவ ருக்கு முன்னிலும் அதிக உண்மையாய் நடந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றார். ஆனால் அதன் பயனாய்ச் சோதனைகளும், உபத்திரவங்களும் வந்தாலும், அவர் கடவுளுக்குரிய தம் கடமைகளை உலக உறவுகள் எல்லாவற்றிற்கும் மேலாய் வைத்துக் கொள்ளவேண்டும். அன்பும் சாந்தமுமுள்ள சிந்தையோடு கூடிய இந்த நேசம் அவிசுவாசியாய் இருக்கிறவரை ஆதாயப்படுத்துக் செல்வாக்கை அடையலாம். A.H. 48, 49, 61-69. CCh 371.2